Land Rover Evoque: புதிய லேண்ட் ரோவர் எவோக் 2024 - தாறுமாறான விலை, ஈடான அம்சங்கள் உண்டா?
New Land Rover Evoque 2024: புதிய லேண்ட் ரோவர் எவோக் மாடல் கார் சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
New Land Rover Evoque 2024: புதிய லேண்ட் ரோவர் எவோக் மாடல் காரின் விலை, இந்திய சந்தையில் 67 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Land Rover Evoque 2024:
சர்வதேச ஆட்டோமொபைல் சந்தையில் மட்டுமின்றி இந்தியாவிலும்,புதுப்புது மற்றும் ஆடம்பர எஸ்யுவி வாகனங்களின் அறிமுகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் லேண்ட் ரோவர் அதன் புதிய Evoque மாடல் காரை அறிமுகப்படுத்தியுள்ளது, இது அதன் கூபே பாணி காம்பாக்ட் சொகுசு SUV ஆக உள்ளது. எவோக் ஒரு ஸ்போர்ட்டியர் எஸ்யூவி என்பதோடு, இந்தியாவில் புதிய வேலார் போன்ற புதிய லேண்ட் ரோவர் கார்களில் இருப்பதைப் போன்ற ஸ்டைலிங் மாற்றங்களைப் பெறுகிறது.
வடிவமைப்பு:
புதிய எவோக் ஃப்ளோட்டிங் சன்ரூஃப் மற்றும் ஃப்ளஷ் கதவு கைப்பிடிகள் உட்பட ஒட்டுமொத்த தோற்றத்தை தக்க வைத்துள்ளது. ஆனால் புதிய டிஆர்எல்களுடன் புதிய மெலிதான ஹெட்லேம்ப்கள் போன்ற ஸ்டைலிங் மாற்றங்களையும் பெற்றுள்ளது. மற்ற லேண்ட் ரோவர் எஸ்யூவிகளைப் போலவே இது புதிய தோற்றத்தைக் கொண்ட கிரில்லையும் பெறுகிறது.
உட்புறம் புதிய கியர் ஷிஃப்டர் மற்றும் புதிய 28.95 செமீ (11.4) கர்வ்ட் கிளாஸ் டச்ஸ்க்ரீன் புதியதாக உள்ளது. பெரும்பாலான இயற்பியல் பொத்தான்களுக்கு மாற்றான பல அம்சங்கள் இந்த டச் ஸ்க்ரீனில் வழங்கப்பட்டுள்ளன. இந்த புதிய தொடுதிரை காரணமாக, அதிக இடவசதி கிடைக்கிறது. வயர்லெஸ் டிவைஸ் சார்ஜிங் பிளஸ் மற்றும் ஒரு பனோரமிக் சன்ரூஃப் அம்சங்களும் உள்ளன. இதோடு, 3D சரவுண்ட் வியூ, கிளியர்சைட் கிரவுண்ட் வியூ மற்றும் கிளியர்சைட் இன்டீரியர் ரியர் வியூ ஆகிய அம்சங்களும் இதில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.
காரில் உள்ள மற்ற வசதிகள்:
காற்று சுத்திகரிப்பு கருவியில் PM2.5 வடிகட்டுதல் மற்றும் CO2 மேலாண்மை வசதி உள்ளது. ஸ்டீயரிங் வீலில் புதிய குரோம் டிரிம், சென்டர் கன்சோல் டிரிம் மற்றும் ஏர் வென்ட்கள் உள்ளன. கூடுதலாக புதிய ஷேடோ கிரே ஆஷ் வெனீர் டிரிம்மும் உள்ளது. டிரிபெகா ப்ளூ மற்றும் கொரிந்தியன் ப்ரோன்ஸ் ஆகிய வெளிப்புற வண்ணங்களில் இந்த கார்கள் கிடைக்கின்றன. அதே சமயம் நேர் எதிர் வண்ணத்திலான ரூஃப் ஆப்ஷன்கள் அதாவது நார்விக் பிளாக் மற்றும் கொரிந்தியன் ப்ரோன்ஸுடன் வெவ்வேறு அலாய் வீல்கள் உள்ளன. புதிய எவோக் இப்போது 48 V லித்தியம்-அயன் பேட்டரியுடன் லேசான ஹைப்ரிட் அமைப்புடன் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கிறது.
இதன் ஆரம்ப விலை ரூ. 67.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓட்டுனருக்கு முக்கியத்துவம் அளிப்பதன் அடிப்படையில் புதிய எவோக் உருவாக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதோடு, எவோக் கார் மாடலின் பல அம்சங்கள், ஏற்கனவே இருக்கும் அதன் சிஸ்டர்ஸ் கார் மாடல்களை ஒத்திருக்கிறது.