மேலும் அறிய
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
புதிய Nissan Magnite Facelift காரானது ஆறு வேரியன்ட்கள் மற்றும் இரண்டு வகையான இன்ஜின்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
![சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா? Nissan Magnite Facelift Launched in Chennai Know the Price, Mileage, Features? சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/05/0538e635a7f55e1c653b6d0032971b891728142344081572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
புதிய நிசான் மேக்னைட் அறிமுக விழா
Source : abp
நிசான் அதன் பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்யுவி கார் Magnite Facelift ரூ. 5.99 லட்சத்தில் நடிகை மிஷா கோஷல், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன், நேஹா நாஹர் சோப்ரா, Director AutoRelli Nissan ஆகியோர் சென்னை நந்தனத்தில் அறிமுகப்படுத்தினர்
Nissan Magnite Facelift கார் அறிமுக விழா:
சென்னை நந்தனத்தில் நடைப்பெற்ற Nissan Magnite Facelift காரின் அறிமுக விழாவில் , நடிகை மிஷா கோஷல், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன், நேஹா நாஹர் சோப்ரா டைரக்டர் ஆட்டோரேலி நிஸான், ஆனந்த் ரீஜினல் மேனேஜர் சேல்ஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அறிமுகப்படுத்தினர்.
புதிய நிசான் மேக்னைட் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு 20 க்கும் மேற்பட்ட புதிய அம்சங்களுடன் , கிளாஸ் லீடிங் டெக் மற்றும் பாதுகாப்பு, உள்ளிட்டவைகளுடன், அறிமுக விலையாக 5 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
சென்னையில் உள்ள அலையன்ஸ் ஆலையில் தயாரிக்கப்பட்ட நியூ மேக்னைட் இப்போது சர்வதேச அளவில் 65+ சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், இது நிசானின் முக்கிய ஏற்றுமதி மையமாக இந்தியாவை வலுப்படுத்துகிறது.
வடிவமைப்பு:
2024 மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டின் வெளிப்புற வடிவமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஃப்ரண்ட் லூக் மற்றும் குரோம் இன்சர்ட்ஸ் இதில் சேர்க்கப்பட்டுள்ளன, இது எஸ்யுவிக்கு அதிக பிரீமியம் லூக்கை அளிக்கிறது. புதிய அலோய் வீல்ஸின் வடிவமைப்புடன் எஸ்யுவியின் ஸ்டைலிங் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ரியரில், டெயில் லைட்டின் டிசைன் அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளது, ஆனால் அவற்றின் எலிமெண்ட்ஸ் மாற்றப்பட்டு, ரியர்க்கு புதிய தோற்றத்தை அளிக்கிறது.
புதிய மேக்னைட், பெரிய மற்றும் தைரியமான மறுவடிவமைப்பு செய்யப்பட்ட "தேன்கூடு" கிரில் மூலம் கவனத்தை ஈர்க்கிறது, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் ஒரு முக்கிய நிலைப்பாட்டை அளிக்கிறது, அதே நேரத்தில் உட்புற வடிவமைப்பு கூர்மையான லெதரெட் பூச்சுடன் அதிக பிரீமியம் ஈர்ப்பைக் கொண்டுள்ளது.
மேக்னைட்டின் கேபினில் அதிகம் மாற்றம் செய்யப்படவில்லை, ஆனால் சில புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது புதிய ஸ்டீயரிங் வீல் கொண்டுள்ளது. இதன் ஃபுல்லி லோடெட் வேரியன்ட்டில், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஃபோன் மிரரிங், டிரைவர் சீட்க்கான உயரத்தை சரிசெய்தல், பவர்ட் மிர்ரர், HEPA ஏர் ஃபில்டர், எல்இடி ஹெட்லேம்ப்ஸ் மற்றும் எல்இடி டிஆர்எல்கள் போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இரண்டு வகையான இன்ஜின்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1.0 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 71bhp பவரையும், 96Nm டோர்க் திறனையும் உற்பத்தி செய்கிறது. இது ஃபைவ்-ஸ்பீட் மேனுவல் அல்லது ஃபைவ்-ஸ்பீட் ஏஎம்டீ கியர்பாக்ஸுடன் கிடைக்கும்.
1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்: இந்த இன்ஜின் 99bhp பவரையும் மற்றும் 160Nm டோர்க்கை உற்பத்தி செய்கிறது, மேலும் சிக்ஸ்-ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடீ கியர்பாக்ஸ் விருப்பங்களில் கிடைக்கிறது.
ரிமோட் எஞ்சின் ஸ்டார்ட், நிசான் அவுண்ட் வியூ மானிட்டர் (ஏவிஎம்) மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய ஃப்ளோட்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் புதிய மேக்னைட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைப்பு:
உலகளாவிய தரத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட புதிய நிசான் மேக்னைட், ஆறு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் மற்றும் ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் உள்ளிட்ட 40+ நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.
இது குறித்து நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சௌரப் வத்சா, கூறுகையில், “மேக்னைட் சந்தை எதிர்பார்ப்புகளை மறுவரையறை செய்துள்ளதாகவும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பாதுகாப்பு மற்றும் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் காட்டும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும் நாட்டில் Magnite ஐ மகத்தான வெற்றியடையச் செய்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் ,புதிய நிசான் மேக்னைட்டும் அதே வழியில் சர்வதேச வாடிக்கையாளர்களிடம் எதிரொலிக்கும் என்று நம்புவதாக கூறினார்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion