மேலும் அறிய

Tata 7 Seater EV: டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்

Tata Safari EV 7-Seater SUV: இந்திய கார் உற்பத்தி நிறுவனமான டாடா, தனது முதல் மின்சார 7 சீட்டர் எஸ்யுவி ஆக சஃபாரி மாடலை விரைவில் சந்தைப்படுத்த உள்ளது.

Tata Safari EV 7-Seater SUV: டாடா நிறுவனத்தின் முதல் மின்சார 7 சீட்டர் எஸ்யுவி ஆன சஃபாரி, உள்ளூரில் மஹிந்த்ராவின் XEV 9S கார் மாடலுடன் போட்டியிட உள்ளது.

டாடாவின் முதல் மின்சார 7 சீட்டர்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மின்சார பிரிவில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்த, உள்ளூர் கார் உற்பத்தி நிறுவனமான டாடா தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அண்மையில் டியாகோ மற்றும் டியாகோ ஃபேஸ்லிஃப்ட் மின்சார எடிஷனை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, வரும் ஜுன் 30ம் தேதி சியாரா எஸ்யுவியின் மின்சார எடிஷனை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது. அதன் தொடர்ச்சியாக ப்ராண்டின் முதல் மின்சார 7 சீட்டரான, சஃபாரியின் மின்சார எடிஷனை தீபாவளி சீசனுக்கு அறிமுகப்படுத்த உள்ளதையும் டாடா உறுதிப்படுத்தியுள்ளது. இந்த காரானது அடிக்கடி சாலை பரிசோதனைகளில் சிக்குவதன் மூலம், விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது மேலும் உறுதியாகிறது. டெய்ரோனா என்ற கோட்நேமை கொண்டுள்ள சஃபாரியின் மின்சார எடிஷன்,  ரூ.19.95 லட்சம் தொடங்கி ரூ.29.45 லட்சம் வரையிலான விலை வரம்பில் கிடைக்கும் மஹிந்த்ராவின் XEV 9S கார் மாடலுடன் போட்டியிட உள்ளதாம். இதற்கு போட்டியான விலை வரம்பை நிர்ணயிக்கவும் டாடா திட்டமிட்டுள்ளதாம்.

சஃபாரி EV - பேட்டரி பேக், ரேஞ்ச்

டாடா சஃபாரி மின்சார எடிஷனுக்கான பவர்டெயின் விவரங்களை நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், ஹாரியரின் மின்சார எடிஷனில் உள்ள பேட்டரி பேக் அம்சங்கள் புதிய 7 சீட்டருடன் அப்படியே பகிரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய சூழலில் 65KWh ரியர் வீல் ட்ரைவ் சிங்கிள் மோட்டார், 75KWh ரியர் வீல் ட்ரைவ் சிங்கிள் மோட்டார் மற்றும் 75KWh ஆல் வீல் ட்ரைவ் டூயல் மோட்டார் என மூன்று பவர்ட்ரெயின் ஆப்ஷன்களில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.  அதிகபட்சமாக இதன் பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 622 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிப்பதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே பவர்ட்ரெயின் விருப்பங்களை கொண்டு டாடா சஃபாரி 7 சீட்டர் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமான ரேஞ்சை பெறும் என கூறப்படுகிறது. இதன் போட்டியாளரான மஹிந்த்ராவின் XEV 9S மூன்று பேட்டரி ஆப்ஷன்களை கொண்டு, அதிகபட்சமாக 679 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிப்பதாக அந்நிறுவனம் தரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஃபாரி EV -  ப்ளார்ஃபார்ம் & மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம்

ப்ராண்டின் ஹாரியர் மின்சார எடிஷனைப் போலவே, விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ள சஃபாரியின் மின்சார எடிஷனும்,  Tidal எனப்படும் டாடா இண்டெலிஜெண்ட் டிஜிட்டல் ஆர்கிடெக்ட்சர் லேயர் கட்டமைப்பை கொண்டுள்ள Acti.EV+ ப்ளாட்ஃபார்மின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறதாம். இதன் மூலம் பல மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் 7 சீட்டரில் இணைக்கப்பட உள்ளதாம். குறிப்பாக ஓவர் தி ஏர் அப்டேட்ஸ், 540 டிகிரி கேமரா, காம்ப்ளக்ட் கனெக்டட் கார் அம்சங்கள் மற்றும் ADAS செயல்முறைகள் ஆகியவை அடங்கக் கூடுமாம்.

இதையும் படியுங்கள்: Mini Countryman C: லுக், ஸ்டைல், வசதிகள் எல்லாம் ஓகே.. விலை தான் கண்ண கட்டுது..! - மினி கண்ட்ரிமேன் C தேறுமா?

சஃபாரி EV - வசதிகள், தொழில்நுட்ப அம்சங்கள்

டாடா சஃபாரி EV-யின் ஒட்டுமொத்த வடிவமைப்பு மற்றும் ஸ்டைலிங், அதன் இன்ஜின் எடிஷனையே  பெரும்பாலும் பிரதிபலிக்கும். இருப்பினும் மூடப்பட்ட க்ரில், மறுவடிவமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள் மற்றும் பம்பர்கள், ஏரோ-ஆப்டிமைஸ்டு வீல்கள் மற்றும் EV பேட்ஜிங் போன்ற ஸ்டைலிங் அம்சங்கள் இதை வழக்கமான மாடலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும். புதிய டாடா 7 சீட்டர் மின்சார எஸ்யுவியின் உட்புறம், அதன் இன்ஜின் மாடலைப் போலவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஸ்பீக்கர் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம், இன்-கார் கனெக்டிவிட்டி, 6 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய முன் பயணிகள் இருக்கை, காற்றோட்ட வசதியுள்ள முன் மற்றும் இரண்டாம் வரிசை இருக்கைகள், அலெக்ஸா இணைப்பு, ஆம்பியன்ட் லைட்டிங், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், சைகை மூலம் கட்டுப்படுத்தப்படும் டெயில்கேட் மற்றும் பல அம்சங்கள் இதில் தொடர வாய்ப்புள்ளது.


Tata 7 Seater EV: டாடாவின் முதல் 7 சீட்டர் மின்சார SUV - மஹிந்த்ராவின் XEV 9S-ஐ சமாளிக்குமா? ரேஞ்ச், விலை விவரங்கள்

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
ஒரே சார்ஜில் 300 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ்! இந்த 3 இ ஸ்கூட்டர்கள் மட்டும்தான் இதுல கெத்து - என்னென்ன?
டேங்கரை நிரப்பினா 617 கி.மீட்டர் மைலேஜ்.. Hero Splendor Plus Flex Fuel பைக்கில் அப்படி என்னதான் இருக்கு? ஓர் அலசல்
டேங்கரை நிரப்பினா 617 கி.மீட்டர் மைலேஜ்.. Hero Splendor Plus Flex Fuel பைக்கில் அப்படி என்னதான் இருக்கு? ஓர் அலசல்
Volkswagen SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
ரூ.9 லட்சம் பட்ஜெட் எஸ்யுவி - ஃபோக்ஸ்வாகன் அதிரடி - என்ன இருக்கும்? எந்த மாடல் - முழு விவரம்
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Honda E Scooters: ஒரே சார்ஜில் இத்தனை கி.மீட்டர் மைலேஜா? பட்ஜெட் விலையில் மாஸான ஹோண்டா இ ஸ்கூட்டர்கள் - என்னென்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget