இந்த தீபாவளிக்கு ஹால்மார்க் நகைகளை மட்டுமே வாங்கவும்: அரசு வேண்டுகோள்
இந்த தீபாவளிக்கு பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே வாங்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த தீபாவளிக்கு பிஐஎஸ் ஹால்மார்க் நகைகளை மட்டுமே வாங்குமாறு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஹால்மார்க் என்பது இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான தரக்குறியீட்டு முறைமை. இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் (BIS) தரக்குறியீடு தங்கம்/வெள்ளி ஆகியவற்றின் தூய்மை அளவுக்கு சான்றிதழ் அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு தங்கப் பொருளின் மீது இருக்கும் BIS தரக்குறியீடு.
இந்திய தேசிய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் கீழுள்ள இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வரையறுத்த தர அளவீடுகளுக்கு உட்பட்டதற்கான சான்றிதழ்.
இந்நிலையில் இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நுகர்வோர் விவகாரத்துறை ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதாவது இந்தப் பண்டிகைக்கு ஹால்மார்க் நகைகளை மட்டுமே வாங்கவும் எனத் தெரிவித்துள்ளது.
நீங்கள் வசிக்கும் மாநிலத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எந்தக் கடைகளில் எல்லாம் பிஐஎஸ் ஹால்மார்க் நகை கிடைக்கும் என்ற விவரத்தை இந்தியத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இணையதளத்தில் பெறலாம்.
கோல்ட் ஹால்மார்க்கிங் என்பது தங்கத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் சான்றிதழ்.
பிஐஎஸ் சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜூலை 1 2021ல் இருந்து 6 இலக்க ஆல்ஃபாநியூமரிக் குறியீடு வழங்கப்படுகிறது. முன்னதாக ஹால்மார்க் நகைகளுக்கு 4 குறியீடு இருந்தது. இப்போது 3 குறியீடுகள் மட்டுமே உள்ளன.
நாட்டில் உள்ள 256 நகரங்களிலும் 14, 18, 22 கேரட் நகைகளிலும் ஹால்மார்க் குறியீடு முக்கியம். இது ஜூன் 23, 2021ல் இருந்து நடைமுறையில் உள்ளது.
இதனால் உற்பத்தியாளர், மொத்த வியாபாரம், சில்லறை வியாபாரம் என யாராக இருந்தாலும் ஹால்மார்க் அடையாளம் இல்லாமல் தங்கத்தை விற்பனை செய்ய முடியாது. அவர் செய்யும் நகைக்கடை உரிமையாளருக்கு நகையின் மதிப்பீட்டிலிருந்து 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நகை விற்பனையாளர்கள் www.manakonline.in என்ற இணையதளத்தின் மூலம் ஹால்மார்க் பதிவு செய்து கொள்ளலாம்.
ஹால்மார்க் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை www.bis.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கட்டாய ஹால்மார்க் நடைமுறையின் மூலம் குறைந்த தரத்தில் தங்க நகைகள் விற்பது தவிர்க்கப்படும். தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் ஏமாறாமல் பாதுகாக்கப்படுவர்.
மேலும் இந்த பண்டிகை காலத்தில் தங்க நகைகளை வாங்கும் போது வாடிக்கையாளர்கள் அவற்றில் பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை இருக்கிறதா என்பதை பூதக் கண்ணாடி கொண்டு சோதித்து கூட வாங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.
நகை என்பது இந்தியாவைப் பொருத்தவரை சேமிப்பாகவே கருதப்படுகிறது. அதனாலேயே நகை வாங்குவதை பண்டிகையை ஒட்டி திட்டமிடும் பழக்கம் இங்குள்ளது.