Skoda Rapid limited edition | ஸ்கோடா வெளியிட்டிருக்கும் பிரத்யேக லிமிடெட் எடிஷன் ரேபிட்.. என்ன ஸ்பெஷல்?
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் நடுத்தர அளவிலான செடான் வகைக் காரான `ரேபிட்’ காரின் லிமிடெட் எடிஷன் மாடல் வெளியிட்டுள்ளது. இந்தக் காரின் தொடக்க விலை சுமார் 12 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செக் நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா ஆட்டோ கடந்த அக்டோபர் 4 அன்று, இந்தியாவில் நடுத்தர அளவிலான செடான் வகைக் காரான `ரேபிட்’ காரின் லிமிடெட் எடிஷன் மாடல் வெளியிட்டுள்ளது. இந்தக் காரின் தொடக்க விலை சுமார் 12 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, Rapid Matte edition என்று அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த வாகனம் கார்பன் ஸ்டீல் கலரில் கிடைப்பதுடன், இதில் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சேர்க்கப்பட்டு, அதனை ஆட்டோமேட்டிக், மேனுவல் ஆகிய இரு வகைகளிலும் கிடைக்கிறது. மேனுவல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் மாடலின் விலை சுமார் 12 லட்சம் ரூபாய் எனவும், ஆட்டோமேட்டிக் என்ஜின் சுமார் 13.49 லட்சம் ரூபாய் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஸ்கோடா ஆட்டோவின் இந்தியா பதிப்பின் பிராண்ட் இயக்குநர் சாக் ஹோலிஸ் இதுகுறித்து கூறும்போது, கடந்த 2011ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது முதல், ரேபிட் கார் மாடல் இந்தியாவின் வெற்றிகரமான பயணத்தை நடத்தியிருப்பதாகவும், சுமார் 1 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்தக் கார் மாடலை வாங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், ஆட்டோமொபைல் பிரியர்கள் பலராலும் விரும்பப்படும் கார்களின் பட்டியலில், ரேபிட் காருக்கும் இடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
`இந்த வெற்றிக் கதையைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில், இந்தியாவில் Rapid Matte Edition கார் மாடலை வெளியிடுவதில் நாங்கள் மகிழ்கிறோம். இந்தக் காரை வெளியிடுவதன் மூலம், ரேபிட் காருக்கான மதிப்பு இன்னும் பெருகி வருகிறது. இதனால் புதிய வாடிக்கையாளர்களையும் இந்தக் காரை வாங்குவதற்கான முன்வருகின்றனர். இதன் பிரத்யேக ஸ்டைல், கொடுக்கப்பட்டிருக்கும் புதிய சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் காரணமாக, இந்த மாடல் பலராலும் வாங்கப்படும் என முழு நம்பிக்கை கொள்கிறேன்’ எனவும் சாக் ஹோலிஸ் கூறியுள்ளார்.
ஸ்கோடா ஆட்டோ வெளியிட்டுள்ள குறிப்பின்படி, இந்தக் காரில் புதிய டிசைன் அம்சங்களாக glossy black radiator grille, முன்பகுதியில் spoiler coupled with carbon steel matte, glossy black door handle, black body side moulding, black trunk lip garnish ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தக் காரில் அனைத்து வீல்களும் ப்ளாக் அல்லாயாக பொருத்தப்பட்டிருப்பதோடு, இரட்டை ஏர் பேக், anti-lock braking system முதலான பயணப் பாதுகாப்பு வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
Rapid Matte edition கார் மாடலில் பின்பக்க பார்கிங் சென்சார்கள், anti-glare உள்பக்க ரியர் வியூ கண்ணாடி, டைமர் பொறுத்தப்பட்ட ரியர் விண்ட்ஸ்க்ரீன் defogger, முன்புறத்தில் உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதியுடைய மூன்று பாயிண்ட் சீட் பெல்ர், floating code system சேர்க்கப்பட்டிருக்கும் என்ஜின் ஆகியவற்றைச் சேர்த்திருப்பதாக ஸ்கோடா ஆட்டோ தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.