TVS Radeon 110: 700 கி.மீ வரை ஓடும் குறைந்த விலையில் அசத்தல் மைலேஜ்! தினசரி பயணத்திற்கு ஏற்ற பைக்! முழு விபரம்!
TVS Radeon 110: ஒரு முறை டேங்கை நிரப்பினால், சுமார் 700 கிலோமீட்டருக்கு மேல் ஓட்ட முடியும் என்று சொல்ப்படுகிறது

இந்திய இரு சக்கர வாகன சந்தையில், தொடர்ந்து பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், TVS மோட்டார் நிறுவனத்தின் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் நாடு முழுவதும் பிரபலமாக உள்ளன.
அந்த வகையில், தற்போது அதிக கவனம் ஈர்த்திருக்கும் மாடல் TVS ரேடியான் 110 பைக். இந்த பைக் அதன் ஸ்டைலான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப அம்சங்கள், வலுவான பில்ட் குவாலிட்டி மற்றும் சிறந்த மைலேஜ் என அனைத்தையும் ஒரே போக்கில் வழங்குகிறது. குறிப்பாக, தினசரி அலுவலக பயணம், சிறிய தூர ஓட்டம் மற்றும் குடும்ப பயணத்திற்கும் ஏற்ற வகையில், குறைந்த விலையில் இந்த பைக் ஏற்கனவே சந்தையில் இடம் பிடித்து வருகிறது.இந்த பைக்கின் மைலேஜ் மற்றும் விலை என்ன என்பதை காணலாம்.
விலை விவரம்:
TVS ரேடியான் 110 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,880 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாடல் மற்றும் மாநிலத்தின்படி விலை மாற்றம் இருக்கும். சென்னையில் இதன் ஆன் ரோட் விலை 90,000 வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது,
தினசரி பயணத்திற்கு சிறந்த தேர்வு:
வீட்டிலிருந்து அலுவலகம் அல்லது சுருக்கமான பயணங்களுக்காக நல்ல மைலேஜ் வழங்கும் பைக்கை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், TVS ரேடியான் 110 உங்களுக்கு சிறந்த விருப்பமாக இருக்கும். இந்த பைக் நான்கு வெவ்வேறு வகைகளில் கிடைக்கிறது..
சிறப்பம்சங்கள் என்னென்ன?
டிவிஎஸ் ரேடியான் 109.7 சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த எஞ்சின் 7,350 ஆர்பிஎம்மில் 8.08 பிஎச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இந்த பைக்கின் எஞ்சின் 4-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த TVS பைக்கின் மைலேஜ் எவ்வளவு?
ARAI சோதனை அடிப்படையில், இந்த பைக்கின் மைலேஜ் லிட்டருக்கு 73 கிமீ என தெரிவிக்கப்படுகிறது. இது வெறுமனே கிராம பகுதியில் மட்டும் அல்லாது, நகர சாலைகளிலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 10 லிட்டர், எனவே ஒரு முறை டேங்கை நிரப்பினால், சுமார் 700 கிலோமீட்டருக்கு மேல் ஓட்ட முடியும் என்று சொல்ப்படுகிறது
பாதுகாப்பு அம்சங்களில், ரேடியான் 110 பைக்கில் ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம் (CBS) வழங்கப்பட்டுள்ளது. இது திடீர் பிரேக்கிங் சமயங்களில் தடைகளை சுலபமாக சமாளிக்க உதவும். மேலும், 18 அங்குல அலாய் வீல்கள், வலுவான ஷாக் அப்ஸார்பர்கள் மற்றும் ஸ்டைலான ஹெட்லைட் டிசைன் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பைக் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது, ஆனால் இதில் ஆல் பிளாக் எடிஷன் தான் தற்போது அதிகமாக விற்பனை ஆகிறது.






















