மேலும் அறிய

சந்தைக்கு வந்தது Zelio X-Men+ இ ஸ்கூட்டர்! சீனியர் சிட்டிசன்களே இனி உங்க டைம்!

Zelio நிறுவனம் தங்களது புதிய மின்சார ஸ்கூட்டரான Zelio X-Men+ ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஓலா, ஏதர் நிறுவனங்கள் இ ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருந்து வரும் நிலையில், டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களும் இ வாகனங்களைத் தயாரித்து வருகின்றன.

Zelio X-Men+:

இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனம் Zelio. இவர்கள் தங்களது புதிய இ ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களது புதிய படைப்பாக Zelio X-Men+ இ ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

நகர்ப்புறங்களில் நெருக்கடியான போக்குவரத்தில் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் இந்த இ ஸ்கூட்டரை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய Zelio X-Men+ இ ஸ்கூட்டர் 120 கிலோமீட்டர் வரை மைலேஜ் அளிக்கிறது. இந்த ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 25 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 

சார்ஜிங் நேரம்:

இந்த ஸ்கூட்டர் முதியவர்கள், 50 வயதைக் கடந்தவர்கள், பெண்கள் ஆகியோரை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் அதிகபட்ச வேகமாக 25 கிலோமீட்டரே அளிக்கப்பட்டுள்ளது. இந்த இ ஸ்கூட்டரில் 12 இன்ச் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த Zelio X-Men+  மின்சார ஸ்கூட்டர் 1.5 யூனிட் சார்ஜிங் திறன் கொண்டது.

இந்த Zelio X-Men+ ஸ்கூட்டரில் 180 கிலோ எடை வரை சுமந்து செல்லலாம். முன்பக்கம் டிஸ்க் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் ப்ரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அலாய் ரிம்கள் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. 60/72 வாட்ஸ் பிஎல்டிசி மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. லித்தியம் மற்றும் லீட் பேட்டரிஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது.  இதன் லித்தியம் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 4 முதல் 5 மணி நேரமும், இதன் லீட் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 8 முதல் 10 மணி நேரமும் ஆகிறது. 

சிறப்புகள்:

இதில் ரிவர்ஸ் கியர், டிஜிட்டல் டிஸ்ப்ளே, பார்க்கிங் சுவிட்ச், ஆன்டி தெஃப்ட் அலா்ம், யுஸ்பி சார்ஜிங், சென்ட்ரல் லாக்கிங், ஆட்டோ ரிப்பேர் சுவிட்ச் வசதிகள் உள்ளது. பேட்டரிக்கு ஒரு வருட வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. 

2021ம் ஆண்டு முதல் இந்திய சந்தையில் இயங்கி வரும் Zelio இ ஸ்கூட்டர் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல்வேறு படைப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இவர்களுக்கு நாடு முழுவதும் 2 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். குறைந்த வேகத்தில் வீட்டின் அருகிலே சென்று வருவதற்கு ஏற்ற ஒரு ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டர் உள்ளது. இதன் தோற்றம் வசீகரமாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
ஒரே சார்ஜில் 440 கி.மீட்டர் மைலேஜ்.. அறிமுகமாகியது Skoda Epiq Sportline மின்சார கார்!
Kia Seltos: வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
வந்தாச்சு கியா செல்டோஸ் ஹைப்ரிட்..! புதுசா என்ன இருக்கு? டிசைன் எப்படி? வசதிகள், அம்சங்கள் ஈர்க்குமா?
Hyundai Bayon: இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
இந்தியாவிற்கான ஹுண்டாய் பேயோன் எப்படி இருக்கு? புக்கிங் ஸ்டார்ட் - லாஞ்சிற்கு முன்பான அப்டேட்ஸ்
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget