(Source: ECI/ABP News/ABP Majha)
Jawa 42 FJ: டக்கரு..! வந்தாச்சு புதிய ஜாவா 42 FJ மோட்டார்சைக்கிள், புதுசா என்னவெல்லாம் இருக்கு?
Jawa 42 FJ: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய ஜாவா 42 FJ மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Jawa 42 FJ: புதிய ஜாவா 42 FJ மோட்டார்சைக்கிள் விலை, இந்திய சந்தையில் ரூ.1.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஜாவா 42 FJ மோட்டார்சைக்கிள் அறிமுகம்:
கடந்த மாதம் மேம்படுத்தப்பட்ட 42 அறிமுகத்திற்குப் பிறகு, கிளாசிக் லெஜெண்ட்ஸ் இப்போது ஜாவா 42 FJ என்ற புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடல் 42 வரம்பின் ஒரு பகுதியாகும். அதேநேரம், அடிப்படை ஜாவா 42 ஐ விட இதன் விலை ரூ.26,000 அதிகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜாவா 42 எஃப்ஜேயின் விலை ரூ.1.99 லட்சம் தொடங்கி ரூ.2.20 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Jawa 42 FJ வடிவமைப்பு விவரங்கள்:
42 FJ ஆனது 790 மிமீ இருக்கை உயரம், 178 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 184 கிலோ எடையை கொண்டுள்ளது. இது வழக்கமான ஜாவா 42 ஐ விட 2 கிலோ அதிகம் . 42 FJ நிலையான ஜாவா 42 ஐ விட 2hp மற்றும் 3Nm அதிகமாக உற்பத்தி செய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அம்சங்களைப் பொறுத்தவரை, பைக்கில் எல்இடி விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் சிங்கிள்-பாட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை உள்ளன.
The wait is over. The answer you’ve been looking for is here. Meet the new Jawa 42 FJ, a riding machine that brings power and exceptional design to redefine your journey. Get ready to find ultimate purpose and direction with each ride! #Jawa42TheAnswer pic.twitter.com/Va0EOwIpmV
— Jawa Motorcycles (@jawamotorcycles) September 3, 2024
ஸ்டைலிங் அடிப்படையில் 42 FJ ஆனது Yezdi Roadster போன்ற ஒட்டுமொத்த நிழற்படத்தைக் கொண்டுள்ளது மற்றும் டேங்க் கிளாடிங்கில் புத்தாக்கம் செய்யப்பட்ட அலுமினியம் பூச்சு மற்றும் புதிய LED ஹெட்லேம்ப் ஆகியவற்றைப் பெறுகிறது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் சுவிட்ச் கியர் ஆகியவை இணை நிறுவனமான யெஸ்டியிடம் இருந்து பகிர்ந்து கொள்வதாக தெரிகிறது. கூடுதலாக, இது ஒரு ஸ்போக் அல்லது அலாய் வீல் அமைப்புடன் இருக்கலாம். அலாய் வீல்கள் 42 பாபரில் உள்ளதைப் போன்றே உள்ளன. இது இரட்டை-சேனல் ஏபிஎஸ் தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் ஒற்றை-சேனல் ஏபிஎஸ் மாறுபாடு சலுகையில் இல்லை.
Jawa 42 FJ இன்ஜின் விவரங்கள்:
ஜாவா 42 FJ ஆனது 28.7bhp மற்றும் 29.62Nm ஆற்றலை வழங்கும் 334cc, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் ஸ்லிப் மற்றும் உதவி கிளட்ச் உள்ளது. அதேநேரம், இந்த இன்ஜின் 350 மாடலுக்கு 22.57hp மற்றும் 28.1Nm ஆற்றலை மட்டுமே உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.
Jawa 42 FJ விலை விவரங்கள்:
அரோரா க்ரீன் மேட் ஸ்போக்கின் விலை ரூ.1.99 லட்சத்திலும், அரோரா க்ரீன் மேட் அலாய்க்கு ரூ.2.10 லட்சத்திலும், மிஸ்டிக் காப்பர் மற்றும் காஸ்மோ ப்ளூ மேட்டின் விலை ரூ.2.15லிருந்து தொடங்குகிறது. அதேசமயம் டீப் பிளாக் மேட் ரெட் கிளாட் மற்றும் டீப் பிளாக் மேட் பிளாக் கிளாட் விலை ரூ.2.20 லட்சம். இது ராயல் என்ஃபீல்டு கிளாசிக்/புல்லட் 350, ஹோண்டா சிபி350 மற்றும் ஹீரோ மேவ்ரிக் 440 போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. புதிய Jawa 42 FJக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன, விரைவில் டெலிவரி தொடங்கப்படும்.