Ola electric scooters | விற்பனைக்கு வரும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்ஸ்.. முன்பதிவு செய்வது எப்படி?
குஜராத் மாநிலத்தில் ஓலா ஸ்கூட்டர் விலை குறைவாக கிடைக்கும் என்கின்றனர். ஓலா S1-இன் விலை 80 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது.
மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகமான ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. முன்பதிவு செய்துவிட்டு ஓலா ஸ்கூட்டரை எதிர்பார்த்து காத்திருக்கும் நபர்களுக்கு , பதிவின் அடிப்படையில் ஓலா ஸ்கூட்டர்கள் அக்டோபர் மாதம் டெலிவரி செய்யப்படும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓலா S1 மற்றும் ஓலா S1 புரோ என இரண்டு வகைகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அறிமுகாகியுள்ளன. இதில் ஓலா S1 விலை 99,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. அதே போல ஓலா S1 புரோவின் விலை 1,29,999 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. குஜராத் மாநிலத்தில் ஓலா ஸ்கூட்டர் விலை குறைவாக கிடைக்கும் என்கின்றனர். ஓலா S1 விலை 80 ஆயிரம் ரூபாயிலிருந்து தொடங்குவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓலா ஸ்கூட்டர்கள் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஸ்கூட்டரில் இருக்கும் வசதிகள் தொடர்பான தவல்களை www.olaelectric.com இணையதளம் வாயிலாக தெரிந்துக்கொள்ளலாம்.
ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க விருப்பமுள்ளவர்கள் செய்ய வேண்டியது!
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க விருப்பம் உள்ள நபர்கள் முன்னதாக முன்பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது. இல்லையென்றால் ஸ்கூட்டரை வாங்க முடியாது. www.olaelectric.com என்ற இணையதள முகவரிக்கு சென்று, பெயர் , முகவரி, வாகன விருப்ப தேர்வு உள்ளிட்டவற்றை உள்ளீடு செய்து 499 ரூபாய் என்ற முன்பதிவு தொகையை செலுத்தி ரிசர்வ் செய்துக்கொள்ள வேண்டும்.
முன் தொகையை அதிகமாக செலுத்த விரும்பும் நபர்கள் ஓலா எஸ் 1 க்கு ₹ 20,000 மற்றும் ஓலா எஸ் 1 ப்ரோவுக்கு ₹ 25,000 முன்பணம் செலுத்தலாம். மீதமுள்ள தொகையை ஸ்கூட்டர் இன்வாய்ஸ் செய்யும்போது செலுத்திக்கொள்ளும் வசதிகளையும் இணைத்துள்ளனர்
ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டீலர்களோ , ஷோரூம்களோ தற்போது கிடையாது என்பதால் வலைத்தளம் வாயிலாக மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் IDFC , HDFC , ICICI, Kotak Mahindra Prime, Yes Bank, IDFC First Bank மற்றும் ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்ட பல வங்கிகளுடன் இணைந்து சில கட்டண சலுகைகளையும் வழங்குகிறது.
EMI ஆஃபர்களை பொறுத்தவரையில் ,ஓலா எஸ் 1 EMI ₹ 2,999 ரூபாயிலிருந்தும் எஸ் 1 ப்ரோவின் EMI ₹ 3,199 ரூபாயிலிருந்தும் தொடங்குகிறது.
வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டரின் ஆடரை கேன்சல் செய்ய விரும்பினால். டெலிவரிக்கு ஸ்கூட்டர் தயாரவதற்கு முன்னதாக செய்ய வேண்டும். பிடித்தம் இல்லாமல் செலுத்திய முன்பணத்தை அப்படியே பெற்றுக்கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் தங்கள் ஓலா எஸ் 1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓலா மற்றும் ஓலா எலக்ட்ரிக் ஆப்ஸ் மூலம் காப்பீடு செய்துக்கொள்ளலாம். இதனை ஐசிஐசிஐ லோம்பார்ட் வழங்குகிறது.
பதிவு செய்வதற்கு முன்னதாக சேதம் குறித்தான காப்பீட்டு திட்டங்களை சரியாக கவனிக்க வேண்டியது அவசியம்.