Sierra EV Vs XUV.e8 : மஹிந்த்ராவிற்கு உண்மையில் டஃப் கொடுக்குமா டாடா? சியாரா Vs XUV.e8 - ரேஞ்ச், டிசைன், வசதி
Tata Sierra EV Vs Mahindra XUV.e8: மஹிந்த்ராவின் XUV.e8 கார் மாடலின் போட்டியை, டாடா சியாரவின் மின்சார எடிஷன் சமாளிக்குமா? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

Tata Sierra EV Vs Mahindra XUV.e8: மஹிந்த்ராவின் XUV.e8 மற்றும் டாடா சியாரா கார் மாடல்களின் பல்வேறு அம்சங்களின் ஒப்பீட்டு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
மஹிந்த்ரா XUV.e8 Vs டாடா சியாரா EV:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார SUV பிரிவு, அபார வளர்ச்சியைப் எட்டி வருகிறது. இதனால், பல முன்னணி நிறுவனங்களின் மாடல்களுக்கு இடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது. அதன்படி, விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள டாடா சியரா மின்சார எடிஷன் மற்றும் மஹிந்திரா XUV.e8 ஆகியவை கடும் போட்டியாளர்களாக மாறக்கூடும் என கூறப்படுகிறது. இரண்டுமே அவற்றின் தொழில்நுட்பம், தோற்றம் மற்றும் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவற்றால் வாடிக்கையாளர்களை கவரும் திறனை கொண்டுள்ளன. இந்நிலையில், நுகர்வோருக்கு மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு கார் மாடல்களில் எது சிறந்த தேர்வாகிறது? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
மஹிந்த்ரா XUV.e8 Vs டாடா சியாரா EV - டிசைன்
டாடா சியரா EV பழைய கிளாசிக் ரெட்ரோ மற்றும் புதிய சமகாலத்திய தோற்றத்துடன் மேம்படுத்தப்பட்டு வலுவாக காட்சியளிக்கிறது. இது 2020 இல் ஆட்டோ எக்ஸ்போவில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பல்வேறு சாலை சோதனைகளில் ஈடுபட்ட சியாரா, நவம்பர் 25ம் தேதி அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட உள்ளது. இது மெல்லிய ஸ்ப்லிட் LED ஹெட்லேம்ப்கள், கருப்பு கிரில் மற்றும் டூயல் டோன் வண்ணத் திட்டத்தைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் சியராவின் எதிர்கால தோற்றத்தைக் குறிக்கின்றன.
அதேநேரம், மஹிந்த்ராவின் XUV.e8 காரானது, நிறுவனத்தின் XUV 700 காரின் டிசைனை சற்றே கடன் வாங்கியுள்ளது. EV எடிஷனிற்கு மிகவும் ஆக்ரோஷமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக சாய்ந்த வடிவமைப்பை கொண்டுள்ளது. அதோடு, முற்றிலும் முன்பக்கம் மூடப்பட்ட க்ரில், முழு அகல LED பார் மற்றும் பெரிதாக்கப்பட்ட சக்கர வளைவுகள் ஆகியவை எந்தவொரு SUV பிரியருக்கும் ஒரு தைரியமான தேர்வாக XUV.e8 காரை மாற்றுகிறது.
மஹிந்த்ரா XUV.e8 Vs டாடா சியாரா EV - பேட்டரி
சியரா EV, டாடாவின் ஜிப்ட்ரான் 2.0 தொழில்நுட்ப ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தி ஓட்டுநர் வரம்பைப் பெற வழிகாட்டுகிறது. அதன்படி, பெரிய பேட்டரி எடிஷனை முழுமையாக சார்ஜ் செய்தால் 500-550 கிமீ வரை ரேஞ்ச் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய 60 kWh பேட்டரி பேக் இருக்கலாம்.
அதேநேரம், மஹிந்திரா XUV.e8 காரானது 80 kWh பேட்டரியை கொண்டு 600 கிமீ ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் ஆல் வீல் டிரைவ் (AWD) விருப்பம் சியராவை காட்டிலும் சக்தி மற்றும் பிடியில் சிறிது முன்னேற்றத்தை அளிக்கும்.
மஹிந்த்ரா XUV.e8 Vs டாடா சியாரா EV - உட்புறம் , அம்சங்கள்
டாடா சியரா மின்சார எடிஷனின் கேபின் மிகச்சிறியதாகவும், மிகவும் உயர்தரமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் நிலையான மெட்டீரியல்ஸ் போன்ற அம்சங்களுடன் ஒட்டுமொத்த வடிவமைப்பும் கவனத்தை ஈர்க்கும் விதமாக உள்ளது.
மஹிந்திராவின் XUV.e8 காரானது 3 டச் ஸ்க்ரீன்களை கொண்டுள்ளது. சுற்றுப்புற விளக்குகள், AI- அடிப்படையிலான அசிஸ்டண்ட் மற்றும் குரல் கட்டுப்பாட்டு அம்சங்களைக் கொண்டுள்ளது. தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, மஹிந்திரா போட்டியாளரை காட்டிலும் சற்றே மேலோங்கி இருக்கக் கூடும்.
மஹிந்த்ரா XUV.e8 Vs டாடா சியாரா EV - விலை, வெளியீடு
டாடா சியராவின் மின்சார எடிஷனின் விலை ரூ.22 லட்சம் முதல் ரூ.28 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நியமிக்கப்படலாம். அதே சமயம் மஹிந்திராவின் XUV.e8 காரின் விலை வரம்பு ரூ.30-35 லட்சம் வரை இருக்கக் கூடும். டாடா சியாராவின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டாலும், மஹிந்த்ராவின் XUV.e8 காருக்கான வெளியீட்டு தேதி இன்னும் வெளியாகவில்லை.
ஆடம்பரமான, அதிக செலவு குறைந்த தேர்வுக்கு டாடா சியரா EV நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் மஹிந்திரா XUV.e8 அதிக சக்தி, பிரீமியம் அம்சங்கள் மற்றும் மின்சார SUV யின் பெரிய வரம்புகளை விரும்பும் வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டுள்ளது. இரண்டும் இந்திய மின்சார சந்தையில் தங்கள் முத்திரையைப் பதிக்கும் என நம்பப்படுகிறது. டாடா நம்பகத்தன்மையை வழங்குகிறது, அதே நேரத்தில் மஹிந்திரா அதன் இதயத்தில் தொழில்நுட்பத்தையும் ஆடம்பரத்தையும் கொண்டுள்ளது.





















