மேலும் அறிய

Carans Clavis: நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்

Indias Cheapest Electric MPV Carens Clavis: நாட்டின் மலிவான மின்சார எம்பிவியான காரென்ஸ் க்ளாவிஸ் கார் மாடலை, மலிவு விலையில் சொந்தமாக்குவதற்கான் நிதி திட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Indias Cheapest Electric MPV Carens Clavis:  கியாவின் காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார கார் மாடலின் விலை ரூ.18 லட்சத்தில் தொடங்கி ரூ.25 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது.

நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி

கார்களின் பயன்பாடு என்பது இந்தியாவில் மிகவும் சாதரண விஷயமாக மாறி வருகிறது. தங்களது தேவைகள் மற்றும் பயன்பாடுகளுக்கு ஏற்ப பயனர்கள் தங்களுக்கான கார்களை தேர்வு செய்து வருகின்றனர். பட்ஜெட், ப்ரீமியம், செடான், எஸ்யுவி, ஹேட்ச்பெக், எம்பிவி, பெட்ரோல், டீசல், ஆட்டோமேடிக், மேனுவல் மற்றும் மின்சார கார்கள் என பலதரப்பட வாகனங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இந்நிலையில், குடும்பத்தில் 5 முதல் 7 பேரை வைத்துக்கொண்டு, பட்ஜெட்டில் ஒரு தரமான மின்சார காரை தேடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கான சரியான தேர்வாக, நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி ஆன கியாவின் காரென்ஸ் க்ளாவிஸ் இருக்கும். அதனை பெரிய அளவிலான நிதி அழுத்தங்கள் இன்றி எளிய முறையில் சொந்தமாக்குவதற்கான நிதி திட்ட விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

காரென்ஸ் க்ளாவிஸ் EV - விலை விவரங்கள்

பேட்டரி வேரியண்ட்கள் உள்ளிட்டவையின் அடிப்படையில் காரென்ஸ் களாவிஸ் மின்சார காரானது, 17 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை விலை ரூ.18 லட்சத்தில் தொடங்கி ரூ.25 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரை நீள்கிறது. ஒருவேளை இதன் எண்ட்ரி லெவல் காரை நீங்கள் தேர்வு செய்தால், சென்னையில் அதன் ஆன் - ரோட் விலை சுமார் ரூ.19 லட்சம் வரை நீள்கிறது. இதில் எக்ஸ் - ஷோரூம் விலை ரூ.18 லட்சம், பதிவுக்கட்டணம் சுமார் ரூ.13,500, காப்பீட்டு கட்டணம் சுமார் ரூ.67 ஆயிரம் மற்றும் இதர கட்டணங்கள் சுமார் ரூ.19 ஆயிரம் அடங்கும்.

காரென்ஸ் க்ளாவிஸ் EV - EMI விவரங்கள்

பொதுவாகவே வங்கிக் கடன் உதவியுடன் காரை வாங்க விரும்புபவர்கள், பெருந்தொகையை முன்பணமாக செலுத்துவிட்டு, கணிசமான தொகையை கடனமாக பெறுவதே லாபகரமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் நீண்ட கால கடன்சுமை மற்றும் வட்டி செலவை பெரிய அளவில் குறைக்க முடியும். அதோடு, நல்ல சிபில் ஸ்கோரை வைத்திருப்பதன் மூலம், வங்கிகள் 7.45 வட்டி சதவிகிதத்தில் இருந்து கூட வாகன கடன் வழங்க முன்வருகின்றன. அந்த வகையில் சுமார் ரூ.10 லட்சத்தை முன்பணமாக செலுத்தி காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார காரின் எண்ட்ரி லெவல் வேரியண்டை தேர்வு செய்தால், மீதமுள்ள சுமார் ரூ.9 லட்சத்திற்கு மட்டுமே நீங்கள் கடனுதவியை அணுக வேண்டி இருக்கும். 

இதையும் படியுங்கள்: Carens Clavis EV: 490KM ரேஞ்ச் கொடுக்கும் மின்சார காருக்கு ரூ.1.8 லட்சம் தள்ளுபடி - விலை, அம்சங்கள், வசதிகள்

அந்த வகையில் 8 சதவிகித வட்டியுடன் 7 ஆண்டுகளுக்கு கடனை திருப்பி செலுத்த முடிவு செய்தால், மாதம் நீங்கள் சுமார் 14 ஆயிரம் ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். அசலுடன் கூடுதலாக வட்டியாக சுமார் ரூ.2.78 லட்சத்தை செலுத்தி இருப்பீர்கள். ஒட்டுமொத்தமாக சுமார் ரூ.21.78 லட்சத்தை செலுத்தி இந்த மின்சார எலெக்ட்ரிக் எம்பிவியை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். ஒருவேளை முன்தொகையை  அதிகமாக செலுத்தினால் உங்களது வட்டி சுமை மற்றும் மாதாந்திர தவணை வெகுவாக குறையக்கூடும்.

காரென்ஸ் க்ளாவிஸ் EV- 490KM ரேஞ்ச்

காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார காரானது 42KWh மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால்404 கிலோ மீட்டர் தொடங்கி 490 கிலோ மீட்டர் வரையில் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நிஜ உலக பயன்பாட்டில் 320 கிலோ மீட்டர் தொடங்கி 380 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிப்பதாக பயனர்கள் தெரிவிக்கின்றனர். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 8.4 விநாடிகளில் எட்டும் என கூறப்படுகிறது. 6 சீட்டர், 7 சீட்டர், இரண்டு வகையிலான சீட் கான்ஃபிகரேஷனில் கிடைக்கும் இந்த காரானது.  உள்ளூர் சந்தையில்  BYD eMax 7 மற்றும் மஹிந்த்ரா XEV 9S ஆகிய மாடல்களுடன் போட்டியிடுகிறது.


Carans Clavis: நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் எம்பிவி - 5 ஸ்டார் ரேட்டிங், 6 & 7 சீட்டர், 490KM ரேஞ்ச் - EMI விவரங்கள்

காரென்ஸ் க்ளாவிஸ் EV - அம்சங்கள், வசதிகள்

விலைக்கு நிகரான அம்சங்கள் மற்றும் வசதிகள் காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷன் பெற்றுள்ளது. அதன்படி 12.25 இன்ச் அல்லது 12.3 இன்ச் எச்டி டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் அதே அளவிலான டிஜிட்டல் ட்ரைவர் க்ளஸ்டர் இடம்பெறுகிறது. வெண்டிலேடட் முன் இருக்கைகள், 4 வே பவர் அட்ஜெஸ்டபள்  ஓட்டுனர் இருக்கை, 64 வண்ணங்களிலான ஆம்பியண்ட் லைட்டிங், 8 ஸ்பீக்கர் போஸ்  ப்ரீமியம் சவுண்ட் சிஸ்டம், இன்டெக்ரேடட் மேனுவல் சன்ப்ளைண்ட்ஸ், பில்ட் இன் ப்யூரிஃபையர் ஆகியவை உள்ளன.

காரென்ஸ் க்ளாவிஸ் EV - பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பான பயணங்களுக்காக 6 ஏர் பேக்குகள், ஆல் வீல் டிஸ்க் ப்ரேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், வெஹைகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மெண்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், மிகவு ம் துல்லியமான 360 டிகிரி கேமரா, முன் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக ஸ்டாப் & கோ அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிசன் அவாய்டன்ஸ் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற 20 அட்டானமஸ் அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS வசதி ஆகியவை காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனில் வழங்கப்பட்டுள்ளன. காரென்ஸ் க்ளாவிஸ் பாதுகாப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. அதேநேரம், இதன் முந்தைய எடிஷனான காரென்ஸ் பெரியவர்களுக்கான பாதுகாப்பு பிரிவில் 3 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கான பிரிவில் 5 ஸ்டார்களையும் பெற்று இருந்தது. அதே நிலையை காரென்ஸ் க்ளாவிஸ் மின்சார எடிஷனும் தொடரும் என கருதப்படுகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
E20 பெட்ரோலால் கார்களுக்கு அதிக ஆபத்தா; பைக்குக்கா? துரு, மைலேஜ் பாதிப்பு உறுதி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Embed widget