Udhayanithi: 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு உதயநிதி ரிலீஸ்! திரளாக வரவேற்ற திமுக தொண்டர்கள்!
சர்ச்சைப் பேச்சு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் 10 மணி நேர அலைக்கழிப்புக்கு பிறகு தஞ்சை விடுவிக்கப்பட்டார்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை இன்று தஞ்சை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சையில் நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அவர் மீது தவெக மகளிரணி அளித்த புகாரின்பேரில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு:
இன்று காலை அவர் 10.30 மணிக்கு கைது செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் போலீஸ் வாகனம் மூலமாக கைது தஞ்சைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் கைதை எதிர்த்து திமுக-வினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் வழங்கி அவரை விடுவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
விசாரணை:
நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலினை விசாரணைக்காக தமிழக காவல்துறை அழைத்துச் செல்வதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் வாதம் செய்தது. விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை காவல்துறையினர் நேரடி வழித்தடம் அல்லாமல் பல இடங்களில் சுற்றி சுற்றி அழைத்துச் சென்று மாலை 6.45 மணியளவில் செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
#WATCH | Tamil Nadu LoP and DMK leader Udhayanidhi Stalin greets party cadres as he leaves from Sengipatti Police Station in Thanjavur. He was detained by the Police earlier today, in connection with a case registered over his alleged remarks during a public meeting. pic.twitter.com/jtmOH3vg04
— ANI (@ANI) August 4, 2026
பின்னர், சுமார் ஒன்றே கால் மணி நேர விசாரணைக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் செங்கிப்பட்டி காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். உதயநிதி செங்கிப்பட்டி காவல்நிலையம் வருவதையறிந்த திமுக-வினர் திரளாக அங்கு குவிந்தனர். சுமார் 8 மணிக்கு மேல் காவல்நிலையத்தில் இருந்து வெளியே வந்த உதயநிதிக்கு செங்கிப்பட்டியின் இரு புறமும் சாலையில் திமுக-வினர் கோஷங்கள் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.
10 மணி நேர கட்டுப்பாடு:
காவல் நிலையத்தில் விசாரணை முடிந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு 10 மணிக்கு விமானம் மூலமாக சென்னைக்கு திரும்புகிறார்.இன்று காலை 10.30 மணிக்கு கைது செய்யப்பட்ட உதயநிதி சுமார் 10 மணி நேரம் இன்று முழுவதும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலின் இன்று கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
வியூகம்:
உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அந்த வீடியோக்களை தவெக-வினர் அதிகளவில் பகிரப்பட்டது. உதயநிதியின் பேச்சுக்கு பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். உதயநிதியின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அவரது கைதுக்கும் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வியூகம் வகுத்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















