மேலும் அறிய

Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?

Maruti Brezza SUV Booking: மாருதி சுசூகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட எஸ்யுவி ஆன ப்ரேஸ்ஸா கார் மாடலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Maruti Brezza SUV Booking: மாருதி சுசூகி புதிய ப்ரேஸ்ஸாவில் இடம்பெற உள்ள அம்சங்களின் விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

அப்க்ரேடட் ப்ரேஸ்ஸா எஸ்யுவி - முன்பதிவு தொடக்கம்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் வரும் ஜுலை 23ம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள, புதிய ப்ரேஸ்ஸாவிற்கான முன்பதிவை மாருதி சுசூகி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. விருப்பமுள்ள பயனர்கள் ரூ.11 ஆயிரம் என்ற டோக்கன் தொகையை செலுத்தி, இந்த மேம்படுத்தப்பட்ட காம்பேக்ட் எஸ்யுவியை முன்பதிவு செய்துகொள்ளலாம். மாருதி சுசூகி அரேனா டீலர்ஷிப்கள் மற்றும் ப்ராண்டின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளை அணுகி வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்யலாம். புதிய ப்ரேஸ்ஸாவானது பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் புதிய ஸ்டைலிங், கூடுதல் அம்சங்கள் மற்றும் சில மெக்கானிக்கல் அப்டேட்கள் இடம்பெறும்.

புதிய ப்ரேஸ்ஸா SUV - பெரிய டச்ஸ்க்ரீன், கூடுதல் அம்சங்கள்

புதிய ப்ரேஸ்ஸாவில் எதிர்பார்க்கப்படும் மிகப்பெரிய மாற்றங்கள் உட்புறம் கேபினில் இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி காம்பேக்ட் எஸ்யுவியில் பெரிய 10.25 இன்ச் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமானது தற்போதுள்ள இன்ச் யூனிட்டிற்கு மாற்றாக வழங்கப்பட உள்ளது. அதேநேரம், இதில் தொடர்ந்து வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்ட் ஆட்டோ அம்சங்கள் அப்படியே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோக பல கூடுதல் கனெக்டட் கார் அம்சங்களையும் மாருதி இதில் வழங்க உள்ளதாம். அவற்றோடு ஆட்டோமேடிக் க்ளைமேட் கன்ட்ரோல், வயர்லெஸ் போன் சார்ஜிங், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் டாப் வேரியண்ட்களில் ஹெட்-அப் டிஸ்பிளே ஆகியவையும் இடம்பெறக்கூடுமாம். இந்த புதிய அம்சங்களானது காம்பேக்ட் எஸ்யுவி செக்மெண்டில் ப்ரேஸ்ஸாவை மிகவும் போட்டித்தன்மையாக மாற்ற உள்ளது.

புதிய ப்ரேஸ்ஸா - புத்துணர்ச்சியூட்டப்பட்ட ஸ்டைலிங்

ப்ரேஸ்ஸாவின் வெளிப்புறமும் சில ஸ்டைலிங் அம்சங்களை புதியதாக பெறக்கூடுமாம். முன்புற பம்பர் மற்றும் க்ரில்லானது திருத்தப்பட்ட டிசைனை கொண்டிருக்குமாம். அதேநேரம், எல்இடி லைட்டிங் எலிமெண்ட்களும் அப்டேட் செய்யப்பட உள்ளதாம். எதிர்பார்ப்பு பட்டியலில் புதிய அலாய் வீல்கள் மற்றும் கூடுதல் வண்ண ஆப்ஷன்களும்  கிடைக்குமாம். காரின் ஒட்டுமொத்த தோற்றமானது பெரும்பாலும் எந்தவித மாற்றமும் பெறப்போவதில்லை. அதேநேரம், அப்டேட்களானது காருக்கு புதிய பார்வையை வழங்குமாம். 

இதையும் படியுங்கள்: Carans Clavis: நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்

6 ஸ்பீட் மேனுவல், சிஎன்ஜி பேக்கிங்:

மேம்படுத்தப்பட்ட ப்ரேஸ்ஸாவில் வழங்கப்படும் மிக முக்கியமான அப்டேட்டாக 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸின் இணைப்பு கருதப்படுகிறது. இதன் மூலம் தற்போதுள்ள 5 ஸ்பீட் யூனிட் கைவிடப்படுகிறது. இந்தக் கூடுதல் கியர், நெடுஞ்சாலைப் பயணத்தை மேலும் எளிதாக்குவதோடு, எரிபொருள் சிக்கனத்தையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விக்டோரிஸ் கார்களில் காணப்படும் அமைப்பைப் போலவே, வாகனத்தின் கட்டமைப்புக்கு அடியில் பொருத்தப்பட்ட சிஎன்ஜி டேங்க்குடன் இந்த சிஎன்ஜி எடிஷன் நடைமுறைக்கு உகந்ததாக மாறக்கூடும். வழக்கமான சிலிண்டர் அமைப்போடு ஒப்பிடும்போது, ​​இந்த வடிவமைப்பு அதிக பூட் ஸ்பேஸை வழங்குகிறது.

புதிய ப்ரேஸ்ஸா - இன்ஜின் ஆப்ஷன்கள்

ம்ற்றபடி மேம்படுத்தப்பட்ட ப்ரேஸ்ஸாவானது வழக்கமான 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இரண்டு ஆப்ஷன்களும் நீடிக்கும். ஃபேக்டரி-பொருத்தப்பட்ட CNG எடிஷனௌம் காரின் லைன் - அப்பில் தொடர உள்ளது. ஃப்ராங்க்ஸில் உள்ள 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினையும் மாருதி அறிமுகப்படுத்தலாம் என கூறப்பட்டாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.


Maruti Brezza: நெக்ஸான், வென்யு ரெடியா..! மாருதியின் புதிய SUV-க்கான முன்பதிவு தொடக்கம் - அப்க்ரேட்கள் எப்படி?

புதிய ப்ரேஸ்ஸா - விலை

கடந்த 2016ம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது முதலே, ப்ரெஸ்ஸா மாருதியின் அதிகம் விற்பனையாகும் எஸ்யுவிக்களில் ஒன்றாக தொடர்கிறது. கடந்த பத்தாண்டுகளில் இது இந்தியாவில் 14 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்களை விற்பனையாகியுள்ளது. புதிய எடிஷனானது உள்நாட்டு சந்தையில் டாடா நெக்ஸான்,  ஹுண்டாய் வென்யு, கியா சோனெட், மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, ஸ்கோடா கைலாக், ரெனால்ட் கைகர், டொயோட்டா டைஸர் மற்றும் மாருதி சஃப்ராங்க்ஸ் ஆகியவற்றிடமிருந்து போட்டியை எதிர்கொள்கிறது. இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் தொடங்கி ரூ.15 லட்சம் வரை நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget