மேலும் அறிய

Two Wheeler Sales: மார்ச் மாத விற்பனையில் அசத்திய இருசக்கர வாகன நிறுவனங்கள் - முதலிடம் யாருக்கு தெரியுமா?

Two Wheeler Sales: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை எப்படி இருந்தது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Two Wheeler Sales: கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனையில், ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் பெரும் பங்கை ஆக்கிரமித்துள்ளன. 

இருசக்கர வாகன விற்பனை:

இந்தியாவின் இரு சக்கர வாகன விற்பனை,  மார்ச் மாதத்தில் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி என இரண்டிலும் நேர்மறையான ஏற்றத்துடன் வலுவான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. பிரதான 6 இரு சக்கர வாகன உற்பத்தியாளர்கள் அடிப்படையில், ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள்  விற்பனையில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ, சுசுகி மற்றும் ராயல் என்ஃபீல்ட் ஆகிய நிறுவங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

உள்நாட்டில் இருசக்கர வாகன விற்பனை:

உள்நாட்டுச் சந்தைகளில் கடந்தாண்டு மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட 12,26,262 யூனிட்களை விட,  15.24 சதவிகிதம் உயர்ந்து 14,13,152 யூனிட்கள் கடந்த மாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.  அதேநேரம், இது கடந்த பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்ட 14,48,479 யூனிட்களை விட 2.44 சதவிகிதம் குறைவாகும். மீண்டும், இந்த பட்டியலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பிப்ரவரி 2024 இல் விற்பனை செய்யப்பட்ட 4,45,257 யூனிட்கள விட,  3.14 சதவிகிதம் அதிகரித்து 4,59,257 யூனிட்களை விற்பனை செய்து முடலிடம் பிடித்துள்ளது.  ஹோண்டா 2024 பிப்ரவரியில் விற்பனை செய்த 4,13,967 யூனிட்களை விட 13.48 சதவிகித வீழ்ச்சியை கண்டாலும், 3,58,151 யூனிட்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. TVS நிறுவனத்தின் மாத விற்பனை 2.61 சதவிகிதம் சரிந்து 2,60,532 யூனிட்டுகளையும், பஜாஜ் ஆட்டோ மற்றும் சுசுகி ஆகிய இரண்டும் முறையே 1,83,004 யூனிட்கள் மற்றும் 86,164 யூனிட்களை விற்பனை செய்துள்ளன. ராயல் என்ஃபீல்டு நிறுவனம்  66,044 யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளது.

இருசக்கர வாகன ஏற்றுமதி:


பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கடந்த மாதத்தில் உலகளாவிய சந்தைகளுக்கு 1,30,881 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்து இந்த பிரிவில் முதலிடம் கண்டுள்ளது. இது முந்தைய மாதத்தை காட்டிலும் 5.42 சதவிகிதம் அதிகமாகும். ஏற்றுமதி பட்டியல் TVS கடந்த ஆண்டை காட்டிலும் 25.66 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.  ஆனால் மாத விற்பனையில் 7.08 சதவிகிதம் சரிந்து 83,914 யூனிட்டுகளை ஏற்றுமதி செய்துள்ளது. Hero MotoCorp கடந்த மாதத்தில் 31,158 யூனிட்களை ஏற்றுமதி செய்து மாத விற்பனையில் 34.57 சதவிகித வளர்ச்சியுடன் கண்டுள்ளது. சுசுகி நிறுவனம்  17,505 யூனிட்களையும்,  ராயல் என்ஃபீல்டு 9,507 யூனிட்களையும் ஏற்றுமதி செய்துள்ளன.

இருசக்கர வாகன மொத்த விற்பனை:

கடந்த மாதத்தில் இருசக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 17,14,421 யூனிட்களை எட்டியது, அதாவது மார்ச் 2023 இல் விற்கப்பட்ட 14,55,700 யூனிட்களில் இருந்து 17.77 சதவிகிதம் விற்பனை அதிகரித்துள்ளது.  ஆனால் பிப்ரவரி 2024 இல் விற்கப்பட்ட 17,52,985 யூனிட்களை விட 2.20 சதவிகிதம் சரிந்தது. இந்த பட்டியலில் Hero MotoCorp நிறுவனம்  4,90,415 யூனிட்களை விற்பனை செய்து முதலிடத்தில் உள்ளது. அதைதொடர்ந்து ஹோண்டா 3,86,455 யூனிட்களையும்,  TVS 3,44,446 யூனிட்களையும்,  பஜாஜ் ஆட்டோ 3,13,885 யூனிட்களையும்  மற்றும் சுசுகி 1,03,669 யூனிட்களையும்,  ராயல் என்ஃபீல்டு 75,551 யூனிட்களையும் விற்பனை செய்து அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
India Vs America: அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
அமெரிக்காவிற்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா; உலக வர்த்தக மையத்திடம் கூறியது என்ன தெரியுமா?
IND Vs ENG Test: வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
வரலாற்று வெற்றியை சுவைக்குமா இந்திய அணி.? இங்கிலாந்துக்கு 608 ரன்கள் இலக்கு - சாதிப்பாரா சுப்மன் கில்.?
Shubman Gill Record: கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
கலக்கிட்டீங்க கேப்டன்.!! இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த சுப்மன் கில்
America Vs Russia Vs Ukraine: போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
போரை நிறுத்த விரும்பாத ரஷ்யா; ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு - உக்ரைனுக்கு அடித்த யோகம்
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Aadhar Card: ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, அட்ரஸ் மாத்தனுமா? அத்தனை கேள்விக்கும் பதில் உள்ளே!
Thackeray Brothers Reunite: 20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
20 ஆண்டுகளாக பிரிவு; தாக்கரே சகோதரர்களை இணைத்த மொழிப்பற்று - மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்?
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
Aadhar: ஆதார் கார்டை தொலைச்சிட்டீங்களா? வீட்டில் இருந்தபடியே வாங்க இதுதான் ஈஸி வழி!
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
கத்துக்குட்டிகள் எல்லாம் கற்றுத் தர வேண்டாம்... அமைச்சர் கோவி.செழியன் வைத்த குட்டு யாருக்கு?
Embed widget