TVS iQube Discount: ரூ.22 ஆயிரம் ஆஃபர்.. சிங்கிள் சார்ஜில் 212 கி.மீட்டர் செல்லும் TVS iQube விலை இவ்ளோதானா!
TVS iQube இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 22 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது.இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய இரு சக்கர வாகன சந்தையில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்துக் கொண்ட நிறுவனம் டிவிஎஸ். தற்போது உலகளவில் பெட்ரோல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் நிறுவனங்களும் அந்த தயாரிப்பில் களமிறங்கியுள்ளனர்.
22 ஆயிரம் தள்ளுபடி:
அந்த வகையில், டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் படைப்பு TVS iQube. தரத்திலும், மைலேஜிலும் வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற்ற இந்த TVS iQube இ ஸ்கூட்டருக்கு இதன் விலையில் இருந்து 22 ஆயிரம் ரூபாய் வரை நேரடி தள்ளுபடி அளித்துள்ளனர். 5 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி வரி கொண்ட இந்த TVS iQube இ ஸ்கூட்டருக்கு 22 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி அளித்திருப்பது வாடிககையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது,
TVS iQube இ ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் 1.03 லட்சத்து 520 ஆகும். இது எக்ஸ் ஷோ ரூம் விலை. தற்போது இந்த விலையில் இருந்து 22 ஆயிரம் தள்ளுபடி அளிக்கப்படுவதால் ரூபாய் 81 ஆயிரமாக இந்த TVS iQube இ ஸ்கூட்டர் விலை உள்ளது.
இத்தனை வேரியண்ட்களா?

இந்த இ ஸ்கூட்டர் 2.2 கிலோ வாட் பேட்டரி, 3.1 கிலோ வாட் பேட்டரி, 3.5 கிலோ வாட் பேட்டரி மற்றும் 5.3 கிலோவாட் பேட்டரியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 2.2 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட அடிப்படை மாடல் 94 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இது 2.45 மணி நேரத்தில் சார்ஜ் ஏறிவிடும். மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது.
3.1 கிலோவாட் பேட்டரி கொண்ட இந்த TVS iQube இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 123 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். மணிக்கு 82 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். 80 சதவீத சார்ஜ் செய்வதற்கு 4.03 மணி நேரம் ஆகும்.
3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்டிருந்தால் அதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 145 கி.மீட்டர் வரை செல்லலாம். மணிக்கு 78 கி.மீட்டர் வேகத்திற்கு செல்லும். 80 சதவீதம் வரை சார்ஜிங் செய்வதற்கு 4 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும்.
212 கி.மீட்டர்:
5.5 கிலோ வாட் பேட்டரி கொண்ட TVS iQube இ ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 212 கி.மீட்டர் வரை பயணிக்கலாம். மணிக்கு 82 கி.மீட்டர் வேகத்திற்குச் செல்லும் ஆற்றல் கொண்டது ஆகும். 80 சதவீதம் சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் 50 நிமிடங்கள் ஆகும்.
ஓலா, ஏதர் போன்ற நிறுவனங்கள் இ ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருந்தாலும் டிவிஎஸ்-சின் TVS iQube இ ஸ்கூட்டர் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த இ ஸ்கூட்டர் வெள்ளை, நீலம், சாம்பல், கருநீலம் என பல வண்ணங்களில் உள்ளது. 
விலை:
2.2. கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட TVS iQube ன் விலை ரூபாய் 1 லட்சத்து 3 ஆயிரத்து 520 ஆகும். 3.1 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட வண்டியின் விலை ரூபாய் 1.20 லட்சம் ஆகும். 3.5 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட இ ஸ்கூட்டரில் இரண்டு வேரியண்ட் உள்ளது. ஒன்றின் விலை ரூபாய் 1.25 லட்சம் ஆகும். மற்றொன்றின் விலை ரூபாய் 1.35 லட்சம் ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 212 கி.மீட்டர் வரை செல்லும் 5.3 கிலோவாட் பேட்டரி பொருத்தப்பட்ட TVS iQube ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 64 ஆயிரத்து 218 ஆகும்.





















