மேலும் அறிய

Toyota Glanza: பாதுகாப்பு பரிசோதனை - 0 ஸ்டார் வாங்கி அதிர்ச்சி அளித்த டொயோட்டா கார் - என்ன பிரச்னை?

Toyota Glanza Crash Test: டொயோட்டா க்ளான்ஸாவின் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி எடிஷனான ஸ்டார்லெட், பாதுகாப்பு பரிசோதனையில் 0 ஸ்டார் வாங்கி அதிர்ச்சி அளித்துள்ளது.

Toyota Glanza Crash Test: டொயோட்டா க்ளான்ஸாவின் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி எடிஷனான ஸ்டார்லெட், சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் மிகவும் மோசமான புள்ளிகளை ஈட்டியுள்ளது.

பாதுகாப்பில் சொதப்பிய க்ளான்ஸா ஃபாரின் எடிஷன்:

தென்னாப்ரிக்காவிற்கான டொயோட்டா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் மாடலான, ஸ்டார்லெட் அண்மையில் சர்வதேச பாதுகாப்பு பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக பூஜ்ஜிய ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அதிர்ச்சி அளித்துள்ளது. இந்திய சந்தையில் க்ளான்ஸா என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் காரின் ஏற்றுமதி எடிஷன் தான் ஸ்டார்லெட் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஏற்றுமதி எடிஷனில் அதிக சக்திவாய்ந்த 105PS, 1.5L நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்டார்லெட் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு தென்னாப்ரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உள்ளூரில் மாருதி பலேனோவின் ரீபேட்ஜ்ட் வெர்ஷனான க்ளான்ஸா மாடலானது, பாரத் தேசிய பாதுகாப்பு பரிசோதனையில் 4 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு பரிசோதனை விவரங்கள்:

பெரியவர்களுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் 34 புள்ளிகளில் ஒரு புள்ளியை கூட ஸ்டார்லெட் பெறவில்லை. அதேநேரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு பரிசோதனையில் 49 புள்ளிகளில் 29.33 புள்ளிகளை ஈட்டி 3 ஸ்டாரை பெற்றுள்ளது. சோதனைக்கு உட்படுத்தப்பட்ட கார் மாடலானது பாதுகாப்பிற்காக இரட்டை ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், அனைத்து இருக்கைகளுக்கும் சீட்பெல்ட் ரிமைண்டர்கள், குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள், ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர்களுக்கான சீட் பெல்ட் ப்ரிடென்ஷனர்கள் ஆகிய அம்சங்களை கொண்டிருந்தது. இந்தியாவிற்கான க்ளான்ஸா கார் மாடலில் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர் பேக்குகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை 6 ஏர்பேக்குகள் வழங்கி இருந்தால், ஸ்டார்லெட் சற்றே ஏற்றுக்கொள்ளத்தக்க பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று இருக்க முடியும்.


Toyota Glanza: பாதுகாப்பு பரிசோதனை - 0 ஸ்டார் வாங்கி அதிர்ச்சி அளித்த டொயோட்டா கார் - என்ன பிரச்னை?

பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனை:

முன்பக்க தாக்கத்தின் போதான பாதுகாப்பு சோதனையில், ஸ்டார்லெட் காரானது ஓட்டுநரின் கழுத்து மற்றும் இடது கால் முட்டிக்கு நல்ல பாதுகாப்பை வழங்கியது. ஓட்டுநரின் தலை, மார்பு மற்றும் வலது கால் முட்டிக்கான பாதுகாப்பு போதுமானதாக இருந்துள்ளது. முன்பக்கப் பயணிக்கு, தலை மற்றும் கழுத்துப் பாதுகாப்பு நல்லது நிலையிலும், மார்பு மற்றும் கால் முட்டிப் பாதுகாப்பு போதுமானதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த ஹேட்ச்பேக்கானது ஓட்டுநர் மற்றும் உடன் பயணிப்பவர் ஆகிய இருவரின் தொடைகளுக்கும் சராசரி பாதுகாப்பை மட்டுமே வழங்கியுள்ளது. ஓட்டுநரின் பாதங்களுக்கான பாதுகாப்பும் சராசரியாகவே இருந்துள்ளது. மேலும், அதனுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பாடிஷெல் நிலையற்றது என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாகனம் போது நகரும்போதே பக்கவாட்டில் ஏற்படக்கூடிய தாக்கம் தொடர்பான சோதனையில், ஸ்டார்லெட் வாகனமானது இடுப்புப் பகுதிக்கு நல்ல பாதுகாப்பையும், வயிற்றுப் பகுதிக்கு போதுமான பாதுகாப்பையும், தலை மற்றும் மார்புப் பகுதிகளுக்கு மோசமான பாதுகாப்பையும் வழங்கியது. வாகனத்தின் பக்கவாட்டில் தலை பாதுகாப்பு ஏர்பேக்குகள் இல்லாததால், அது தொடர்பான சோதனை நடத்தப்படவில்லை.


Toyota Glanza: பாதுகாப்பு பரிசோதனை - 0 ஸ்டார் வாங்கி அதிர்ச்சி அளித்த டொயோட்டா கார் - என்ன பிரச்னை?

குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனை:

18 மாத குழந்தைக்கான மாதிரி பொம்மை கொண்டு, சிறுவர்களுக்கான பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.  ஸ்டார்லெட் முன்பக்க மோதல் சோதனையில் அதிகபட்சம் 8 புள்ளிகளுக்கு 6.71 புள்ளிகளையும், பக்கவாட்டு மோதல் சோதனையில் 4-க்கு 4 முழுப் புள்ளிகளையும் பெற்றது. 3 வயதுக் குழந்தைக்கான மாதிரிப் பொம்மையை கொண்டு சோதனையை நடத்தியபோது, இந்த ஹேட்ச்பேக்கானது முன்பக்க மோதல் சோதனையில் 8-க்கு 2.81 புள்ளிகளையும், பக்கவாட்டு மோதல் சோதனையில் 4-க்கு 0 புள்ளிகளையும் பெற்றது. குழந்தை பாதுகாப்பு அமைப்பு (CRS) நிறுவல் மதிப்பீட்டில், ஸ்டார்லெட் 12 புள்ளிகளுக்கு 10.81 புள்ளிகளைப் பெற்றது. இருப்பினும், வாகன மதிப்பீட்டு மதிப்பெண்ணில் அதிகபட்சம் 13 புள்ளிகளுக்கு 5 புள்ளிகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
Kia Sorento Booking: Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
Fortuner-க்கு பாயாசத்தை போடுமா Sorento.? பவர்ஃபுல் ஹைப்ரிட் SUV-ன் புக்கிங்கை தொடங்கிய கியா
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Embed widget