RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Royal Enfield Shotgun 650: ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு முன்பு அறிய வேண்டிய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Royal Enfield Shotgun 650: ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு முன்பு அறிய வேண்டிய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650:
ராயல் என்ஃபீல்டின் ஷாட்கன் 650 மாடலானது சூப்பர் மீடியோர் ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட, பாபர் ஸ்டைல் அடிப்படையிலான பைக்காகும். ஆனாலும், இதில் ஏராளமான வித்தியாசங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிளை வாங்குவதற்கு முன்பு அறிய வேண்டிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஷாட்கன் 650 குறித்து அறிய வேண்டியவை:
1. ஷாட்கன் 650 - பவர்ட்ரெயின்
ஷாட்கன் 650 மோட்டார் சைக்கிளில் 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்ட, 47hp மற்றும் 52Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 649cc, பேரலல்-ட்வின், ஏர்/ஆயில்-கூல்ட் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மைலேஜ் சூழலுக்கு ஏற்ப மாறுபட்டாலும், லிட்டருக்கு சுமார் 23 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது.
2. சூப்பர் மீடியோர் 650 Vs ஷாட்கன் 650 - வித்தியாசம்
ஷாட்கன் சூப்பர் மீடியோரின் ப்ளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டாலும், இது ஏராளமான வித்தியாசங்களை கொண்டுள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்கவை வெவ்வேறு சக்கர அளவுகள் ஆகும். அதனபடி ஷாட்கன்னில் 18-இன்ச்/17-இன்ச் முன் மற்றும் பின்புற சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் சூப்பர் மீடியோரில் 19-இன்ச்/16-இன்ச் கலவையின் பாரம்பரிய க்ரூஸர் அமைப்பு இடம்பெற்றுள்ளன. இது 13.8 லிட்டர் அளவிலான வித்தியாசமான எரிபொருள் டேங்கை கொண்டுள்ளது. இது மீடியோரை காட்டிலும் சுமார் 2 லிட்டர் குறைவாகும். ஷட்கன்னின் இருக்கை உயரம் 795 மிமீ ஆக மிகவும் அணுகக்கூடியது, ஆனால் சூப்பர் மீடியோரில் இருக்கை உயரம் 740 மிமீ மட்டுமே ஆகும்.
3. ஷாட்கன் 650 எடை என்ன?
ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650 பைக்கின் எடை 240 கிலோ, இது தற்போது விற்பனையில் உள்ள மிகவும் கனமான RE 650 பைக்கான கிளாசிக் 650 ட்வின் பைக்கை விட சுமார் 3 கிலோ குறைவாகும்.
4. ஷாட்கன் 650 பைக்கில் முழு LED விளக்குகள் உள்ளதா?
இல்லை, ஷாட்கன் 650 எல்இடி ஹெட்லைட் மற்றும் டெயில்-லைட்டைப் பெற்றுள்ளது. ஆனால் இன்டிகேட்டர்கள் தொடர்ந்து பல்பைப் பயன்படுத்துகின்றன.
5. ஷாட்கன் 650 பைக்கில் டிரிப்பர் நேவிகேஷன் பாட் உள்ளதா?
ஆம், ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650 ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் வசதி ஸ்டேண்டர்டாக வழங்கப்படுகிறது.
6. ஷாட்கன் 650 வண்ண ஆப்ஷன்கள்
ராயல் என்ஃபீல்ட் ஷாட்கன் 650 4 வண்ணங்களில் கிடைக்கிறது. அவை சாம்பல், பச்சை, நீலம் மற்றும் வெள்ளை ஆகும்
7. ஜிஎஸ்டி 2.0 க்குப் பிறகு ஷாட்கன் 650 இன் விலை என்ன?
ஷாட்கன் 650 விலை ரூ.3.94 லட்சத்திலிருந்து ரூ.4.09 லட்சமாக உயர்கிறது, அதாவது ஜிஎஸ்டி திருத்தத்திற்குப் பிறகு ரூ.28,000 வரை விலை உயர்ந்துள்ளது.
8. ஷாட்கன் 650 இன் போட்டியாளர்கள் யார்
ஷாட்கன் 650 மாடலுக்கு ராயல் என்ஃபீல்டின் மற்ற வாகனங்களான சூப்பர் மீடியோர் 650, இண்டர்செப்டர் 650 மற்றும் க்ளாசிக் 650 ஆகியவையே பிரதான போட்டியாளர்களாக உள்ளன.





















