Kia Carens Clavis: புக் பண்ணிடலாமா..! வெளியானது கியா கிளாவிஸ் - 7 ட்ரிம்கள், 1.5L இன்ஜின், தாராளமான அம்சங்கள்
New Kia Carens Clavis: கியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது புதிய ஃபிளாக்ஷிப் மாடலாக, கிளாவிஸ் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

New Kia Carens Clavis: கியா நிறுவனத்தின் கிளாவிஸ் கார் மாடலுக்கான முன்பதிவு, நள்ளிரவு 0.01 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
கியா கிளாவிஸ் வெளியீடு:
கியா நிறுவனம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது புதிய காரென்ஸ் கிளாவிஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. முன்னதாக கிளாவிஸ் மாடலானது காரென்சின் ஃபேஸ்லிஃப்டாக இருக்கும் என கூறப்பட்டது. ஆனால், புதிய கிளாவிஸ் ஆனது காரென்ஸ் மாடலை காட்டிலும் கூடுதல் பிரீமியம் எடிஷனாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கியாவின் லைன் - அப்பில் காரென்ஸை காட்டிலும் உயர்நிலையில் கிளாவிஸ் நிலைநிறுத்தப்பட உள்ளது. அதேநேரம், காரென்ஸ் கார் மாடலும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
It’s more than a reveal. It’s movement, redefined.
— Kia India (@KiaInd) May 8, 2025
The Clavis - Arriving soon.#Kia #KiaIndia #TheKiaClavis #TheClavis #TheNextFromKia #MovementThatInspires
https://t.co/ZGds6JKQTA
முன்பதிவு எப்போது?
கிளாவிஸ் கார் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் விலை வரும் ஜுன் மாதம் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. அதற்கு முன்னோடியாக இன்று நள்ளிரவு 0.01 அதாவது 9ம் தேதி முதல், விருப்பமுள்ளவர்கள் கிளாவிஸ் காருக்கான முன்பதிவை மேற்கொள்ளலாம். கியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் அல்லது அதிகாரப்பூர்வ ஷோரூம்களை அணுகி, ரூ.25 ஆயிரம் மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். கிளாவிஸ் காரென்ஸ் கிளாவிஸ் கார் மாடலின் விலை ரூ.10.60 லட்சம் முதல் ரூ.19.50 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள்:
காரென்ஸ் கிளாவிஸின் வெளிப்புற பகுதி புத்துயிர் பெற்றுள்ளது. காரின் முன்புற பகுதியானது ஸ்ப்லிட் முகப்பு விளக்குடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. எல்இடி உடன் இணைக்கப்பட்ட டெயில் லேம்ப்கள், 17 இன்ச் கிறிஸ்டல் கட் டூயல் டோன் அலாய் வீல்கள், ட்வின் 26.62 இன்ச் பனோரமிக் டிஸ்பிளே, டூயல் பேன் பனோரமிக் சன்ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், முன்புறத்தில் வெண்டிலேடட் இருக்கைகள், இன் - பில்ட் நேவிகேஷன், போஸ் ஆடியோ சிஸ்டம் போன்ற பல தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. போஸ் மோட் எனும் வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பின்புற இருக்கையில் இருப்பவர்கள், ஒட்டுநருக்கு அருகில் இருக்கும் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்து, கால்களை வைப்பதற்கான இடத்தை அதிகரிக்கலாம்.
பாதுகாப்பு அம்சங்கள்:
காரென்ஸ் கிளாவிஸ் ஆனது ADAS எனப்படும் லெவல் 2 அட்வான்ஸ்ட் ட்ரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் எனும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. சாலையில் நம்பிக்கையுடன் வாகனத்தை ஓட்டுவதற்கு ஏதுவாக, 20-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மற்றும் ஓட்டுனருக்கு உதவக்கூடிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் சிஸ்டம், ரியர் ஆக்குபெண்ட் அலெர்ட் ஆகியவற்றுடன், 18 ஆக்டிவ் மற்றும் பாசிவ் பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் இடம்பெற்றுள்ளன.
ட்ரிம், கலர் ஆப்ஷன்கள்:
காரென்ஸ் கிளாவிஸ் மாடலானது ஒட்டுமொத்தமாக HTE, HTE(O), HTK, HTK+, HTK+(O), HTX & HTX+ என 7 வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. மொத்தமாக 8 வண்ண விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி, ஒவோரி சில்வர் க்ளோஸ், பீட்டர் ஆலிவ், இம்பீரியல் ப்ளூ, கிளாசியர் பைட் பியர்ல், கிராவிட்டி கிரே, ஸ்பார்க்ளிங் சில்வர், அரோரா பிளாக் பியர்ல் மற்றும் கிளியர் ஒயிட் ஆகிய நிறங்களில் புதிய காரென்ஸ் கிளாவிஸ் விற்பனைக்கு வரவுள்ளது.
இன்ஜின் விவரங்கள்:
காரென்ஸ் கார் மாடலில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின் கிளாவிஸ் மாடலிலும் தொடர்கிறது. அதன்படி, 1.5 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட், டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களும் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. இதில் பெட்ரோல் நேட்சுரல் ஆஸ்பிரேடட் இன்ஜின் 6 ஸ்பீட் மேனுவ ட்ரான்ஸ்மிஷனுடன் கிடைக்கிறது. டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் MT, 6 ஸ்பீட் iMT மற்றும் 7 ஸ்பீட் DCT ட்ரான்ஸ்மிஷன்களை கொண்டுள்ளது. டீசல் இன்ஜின் ஆனது 6 ஸ்பீட் MT மற்றும் AT ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை வழங்குகிறது. காரென்ஸ் கார் மாடலானது 16 முதல் 21 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது.




















