Budget Cars: டொயோட்டா ஃபார்ச்சூனருக்கே டஃப் கொடுக்கும் பட்ஜெட் கார்கள் - டாப் 5 லிஸ்ட் இதோ..!
Budget Cars: டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு இணையான அதிகபட்ச வேகத்தை கொண்ட, டாப் 5 பட்ஜெட் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
Budget Cars: டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் அதிகபட்சமாக, மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.
டொயோட்டா ஃபார்ச்சூனர்:
டொயோட்டா ஃபார்ச்சூனர் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில், ஏணி ஃப்ரேமை கொண்ட ஒரு சிறந்த எஸ்யுவி கார் மாடல் ஆகும். இது சக்தி வாய்ந்த 2.8லிட்டர் டீசல் இன்ஜினை கொண்டுள்ளது. அதிலிருந்து 201bhp ஆற்றலை வெளிப்படுத்தி வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்கிரது. அதிகபட்சமாக மணிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த காரை செலுத்த முடியும். இதன் விலை ரூ.33.43 லட்சத்தில் தொடங்கி ரூ. 51.44 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்ச விலை இந்த காரை பிரீமியம் ஆக்கும் நிலையில், மலிவு விலையிலேயே ஃபார்ச்சூனர் மாடலுக்கு இணையான அதிகபட்ச வேகத்தை கொண்டுள்ள கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஃபார்ச்சூனருக்கே டஃப் கொடுக்கும் பட்ஜெட் கார்கள்:
ஹுண்டாய் வெர்னா:
ஹூண்டாய் வெர்னா பயனாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்கும் மாடலாக மாறியுள்ளது. இது 1.5L NA பெட்ரோல் அல்லது 157 bhp 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக இந்த காரை மணிக்கு 210 கிமீ வேகத்தில் செலுத்த முடியும். ஹூண்டாய் வெர்னாவின் ஆரம்ப விலை ரூ.11.00 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்யூவி:
மஹிந்திரா எக்ஸ்யூவி 700 குறுகிய காலத்திலேயே இந்தியாவில் மிகவும் பிரபலமான எஸ்யூவிகளில் ஒன்றாக மாறியுள்ளது. இது 200 bhp ஆற்றலை உருவாக்கும் 2.0L டர்போ பெட்ரோல் அல்லது 185 bhp ஆற்றலை உருவாக்கும் 2.2L டீசல் இன்ஜினைக் கொண்டுள்ளது, இந்த காரை அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தில் செலுத்த முடியும். XUV700 ஆரம்ப விலை ரூ.13.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா குஷாக்:
ஸ்கோடா குஷாக் மற்றொரு சிறந்த சிறிய எஸ்யூவி மாடலாகும். இது பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகவும் உள்ளது. இதில் 1.0லி டர்போ பெட்ரோல் அல்லது 1.5லி டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. 1.0லி அதிகபட்சமாக மணிக்கு 185 கிமீ வேகத்தையும், 1.5லி அதிகபட்சமாக மணிக்கு 195 கிமீ வேகத்தையும் எட்டும். குஷாக் ஆரம்ப விலை ரூ.11.89 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா ஸ்லாவியா:
ஸ்கோடா ஸ்லாவியா குஷாக்கின் அதே ஃபிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டது. 1.0L டர்போ பெட்ரோல் அல்லது 1.5L டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. ஸ்கோடா ஸ்லாவியா 1.0லி வேரியண்ட்டுக்கு அதிகபட்சமாக மணிக்கு 190 கிமீ வேகத்தையும் மற்றும் 1.5லி வேரியண்ட்டுக்கு அதிகபட்சமாக மணிக்கு 200 கிமீ வேகத்தையும் எட்டும். ஸ்லாவியாவின் ஆரம்ப விலை ரூ.11.53 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் விர்டஸ்:
ஃபோக்ஸ்வேகன் விர்டஸ் 1.0லி டர்போ பெட்ரோல் அல்லது 1.5லி டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. 1.0L மாறுபாட்டிற்கு அதிகபட்சமாக மணிக்கு 190கிமீ வேகத்தையும் மற்றும் 1.5L மாறுபாட்டிற்கு அதிகபட்சமாக மணிக்கு 200கிமீ வேகத்தையும் எட்டும். விர்டஸின் ஆரம்ப விலை ரூ.11.55 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.