மேலும் அறிய

பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!

மாருதி பிரெஸ்ஸா vs டாடா நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம்-  மாத இஎம்ஐ எதற்கு கம்மி? முழு விவரம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மாருதி சுசுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய இரு கார்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட்டிற்கு ஏற்ற இந்த கார்களை வெறும் ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தி வாங்கினால், மாதாந்திர இஎம்ஐ எவ்வளவு வரும், இரண்டின் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்த முழு விவரங்களை இங்கே காண்போம்.

பிரெஸ்ஸா.. பெருசா..!

முதலாவதாக விலையை ஒப்பிடுகையில், மாருதி பிரெஸ்ஸா காரின் ஆரம்பகால எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.34 லட்சத்தில் தொடங்கி டாப் எண்ட் மாடலுக்கு ரூ.14.14 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், டாடா நெக்ஸான் காரின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.00 லட்சத்தில் தொடங்கி ரூ.15.80 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இஎம்ஐ திட்டத்தைப் பொறுத்தவரை, நீங்கள் மாருதி பிரெஸ்ஸா பேஸ் மாடலை வாங்க ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்துகிறீர்கள் என்றால், மீதமுள்ள தொகைக்கு சுமார் 9.8 சதவீத வட்டி விகிதத்தில் லோன் எடுக்கலாம். குறிப்பாக, 5 ஆண்டு காலத்திற்கு (60 மாதங்கள்) வாகனக் கடன் பெற்றால், உங்களின் மாதாந்திர தவணை தோராயமாக ரூ.17,500 முதல் ரூ.18,500 வரை வரும்.

நெக்ஸான் நெக்ஸ்ட்!

அதேபோல, டாடா நெக்ஸான் காரின் ஆரம்ப மாடலுக்கு ஒரு லட்சம் ரூபாய் முன்பணம் கட்டினால், மீதமுள்ள கடனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு தோராயமாக ரூ.16,500 முதல் ரூ.17,500 வரை இஎம்ஐ செலுத்த வேண்டியதிருக்கும். மாநிலங்களுக்கு ஏற்ப ஆன் ரோடு விலையில் ஏற்படும் மாற்றத்தால் இந்த இஎம்ஐ தொகையில் சிறிய மாற்றம் இருக்கலாம்.

இன்ஜின் மற்றும் ரேஞ்ச் விவரங்களை கவனித்தால், மாருதி பிரெஸ்ஸா 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் வெளிவருகிறது. இது லிட்டருக்கு 19.89 கி.மீ மைலேஜும், சிஎன்ஜி வெர்ஷனில் 25.51 கி.மீ சிறப்பான ரேஞ்சும் வழங்குகிறது. டாடா நெக்ஸான் மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு இன்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 17.01 கி.மீ முதல் 24.08 கி.மீ வரையிலான சிறந்த ரேஞ்சை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கிறது.

வடிவமைப்பு எப்படி?

வடிவமைப்பை பொறுத்தமட்டில், மாருதி பிரெஸ்ஸா ஒரு கம்பீரமான பாக்ஸி எஸ்யூவி தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதில் பெரிய கிரில், நேர்த்தியான எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் பிரீமியம் இன்டீரியர் அமைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் டாடா நெக்ஸான் முற்றிலும் ஸ்போர்ட்டியான மற்றும் ஏரோடைனமிக் வடிவமைப்புடன் மிகவும் கவர்ச்சிகரமானதாக காட்சியளிக்கிறது. இதன் முன்புற எல்இடி டிஆர்எல்கள், கனெக்டெட் டெயில் லேம்ப்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை காரின் அழகை கூட்டுகின்றன.

வாடிக்கையாளர்கள் தங்களின் பட்ஜெட் மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு இதில் தங்களுக்குப் பிடித்த காரை தேர்ந்தெடுக்கலாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
பிரெஸ்ஸா vs நெக்ஸான்: ரூ. 1 லட்சம் முன்பணம், EMI எதற்கு கம்மி? பட்ஜெட் SUV எது? ஒப்பீடு!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
TVS Apache: குழந்தைகளுக்கு ரேஸ் பைக்.. டிவிஎஸ் நிறுவனத்தில் அசத்தலான அறிமுகம்!
Bolero Neo Plus: நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
நாட்டின் மலிவான 9 சீட்டரில் இருக்கும் குறைகள்..! SUV யாருக்கு ஒத்து வராது? மாற்று ஆப்ஷன்கள் என்ன?
Top 5 Cars: ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
ரூ.10 லட்சம் பட்ஜெட்..! அதிக மறுவிற்பனை மதிப்பை கொண்ட டாப் 5 கார்கள் - முன்னணி ப்ராண்ட் மாடல்கள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
Embed widget