Tata Punch EVக்கு தள்ளுபடி எவ்வளவு தெரியுமா? 2025 முடிவில் மகிழ்ச்சியான செய்தி!
டாடா நிறுவனத்தின் Tata Punch EV காருக்கு டிசம்பர் மாத சலுகையாக ரூபாய் 1.75 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்களில் டாடா நிறுவனம் முதன்மையாக உள்ளது.
Tata Punch EV தள்ளுபடி:
டாடாவின் முக்கியமான மின்சார கார்களில் ஒன்று Tata Punch EV. டாடா நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு காருக்கும் மாதந்தோறும் சலுகைகள் அளிப்பது வழக்கம். அந்த வகையில் டிசம்பர் மாத சலுகையை டாடா நிறுவனம் தனது Tata Punch EV காருக்கும் அறிவித்துள்ளது. வருடத்தின் கடைசி மாதமான இந்த மாதம் Tata Punch EV காருக்கு ரூபாய் 1.75 லட்சம் வரை குட் பை பலன்கள் எனப்படும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாடா நிறுவனத்தின் Tata Punch EV விற்பனையில் மிகப்பெரிய வெற்றிகரமான காராக இந்தியாவில் உள்ளது. இந்த காரில் மொத்தம் 20 வேரியண்ட்கள் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 10.52 லட்சம் ஆகும். டிசம்பர் மாத சிறப்பு சலுகையால் இந்த காரை ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் வாங்கலாம்.
மைலேஜ்:
மேலும், இந்த காருக்கு இந்த மாதம் வாங்கினால் மாதந்தோறும் தவணை ரூபாய் 7 ஆயிரத்து 999 செலுத்தினால் போதும் என்ற சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் 25 கிலோவாட் மற்றும் 35 கிலோவாட் பேட்டரி கொண்ட வேரியண்ட்களாக உள்ளது.
25 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 315 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. 35 கிலோவாட் பேட்டரி கொண்ட கார் 421 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
வேரியண்ட்களும், விலைகளும்:
1. Punch EV Smart - ரூ.10.52 லட்சம்
2.Punch EV Smart Plus - ரூ.11.82 லட்சம்
3. Punch EV Adventure - ரூ.12.55 லட்சம்
4. Punch EV Adventure (S) - ரூ.12.87 லட்சம்
5. Punch EV Empowered - ரூ.13.39 லட்சம்
6. Punch EV Empowered (S) - ரூ.13.60 லட்சம்
7. Punch EV Empowered Plus - ரூ.13.60 லட்சம்
8. Punch EV Adventure Long Range - ரூ.13.66 லட்சம்
9. Punch EV Empowered Plus S - ரூ.13.91 லட்சம்
10. Punch EV Adventure (S) Long Range - ரூ.13.98 லட்சம்
11. Punch EV Adventure Long Range 7.2 Fast Charger - ரூ.14.19 லட்சம்
12. Punch EV Empowered Long Range - ரூ.14.29 லட்சம்
13. Punch EV Empowered S Long Range - ரூ.14.50 லட்சம்
14. Punch EV Empowered Plus Long Range - ரூ.14.50 லட்சம்
15. Punch EV Adventure (S) Long Range 7.2 Fast Charger - ரூ.14.82 லட்சம்
16. Punch EV Empowered Plus S Long Range - ரூ.14.82 லட்சம்
17. Punch EV Empowered S Long Range 7.2 Fast Charger - ரூ.15.03 லட்சம்
18. Punch EV Empowered Plus Long Range 7.2 Fast Charger - ரூ.15.03 லட்சம்
19. Punch EV Empowered Plus S long Range 7.2 Fast Charger - ரூ.15.34 லட்சம்
சிறப்பம்சங்கள்:
இந்த காருக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. காரின் கட்டமைப்பும், தோற்றமும் வசீகரமாக உள்ளது. இந்த காரின் அனைத்து வேரியண்ட்களும் 5 ஸ்டார் அந்தஸ்து கொண்டது. இந்த கார் எகோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் கொண்டது. ஏசி ரெகுலர் சார்ஜில் சார்ஜ் ஆவதற்கு சுமார் 9.30 மணி நேரம் ஆகிறது.
ஏசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 3.36 மணி நேரம் ஆகிறது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கில் 56 நிமிடங்களில் சார்ஜ் ஆகிறது. 80 பிஎச்பி குதிரை ஆற்றல் மற்றும் 114 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளது. மழையை உணரும் வைபர்கள் உள்ளது. வயர்லஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் வசதி உள்ளது. 10.24 டிஜிட்டல் கிளஸ்டர் வசதி உள்ளது.
6 ஏர்பேக் வசதி உள்ளது. 360 டிகிரி கேமரா உள்ளது. ப்ளைண்ட் ஸ்பாட் வியூ மானிட்டர் உள்ளது. இஎஸ்பி மற்றும் ஹில் டிசண்ட் கன்ட்ரோல் வசதி உள்ளது. டிஸ்க் ப்ரேக் வசதி உள்ளது. டாடா நெக்ஸான் இவி, டாடா டியாகோ இவி, மஹிந்திரா எக்ஸ்யூவி 400 ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.





















