Maserati GranTurismo: அப்படி போடு..! இந்தியா வருகிறது மசெராட்டி கிரான்டூரிஸ்மோ - லுக்கே அசத்துதே..!
Maserati GranTurismo: மசெராட்டி நிறுவனத்தின் புதிய கிரான்டூரிஸ்மோ மாடல் கார் அடுத்த ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Maserati GranTurismo: இரண்டு கதவுகள் கொண்ட கிராண்ட் டூரரின் முழு-எலக்ட்ரிக் ஃபோல்கோர் வேரியண்ட் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் மசெராட்டி கார்:
Maserati நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் இரண்டாம் தலைமுறை Maserati GranTurismo மற்றும் அதன் முழு-எலக்ட்ரிக் Folgore வேரியண்டை அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் கால கட்டத்தில் GranTurismo மாடலும், அக்டோபர்-டிசம்பர் காலத்தில் GranTurismo Folgore அதாவது முழு மின்சார வேரியண்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
புதிய மசராட்டி GranTurismo பவர்டைன்:
கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய மசெராட்டி கிரான்டூரிஸ்மோ, தோற்றத்தில் அதன் முந்தைய மாடலை போலவே காட்சியளிக்கிறது. நேர்த்தியான, நீண்ட பானட் முதல் கேப்-பேக் நிலைப்பாடு வரை புதிய பிளாட்ஃபார்மில் அமர்ந்திருந்தாலும். 3.0-லிட்டர் ட்வின்-டர்போ V6 இன்ஜின் முன்புற ஆக்சிலுக்கு சற்று பின்னால் பொருத்தப்பட்டுள்ளது. மொடெனா டிரிமில் 490hp மற்றும் 600Nm ஆற்றலையும், செயல்திறன் சார்ந்த Trofeo டிரிமில் 550hp மற்றும் 650Nm ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது. ஆல்-வீல் டிரைவ் இரண்டிலும் நிலையானதாக இருக்கும். GranTurismo Modena 3.9 வினாடிகளிலும், Trofeo 3.5 வினாடிகளிலும் 100kph வேகத்தை எட்டுகிறது.
உட்புற, வெளிப்புற வடிவமைப்பு:
கிரான்டூரிஸ்மோவின் எந்த டிரிம் இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படும் என்பதை மசெராட்டி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. சர்வதேச சந்தைகளில், 2+2 கிராண்ட் டூரர் பியான்கோ (வெள்ளை), கிரிஜியோ மராட்டியா (சாம்பல்), கிரிஜியோ மராட்டியா மேட் (மேட் கிரே), நீரோ ரிபெல் (உலோக கருப்பு), ப்ளூ எமோசியோன், ப்ளூ நோபில் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய GrandTurismo இன் கேபினின் வடிவமைப்பு Grecale SUV இல் ஒத்திருக்கிறது. கிரான்டூரிஸ்மோவை விலையை மசெராட்டி எவ்வளவு நிர்ணயிக்கும் என தெரியாத நிலையில், இது பென்ட்லி கான்டினென்டல் ஜிடி போன்றவற்றுடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் விலை ரூ. 3 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய மசெராட்டி GranTurismo Folgore பவர்டிரெய்ன்:
புதிய மின்சார GranTurismo Folgore ஆனது 92.5kWh (83kWh பயன்படுத்தக்கூடிய) T-வடிவ பேட்டரியைப் பெறுகிறது, இது மூன்று மோட்டார்களுக்கு (முன் அச்சில் ஒன்று மற்றும் பின்புறம் இரண்டு) சக்தியை அனுப்புகிறது. மொத்த வெளியீடு 760hp ஆகும். இந்த 2,260kg மின்சார வாகனமானது வெறும் 2.7 விணாடிகளிலேயே 0-100kph வேகத்தை எட்டும்.
புதிய மசெராட்டி GranTurismo Folgore வடிவமைப்பு:
GranTurismo Folgore மின்சார வாகனமானது எக்சாஸ்டிங் குழாய்கள் இல்லாதது போன்ற, பெட்ரோல் வேரியண்ட்களுக்கு எதிரான பல சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. இந்த மாடல் விற்பனைக்கு வரும்போது, Folgore EV க்கு நேரடிப் போட்டி என எதுவும் இருக்காது. இருப்பினும், Porsche Taycan , Audi e-tron GT மற்றும் Mercedes-AMG EQS 53 ஆகிய மாடல்கள் ரைவல் ஆகிய அமையலாம்.