TVS Super Squad: மார்வெல் ரசிகர்களுக்கான டிவிஎஸ் பைக்.. சூப்பர் ஸ்குவாட் பெயரில் ரைடர் 125 மோட்டார் சைக்கில் அறிமுகம்
மார்வெல் ரசிகர்களை கவரும் விதமாக டிவிஸ் நிறுவனம் சூப்பர் ஸ்குவாட் என்ற பெயரில், ரைடர் 125 மோட்டார் சைக்கிளின் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மார்வெல் ரசிகர்களை கவரும் விதமாக டிவிஸ் நிறுவனம் சூப்பர் ஸ்குவாட் என்ற பெயரில், ரைடர் 125 மோட்டார் சைக்கிளின் புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மார்வெல் நிறுவனம்:
பல்வேறு விதமான சூப்பர் ஹீரோக்களை கொண்டு உலகை காப்பற்றும் கதைக்களத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மார்வெல். கடந்த 2008ம் ஆண்டு திரைப்பட உலகில் தனது பயணத்தை தொடங்கிய அந்த நிறுவனம், இன்ஃபினிட்டி சாகா எனும் பெயரில் 20-க்கும் அதிகமான படங்களை வெளியிட்டு, அதன் உச்சகட்டமாக கடந்த 2018ம் ஆண்டு அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தை வெளியிட்டது. அதைதொடர்ந்து தற்போது மல்டிவெர்ஸ் சாகா என்ற பெயரில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை மார்வெல் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த படங்களின் அடிப்படையில் பொம்மைகள், உடைகள் போன்ற பல்வேறு சாதனங்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு சர்வதேச சந்தையில் நல்ல வரவேற்பும் உள்ளது.
சூப்பர் ஸ்குவாட்:
இந்நிலையில் தான், மார்வெல் கதாபாத்திரங்கள் அடிப்படையில் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் யுக்தியை, இந்தியாவை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமாக டிவிஸ் தொடங்கியுள்ளது. அதன்படி, சூப்பர் ஸ்குவாட் என்ற பெயரில் ரைடர் 125 பைக்குகளின் இரண்டு புதிய வேரியண்ட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை மார்வெல் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான ஐயன் மேன் மற்றும் பிளாக் பேந்தர் ஆகிய கதாபாத்திரங்களின் பெயின்ட் தீம்களில் கிடைக்கிறது. அதாவது ஒரு மாடல் ரெட், பிளாக் மற்றும் கோல்டு வண்ணங்களிலும், மற்றொரு மாடல் பர்பில் மற்றும் பிளாக் வண்ணங்களிலும் பெயின்ட் செய்யப்பட்டு உள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
டி.வி.எஸ். ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலின் விலை இந்திய சந்தையில் ரூ. 98 ஆயிரத்து 919, என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில், ரைடர் 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் மாடலிலும் 124.8சிசி சிங்கில் சிலின்டர் இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இன்ஜின் 11.2 ஹெச்.பி. பவர் மற்றும் 11.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதேநேரம், ஸ்டேண்டர்ட் வேரியண்டிலிருந்து புதிய வேரியண்டில் டிசைன், அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் எதிலும் எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.
சிறப்பம்சங்கள்:
ரைடர் 125 மாடல் SX,ஸ்ப்லிட் சீட் மற்றும் சிங்கில் சீட் என மூன்று விதமான வேரியன்ட்களில் கிடைக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் எல்.ஈ.டி. இலுமினேஷன், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்த யூனிட்-இல் ஸ்பீடோமீட்டர், ஒடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃபியூவல் லெவல், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. புதிய மாடலிலும் எல்.ஈ.டி. முகப்பு விளக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் முன்புறத்தில் டிஸ்க் பிரேக், பின்புறம் டிரம் பிரேக் யூனிட் இடம்பெற்றுள்ளது.