மேலும் அறிய

Adventure Bikes: இளசுகளை சுண்டி இழுக்கும் அட்வென்சர் பைக்குகள்..! பவர்ஃபுல் இன்ஜின், பீஸ்ட் மோட் செயல்திறன்

Adventure Bikes: இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் இளசுகள் அதிகம் விரும்பி வாங்கும், அட்வென்சர் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Adventure Bikes: இந்திய மோட்டார்சைக்கிள் சந்தையில் இளசுகள் அதிகம் விரும்பி வாங்கும், முதன்மையான அட்வென்சர் பைக் மாடல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 

இளசுகளை கவரும் அட்வென்சர் பைக்குகள்..

இந்திய மோட்டார் சைக்கிள் சந்தையில் அட்வென்சர் பைக்குகள் இளைஞர்களின் பிரதான தேர்வாக உள்ளது. கரடுமுரடான செயல்திறன், நவீன அம்சங்கள் மற்றும் எளிய அணுகலுடன் கூடிய விலை ஆகியவற்றின் கலவையாக பல அட்வென்சர் பைக்கள் இந்திய உள்ளூர் சந்தையில் கிடைக்கின்றன. அந்த பட்டியலில் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450, ட்ரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 400 X, ஹீரோ Xபல்ஸ் 200 4V, சுசூகி V-ஸ்டோர்ம் SX, KTM 390 அட்வென்சர், யெஸ்டி அட்வென்சர் மற்றும் டிவிஎஸ் அபாச்சி RTX 300 ஆகிய மாடல்கள் தனித்துவமாக விளங்குகின்றன. இந்த மாடல்கள் குறித்த முக்கிய விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

டாப் 7 அட்வென்சர் பைக்குகள்..

1. ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450

ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் 450 மாடலின் விலை சுமார் ரூ.3.06 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 39.48எச்பி மற்றும் 40என்மீ டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 452சிசி லிக்விட் கூல்ட் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இதனுடன் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. 17 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க், ஆயிரத்து 510 மில்லி மீட்டர் வீல் பேஸ், 230 மில்லி மீட்டர் க்ராவுண்ட் க்ளியரன்ஸ் ஆகியவை முக்கியமான அம்சங்களாக பார்க்கப்படுகிறது. லிட்டருக்கு 25 முதல் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கப்படும் என கூறப்படும் நிலையில், டேங்கை நிரப்பினால் 425 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் இடைநிற்றலின்றி பயணிக்க முடியும். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 6.5 விநாடிகளிலேயே எட்டிவிடுகிறது. 


Adventure Bikes: இளசுகளை சுண்டி இழுக்கும் அட்வென்சர் பைக்குகள்..! பவர்ஃபுல் இன்ஜின், பீஸ்ட் மோட் செயல்திறன்

2. ட்ரையம்ப் ஸ்க்ரேம்ப்ளர் 400 X

ட்ரையம்ப் ப்ராண்டின் ஸ்க்ரேம்ப்ளர் 400 X மாடலானது சுமார் ரூ.2.7 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது ட்ரையம்ப் ஸ்பீட் மாடலில் உள்ள அதே 398.15சிசிச்  லிக்விட் கூல்ட் சிங்கிள் சிலிண்டர் இன்ஜினை பயன்படுத்துகிறது. இதன் மூலம் 39.5எச்பி மற்றும் 37.5என்மீ டார்க்கை உற்பத்தி செய்யமுடியுமாம். கரடுமுரடான சாலைகளை எளிதில் கையாளும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 13 லிட்டர் மைலேஜ் தரும் இந்த பைக்கானது, டேங்கை முழுமையாக நிரப்பினால் இடைநிற்றலின்றி சுமார் 300 முதல் 350 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 3.7 முதல் 4 விநாடிகளிலேயே எட்டிவிடுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். அதிகபட்சமாக மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.


Adventure Bikes: இளசுகளை சுண்டி இழுக்கும் அட்வென்சர் பைக்குகள்..! பவர்ஃபுல் இன்ஜின், பீஸ்ட் மோட் செயல்திறன்

3. ஹீரோ Xபல்ஸ் 200 4V

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 4V, 199.6சிசி ஆயில்-கூல்ட் சிங்கிள்-சிலிண்டர் இன்ஜினை கொண்டு இயங்குகிறது. இது 18.9 hp பவரையும், 17.35 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் வகையில், 5-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பேஸ் வேரியண்ட் 1,410 மிமீ வீல்பேஸும், டாப்-எண்ட் வேரியண்ட் 1,427 மிமீ வீல்பேஸும் கொண்டுள்ளது. க்ரவுண்ட் க்ளியரன்ஸ் பேஸ் மாடலுக்கு 220 மிமீ ஆகவும், டாப் வேரியன்ட்டிற்கு 270 மிமீ ஆகவும் உள்ளது. இதன் தொடக்க விலை ரூ. 1.41 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 32 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படும் நிலையில், இதன் டேங்கை முழுமையாக நிரப்பினால் இடைநிற்றலின்றி சுமார் 300 முதல் 400 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என கூறப்படுகிறது. பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 13.52 விநாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

4. சுசூகி V-ஸ்டோர்ம் SX

சுசூகி வி-ஸ்ட்ரோம் எஸ்எக்ஸ் பைக்கின் தொடக்க விலை ரூ. 1.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 249சிசி சிங்கிள்-சிலிண்டர் ஆயில்-கூல்ட் இன்ஜின் ஆனது, 6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டு, 26.13 hp ஆற்றலையும், 22.22 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.  1,440 மிமீ வீல்பேஸ் மற்றும் 205 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸைக் கொண்டு மோசமான சாலைகளிலும் திறம்பட செயல்பட வழிவகை செய்கிறது. லிட்டருக்கு சுமார் 35 முதல் 45 கிலோ மீட்டர் தூரம் மைலேஜ் வழங்கும் என கூறப்படுவதால், டேங்கை முழுமையாக நிரப்பினால் நிஜ உலக பயன்பாட்டில் சுமார் 400 முதல் 500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம்.  அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

5. KTM 390 அட்வென்சர்

KTM 390 அட்வென்சரில் இடம்பெற்றுள்ள 398.63 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்விட் கூல்ட் இன்ஜின் ஆனது, 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் இணைந்து 45.37 hp ஆற்றலையும், 39 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. ஆயிரத்து 470 மில்லி மீட்டர் வீல்பேஸ் மற்றும் 237 மில்லி மீட்டர் க்ரவுண்ட் க்ளியரன்ஸை கொண்டுள்ளது. லிட்டருக்கு சுமார் 13.5 முதல் 15 லிட்டர் மைலேஜ் வழங்குவதால், டேங்கை நிரப்பினால் 300 முதல் 350 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கலாம். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 6.2 விநாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

Adventure Bikes: இளசுகளை சுண்டி இழுக்கும் அட்வென்சர் பைக்குகள்..! பவர்ஃபுல் இன்ஜின், பீஸ்ட் மோட் செயல்திறன்

6.யெஸ்டி அட்வென்சர்

யெஸ்டி அட்வென்ச்சரின் தொடக்க விலை ரூ. 1.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 29.22 hp ஆற்றலையும் 29.8 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் வகையில், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்ட 334cc லிக்விட்-கூல்ட் இன்ஜினைக் கொண்டுள்ளது. 15.5 லிட்டர் கொள்ளளவிலான எரிபொருள் டேங்க் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 1,465 மிமீ வீல்பேஸ் மற்றும் 815 மிமீ இருக்கை உயரத்தைக் கொண்டுள்ளது. லிட்டருக்கு 28 முதல் 30 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதால், டேங்கை முழுமையாக நிரப்பினால் குறைந்தது சுமார் 450 கிலோ மீட்டர் தூரம் வரை இடைநிற்றலின்றி பயணிக்கலாம். அதிகபட்சமாக மணிக்கு 142 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

Adventure Bikes: இளசுகளை சுண்டி இழுக்கும் அட்வென்சர் பைக்குகள்..! பவர்ஃபுல் இன்ஜின், பீஸ்ட் மோட் செயல்திறன்

7. டிவிஎஸ் அபாச்சி RTX 300

இந்திய சந்தையில் ரூ. 1.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் கிடைக்கும், TVS அப்பாச்சி RTX 300, 299.1cc ஒற்றை-சிலிண்டர் லிக்விட்-கூல்ட் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 35.51 hp பவரையும் மற்றும் 28.5 Nm டார்க்கையும் வழங்குகிறது.  6-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. நிஜ உலக பயன்பாட்டில் 32 முதல் 36 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதால், டேங்கை முழுமையாக நிரப்பினால் 400 முதல் 450 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் எனும் வேகத்தை சுமார் 7.95 விநாடிகளில் எட்டுகிறது. அதிகபட்சமாக மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Mahindra Vision S: வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
வர்றான் டா குட்டி சிங்கம்.! ஆகஸ்ட் 15-ல் விஷன் எஸ்-ஐ வெளியிடும் மஹிந்திரா.? எகிறும் எதிர்பார்ப்பு
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs DMK: எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
எஸ்கேப் ஆகுறிங்களா? திமுகவிற்காகவே இன்று தனித்தீர்மானம் கொண்டு வரும் தவெக அரசு - பக்கா ப்ளான்
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? - வானிலை எச்சரிக்கை
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Embed widget