(Source: Poll of Polls)
New Gen Hyundai Venue: அப்க்ரேடட் டேஷ்போர்டில் மிரட்டும் வென்யு - லெவல் 2 ADAS, 16 இன்ச் அலாய் வீல்கள் - புதிய தலைமுறை ரெடி
New Gen Hyundai Venue: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை, வென்யு கார் மாடலானது நவம்பர் 4ம் தேதி அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

New Gen Hyundai Venue: ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை வென்யு கார் மாடலில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஹுண்டாய் புதிய தலைமுறை வென்யு ரெடி
ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை வென்யு கார் மாடலானது, தீவிரமாக மறைக்கப்பட்டு அடிக்கடி இந்திய சாலையில் சோதனைகளில் ஈடுபட்டதை புகைப்படங்கள் வாயிலாக அறிய முடிந்தது. இதன் மூலம் காரின் மேம்பாட்டு பணிகள் முழுமை அடைந்து இருப்பதும் தெரிய வந்தது. நடப்பாண்டின் மிகவும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ள கார் வெளியீட்டில், இந்த காம்பேக்ட் எஸ்யுவியும் அடங்கும். இந்நிலையில் தான், விழாக்காலத்தில் புதிய காருக்கான தேவை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, நவம்பர் 4ம் தேதி புதிய தலைமுறை வென்யுவை சந்தைப்படுத்த ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிய தலைமுறை வென்யு - வெளிப்புற அப்டேட்
மிகவும் கவனிக்கத்தக்க அப்டேடட் அம்சமாக, வாகனத்தின் முன்புற மாற்றங்கள் கருதப்படுகிறது. மெஷ் க்ரில்லானது ஹாரிசாண்டல் பார்கள் மூலமாக மாற்றப்பட்டுள்ளது. முன் பகுதியின் முழு அகலத்திற்கும் இந்த பார்கள் இருப்பதால், சாலையில் வாகனத்திற்கு நிலைபான உறுதிப்பாடு கிடைக்கிறது. காரின் ஒட்டுமொத்த அமைப்பானது பழைய பாணியிலேயே தொடர, கூடுதலாக C வடிவிலான பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி விளக்குகள் மற்றும் முகப்பு விளக்குகள் மாடர்ன் தோற்றத்தை வழங்குகின்றன.
க்ரேட்டா மற்றும் அல்கசார் கார் மாடல்களிலிருந்து ஸ்டைலிங் அம்சங்கள் கடன் வாங்கப்பட்டுள்ளன. அதன்படி முன்புறத்தில் வெர்டிகலில் ஸ்டேக்ட் முகப்பு விளக்குகள் பழைய மாடலிலிருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் மட்டுமின்றி, பின்புறம் மற்றும் பக்கவாட்டிலும் கார் குறிப்பிட்ட அப்டேட்களை பெற்றுள்ளது.
பக்கவாட்டிலும் இந்த காரானது புதிய பாடி பேனல்களை பெற்றுள்ளது. புதிய 16 இன்ச் அலாய் வீல்கள் இடம்பெற்றுள்ளன. பின்புறத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், புத்துயிரூட்டப்பட்ட டெயில்கேட், மேம்படுத்தப்பட்ட டெயில் லேம்ப் க்ளஸ்டர்ஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை வென்யு - உட்புற அம்சங்கள்
புதிய தலைமுறை வென்யுவில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றங்கள் என்பது உட்புறத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, மையப்பகுதியில் பெரிய டச்ஸ்க்ரீன், டூயல் பேன் சன்ரூஃப், வெண்டிலேடட் முன்புற இருக்கைகள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் மற்றும் லெவல் 2 ADAS ஆகிய அம்சங்கள், வென்யு கார்கள் இடம்பெற்றுள்ள ரேஞ்சில் முதல்முறையாக வழங்கப்படுகிறது. கூடுதலாக, முற்றிலும் மறுவடிவமைக்கப்பட்ட டேஷ்போர்ட் லே-அவுட், புதிய செண்டர் கன்சோல், ஸ்டியரிங் வீல் மற்றும் மேம்படுத்தப்பட்ட அப்ஹோல்ஸ்ட்ரி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன.
புதிய தலைமுறை வென்யு - இன்ஜின் விவரங்கள்
புதிய தலைமுறை வென்யுவில் இன்ஜின் அடிப்படையில் எந்தவித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தற்போதைய எடிஷனில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் ஆகிய ஆப்ஷன்கள், அதே ட்ரான்ஸ்மிஷன்களுடன் அப்படியே தொடர உள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை
அப்டேட்களுக்கு ஏற்ப புதிய தலைமுறை வென்யு எடிஷனானது குறைந்தபட்ச விலை உயர்வை எதிர்கொள்ளக்கூடும். சமீபத்திய ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைத் தொடர்ந்து, தற்போதைய தலைமுறை ஹூண்டாய் வென்யு ரூ.1.33 லட்சம் வரை விலைக் குறைப்பைப் பெற்றது. அதன்படி, இப்போது அதன் விலை 7.26 லட்சத்திலிருந்து ரூ.12.32 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





















