மேலும் அறிய

Renault India: அடுத்தடுத்து 5 கார்களை அறிமுகப்படுத்த ரெனால்ட் நிறுவனம் திட்டம் - 2 நியூ ஜென் + 2 எஸ்யுவி + 1 மின்சார கார்

Renault: ரெனால்ட் நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்தடுத்து 5 புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Renault: ரெனால்ட் நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில்,  2 புதிய தலைமுறை கார்கள் உட்பட 5 மாடல்களை அடுத்தடுத்து அறிமுகப்படுத்த உள்ளது.

ரெனால்ட் கார்கள்:

ரெனால்ட் நிறுவனம் தனது Renalution 2024 முயற்சியின் ஒரு பகுதியாக, 2027 ஆம் ஆண்டிற்குள் ஐந்து புதிய கார் மாடல்களை இந்தியாவிற்கு கொண்டுவரும் ஒரு இலக்கை அறிவித்துள்ளது. இது இந்திய சந்தையின் மீது பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை  காட்டுகிறது. ஐரோப்பாவிற்கு வெளியே உள்ள ரெனால்ட் பிராண்டிற்கான நான்கு முக்கிய மையங்களில் ஒன்றாக இந்தியாவை ரெனால்ட் நிறுவனம் கருதுகிறது. நிறுவனத்தின் புதிய முயற்சியானது, ட்ரைபர், கைகர் மற்றும் க்விட் வரம்புகளில் சில திருத்தங்கள் மற்றும் சேர்த்தல்களைச் செய்வதையும், புதிய வாடிக்கையாளர் அனுபவ உத்தியை நிறுவுவதையும், ஏற்கனவே உள்ள கார் திட்டத்தை புதுப்பிப்பதையும் உள்ளடக்கியுள்ளது. Renault நிறுவனம் தனது புதிய பிராண்ட் அடையாளத்தை நடப்பாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு முதல் அனைத்து மாடல்களிலும் அது இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Renault Triber, Kiger incoming:

புதிய ட்ரைபர் மற்றும் கைகர் ஐந்து புதிய வெளியீடுகளில் ஒன்றாக இருக்கும் என்பதை ரெனால்ட் உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் அவை எப்போது வரும் அல்லது எந்த வடிவத்தில் புதுப்பிப்புகள் எடுக்கப்படும் என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை. ரெனால்ட்டின் சிறிய 7-சீட்டர் ட்ரைபர் மாடல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையில் உள்ளது. அதற்கு போட்டியாக மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய மாடல் அறிமுகமாக உள்ள சூழலில் ட்ரைபர் மாடலின் புதுப்பிப்பு அவசியமாகிறது. இதற்கிடையில் Kiger மாடல் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகளே ஆகிறது. இருப்பினும் காம்பேக்ஸ் எஸ்யுவி பிரிவில் உள்ள போட்டியை சமாளிக்கும் நோக்கில் அதுவும் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இதற்கு போட்டியாக கியா சோனெட் ஃபேஸ்லிப்ட் விரைவில் சந்தைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.  கூடுதலாக, காம்பாக்ட் SUV பிரிவில் மிகவும் மலிவு விலை கார் என்ற அந்தஸ்தை Tata Punch மற்றும் Hyundai Exter போன்றவற்றோடு Kiger-ம் பகிர்ந்து கொள்கிறது.

New Renault Duster India launch:

B+ SUV மற்றும் C SUV வரப்போகிறது என்று கூறினாலும் மாடல்களின் விவரங்களை ரெனால்ட் நிறுவனம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அதேநேரம்,  புதிய டஸ்டரையும் சந்தைக்கு கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Dacia பேட்ஜுடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய டஸ்டர் ஆனது Renault-Nissan Alliance இன் மாடுலர் CMF-B இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் முந்தைய மாடலின் வடிவமைப்பு மற்றும்  நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அடுத்த ஆண்டு பிற்பகுதியில் ரெனால்ட் பேட்ஜுடன் இந்தியா வரும்போது ஸ்டைலிங்கில் சில வேறுபாடுகள் இருக்கும் என்றாலும், இந்த 4.3 மீட்டர் நீளமுள்ள எஸ்யூவி தற்போதுள்ள ட மாடலைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

affordable Renault EV:

ஐந்தாவது ரெனால்ட் மாடல் உள்ளூர்மயமாக்கப்பட்ட முழு மின்சார காராக இருக்கும். ஏற்கனவே வெளியான தகவலின்படி Kwid EV ஆக இருக்கலாம். Kwid EV ஆனது Tiago EV  மற்றும்  Citroen eC3  போன்றவற்றுக்கு போட்டியாக இருக்கும். இதன் விலை ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget