Ola Electric Scooter : ரூ. 80,000-க்கு குறைவான விலையில் புதிய ஓலா ஸ்கூட்டர்: தீபாவளி அறிமுகம்.. நோட் பண்ணுங்கப்பா..
ஸ்கூட்டரின் செயல்பாடுகள் S1 மாடல் போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நிறுவனத்தின் MoveOS மென்பொருளை இந்த மாடலும் தொடர்ந்து பயன்படுத்தும்.

பவிஷ் அகர்வாலின் ஓலா எலக்ட்ரிக் இந்தியாவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, இது ஓலாவின் மாடலான S1 டிசைனின் குறைந்த விலை வடிவமைப்பாக இருக்கும். ஆதாரங்களின்படி, புதிய ஸ்கூட்டர் ரூ. 80,000 க்கும் குறைவாக சந்தைக்கு வருகிறது, இது நாட்டின் மிகவும் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும் இ-ஸ்கூட்டர்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஸ்கூட்டரின் செயல்பாடுகள் S1 மாடல் போன்றே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் நிறுவனத்தின் MoveOS மென்பொருளை இந்த மாடலும் தொடர்ந்து பயன்படுத்தும்.
கடந்த ஆண்டு, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் s1 ரக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ரூ.99,999க்கு (எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம்களில் தொடக்க விலையில்) அறிமுகப்படுத்தியது.
Planning something BIG for our launch event this month! Will accelerate the #EndICEAge revolution by at least 2 years.
— Bhavish Aggarwal (@bhash) October 6, 2022
Really excited 😉
நிறுவனத்தின் தற்போதைய தயாரிப்புகளான Ola S1 மற்றும் S1 Pro, மிகவும் மேம்பட்ட ஸ்கூட்டர்களாக நிலைநிறுத்தப்பட்டு, இசைக்கோர்ப்பு, மேப்பிங், யூசர் சப்போர்ட் மற்றும் ரிவர்ஸ் யூஸேஜ் போன்ற மிகவும் பிரபலமான MoveOS அம்சங்களை உள்ளடக்கி சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் ஒரு சார்ஜில் 500 கிமீ ஓட்டும் திறன் கொண்ட எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஓலா ஒரு நாளைக்கு 1,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்வதாகக் கூறுகிறது, இருப்பினும், சாஃப்ட்பேங்க் ஆதரவுடன் இயங்கும் ஓலா எலக்ட்ரிக்கால் தயாரிக்கப்பட்ட மின்சார ஸ்கூட்டர்களில் ஏற்படும் தீ விபத்துக்கள் சில வாங்குபவர்களிடையே பாதுகாப்பு குறித்த கவலையை எழுப்பியுள்ளன.
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை வேகத்தை எட்டியுள்ளது, ஆனால் ஓரிரு தீ விபத்துகள் இந்த வகை வாகனங்களை வாங்குபவர்களை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. ஓலாவின் பிரபலமான கருப்பு நிற S1 ப்ரோ ஸ்கூட்டர் ஒன்று புனேவின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான தெருவில் அண்மையில் பெரிய அளவில் தீ விபத்துக்குள்ளானது மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது
பெரும்பாலான மக்கள் இன்னும் நெரிசலான இந்திய சாலைகளில் பெட்ரோல் விலை கட்டுப்படி ஆகவில்லை என்றாலும் வேறு வழியில்லாத காரணத்தால் மோட்டார் சைக்கிள்களில் பயணிக்கின்றனர். இந்த இக்கட்டை மாற்றும் ஆயுதமாக மின்சார ஸ்கூட்டர்கள் பார்க்கப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

