மேலும் அறிய

Nissan Tekton SUV: என்னைய காப்பாத்திருபா..! டெக்டானை மலைபோல நம்பும் நிசான்..! மேக்னைட்டுக்கு விடிவுகாலம்

Nissan Tekton SUV: டெக்டான் கார் மாடலை நிசான் நிறுவனம் நம்பி இருக்க, ஜப்பானிய ப்ராண்டிற்கு இந்த காம்பேக்ட் எஸ்யுவி ஏன்? மிக முக்கியம் என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Nissan Tekton SUV: டெக்டான் கார் மாடல் மூலம் மேக்னைட்டை மட்டுமே நம்பி இருக்கும் சூழலை, நிசான் நிறுவனம் முடிவுக்கு கொண்டு வரவுள்ளது.

மேக்னைட்டுக்கு விடிவுகாலம்:

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஒருவழியாக தனது பயணத்தை தீவிரபடுத்த நிசான் தீவிரம்காட்ட தொடங்கியுள்ளது. ஜப்பானிய கார் ப்ராண்டை பல ஆண்டுகளாக மேக்னைட் கார் மாடல் ஒற்றை ஆளாக தாந்து தோள்களில் சுமந்து கொண்டுள்ளது. இந்நிலையில் விரைவில் வெளியாக உள்ள டெக்டான், நிறுவனத்திற்கு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய எஸ்யுவி ஆனதை ப்ராண்டை சந்தையில் இருந்தால் போதும் என்ற நிலையில் இருந்து,சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக மாற்றும் என கூறப்படுகிறது.

மேக்னேட்டை தாண்டிய நிசானின் பயணம்:

இந்திய சந்தைக்கான நிசானின் புதிய பயணத்தில் டெக்டான் முக்கிய பங்கு வகிக்க முதல் காரணம், வேகமான இந்திய சந்தையில் ஒரே மாடலை நம்பியிருக்கும் சூழலை மாற்றவிருப்பது ஆகும். டெக்டன் ப்ராண்டுக்கான பல தயாரிப்பு திட்டங்களின் முன்னோடியாக உள்ளது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் நுழைவதன் மூலம், பட்ஜெட் காருக்கான ப்ராண்ட் என்பதிலிருந்து விலகி ப்ரீமியம் ப்ரிவுக்கும் நகர உள்ளது. 

சர்வதேச சந்தைக்கான டெக்டான்

டெக்டான் இந்திய சந்தைக்கானது மட்டுமல்ல. இது சென்னையில் உள்ள ரெனால்ட்-நிசான் கூட்டு உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட உள்ளது. இடது கை மற்றும் வலது கை ஸ்டியரிங் ஆப்ஷனுடன்,  உலகளாவிய ஏற்றுமதி மையமாக இது செயல்பட உள்ளது. இது "ஒரு கார், ஒரு உலகம்" உத்தியுடன் ஒத்துப்போகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கார்கள் உலகளாவிய  தரங்களை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது. எனவே, டெக்டனின் வெற்றி உற்பத்தியாளருக்கு இந்தியாவின் திறனுக்கான ஒரு முக்கிய சோதனையாகும்.

போர்க்களமாக உள்ள காம்பேக்ட் எஸ்யுவி

காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு தான், இந்திய எஸ்யுவி விற்பனையில் முக முக்கிய பங்கு வகிக்கிறது. சிறிய SUVகள் அதிக அளவில் விற்பனையானாலும், காம்பேக்ட் எஸ்யுவி பிரிவு கணிசமாக அதிக லாப வரம்பை வழங்குகிறது. ஹூண்டாய் க்ரேட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற பிரபலமான மாடல்களை எதிர்கொள்வதன் மூலம் , நிசான் இறுதியாக சந்தையின் மிகவும் லாபகரமான பகுதியில் தனது பயணத்தை தொடங்க உள்ளது. இந்த பிரிவில்  வெற்றி என்பது ப்ராண்டின் எதிர்கால ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் நெட்வொர்க் விரிவாக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

ரெனால்ட் டஸ்டரை ஓவர்டேக் செய்யும் டெக்டான்

முற்றிலும் புதியடாக ஒரு காரை உருவாக்குவது என்பது அதிகப்படியான செலவை ஏற்படுத்தும். சந்தையில் போட்டித்தன்மையுடன் இருக்க, நிசான் டெக்டான் மூன்றாம் தலைமுறை ரெனால்ட் டஸ்டருடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட CMF-B மாடுலர் ப்ளாட்ஃபார்மை பயன்படுத்துகிறது. இதன் மூலம் செலவை குறைப்பதோடு, அதிகப்படியான உள்ளூர் மயமாக்களுக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. பல அம்சங்கள் ஒரே மாதிரி இருந்தாலும், டெக்டான் ஒரு தனித்துவமான 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். இது 154 bhp ஆற்றலை உற்பத்தி செய்து, டஸ்டரை விட டெக்டானை மேம்பட்டதாக மாற்றுகிறது.

ரக்ட் ப்ரீமியம் டிசைன்

டெக்டான் மீதான மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு காரணம் அதன் வடிவமைப்புதான். சர்வதேச அளவில் ப்ராண்டின் புகழ்பெற்ற பேட்ரோலின் டிஎன்ஏ டெக்டானில் இணைக்கப்பட்டுள்ளது . பாக்ஸி சில்-அவுட், C-வடிவ LED சிக்னேட்சர்கள் மற்றும் மஸ்குலர் "டபுள்-சி" சைட் ஆக்செண்ட் ஆகியவற்றைக் கொண்ட டெக்டான், "பேபி பேட்ரோல்" என்று சந்தைப்படுத்தப்படுகிறது. இந்த கரடுமுரடான ப்ரீமியம் டிசைன் அதன் போட்டியாளர்களின் மென்மையான, நகர்ப்புற வடிவமைப்புகளிலிருந்து டெக்டானை தனித்துவமாக மாற்றுகிறது.

போட்டியை சமாளிக்குமா?

2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் டெக்டான் மாடல் சந்தையில் நுழைவது என்பது, க்ரேட்டாவின் புதுப்பிக்கப்பட்ட எடிஷன் மற்றும் புதிய தலைமுறை செல்டோஸுடன் போட்டியிடுவதை உறுதிப்படுத்துகிறது. எனவே நல்லதாக மாடலாக இருப்பது மட்டும் போதாது. சந்தையில் ஆதிக்கம் செலுத்த டெக்டான் அதன் விலை நிர்ணயம் அல்லது அதன் தொழில்நுட்பத் தொகுப்பில் (லெவல் 2 ADAS மற்றும் 360-டிகிரி கேமராக்கள் எதிர்பார்க்கப்படுகின்றன)  புரட்சிகரமானதாக இருக்க வேண்டும்.

டெக்டான் எஸ்யுவிக்கான சிக்கல்கள்

 கரடுமுரடான பிரீமியம் ப்ராண்டிங் இருந்தபோதிலும், எஸ்யுவியில் சில பிரச்னைகளும் நிலவுகின்றன.

டீசல் எடிஷன்: க்ரேட்டா மற்றும் XUV700 போலல்லாமல், டெக்டான் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே (கலப்பின விருப்பங்களுடன்) கிடைக்கும், இது நீண்ட தூர பயணங்களுக்கான கார்களை ஆராய்பவர்களுக்கு, டெக்டானை அந்நியப்படுத்தும்.

நெட்வொர்க் அணுகல்: நிசான் விரிவடைந்து வரும் அதே வேளையில், அதன் விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை இன்னும் மாருதி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது.

டஸ்டரின் போட்டி: இந்தியாவில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டு கம்பேக் கொடுக்கும் ரெனால்ட் டஸ்டருக்கு எதிராக போட்டியிடுவது டெக்டானுக்கு நிச்சயம் சவாலானதாக இருக்கும்

டெக்டான் விலை என்ன?

செயல்திறன் மற்றும் மினி ப்ரீமியம் தோற்றத்தை கொண்ட மிட்-சைஸ் SUVயை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், டெக்டான் உங்களுக்கு நல்ல தேர்வாக இருக்கும். அதன் 154 bhp டர்போ இன்ஜின், ரூ.11–19 லட்சம் விலையில் ஓட்டுவதற்கு மிகவும் சுவாரஸ்யமான காராக இருக்கும். இருப்பினும், அதிக மைலேஜுக்கான டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லாதது வருத்தமே. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ள ரெனால்ட் டஸ்டரின் விலையை பொறுத்து, டெக்டானின் விலையை கணிக்க முடியும்.

Frequently Asked Questions

நிசான் டெக்டான் எஸ்யூவி மேக்னைட் மாடலில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

டெக்டான், மேக்னைட்டை மட்டுமே நம்பியிருக்கும் நிசானின் நிலையை மாற்றும். மேலும், இது மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் நுழைந்து பிரீமியம் பிரிவுக்கு நகரும்.

டெக்டான் எஸ்யூவி சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுமா?

ஆம், டெக்டான் சென்னையில் உள்ள ரெனால்ட்-நிசான் கூட்டு உற்பத்தி ஆலையில் தயாரிக்கப்பட்டு, உலகளாவிய ஏற்றுமதி மையமாக செயல்படும். இது இடது மற்றும் வலது கை ஸ்டியரிங் ஆப்ஷன்களுடன் வரும்.

டெக்டான் எஸ்யூவி எந்த வகையான இன்ஜின் விருப்பங்களுடன் வருகிறது?

டெக்டான் ஒரு தனித்துவமான 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினை கொண்டிருக்கும். இது 154 bhp ஆற்றலை உற்பத்தி செய்யும். டீசல் ஆப்ஷன் இல்லை.

டெக்டான் எஸ்யூவிக்கு உள்ள சவால்கள் யாவை?

டீசல் எடிஷன் இல்லாதது, நெட்வொர்க் அணுகல் பற்றாக்குறை மற்றும் ரெனால்ட் டஸ்டரின் போட்டி ஆகியவை டெக்டானுக்கு உள்ள முக்கிய சவால்கள்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget