Hyundai Creta: புதுசா பெருசா..! ஹைப்ரிட் டூ ADAS - SUVக்களின் கிங் க்ரேட்டாவில் வரும் டாப் 5 அப்க்ரேட்கள்
Hyundai Creta 2027: இந்திய கார் சந்தையில் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹுண்டாய் க்ரேட்டாவின், புதிய எடிஷனில் இடம்பெறப்போகும் டாப் 5 அப்க்ரேட்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Hyundai Creta 2027: இந்திய கார் சந்தையில் எஸ்யுவி பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹுண்டாய் க்ரேட்டாவின், புதிய எடிஷனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
ஹுண்டாய் க்ரேட்டா 2027 எடிஷன்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி பிரிவு விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹுண்டாய் க்ரேட்டாவின், முற்றிலும் மேம்படுத்தப்பட்ட புதிய எடிஷன் அடுத்த ஆண்டு சந்தைப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சாலை பரிசோதனைகள் ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில்,கிடைத்துள்ள புகைப்படங்கள் கார் தொடர்பான பல்வேறு தகவல்களை தெரிவிக்கின்றன. கடைசியாக கடந்த 2024ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் க்ரேட்டா ஃபேஸ்லிஃப்ட் எடிஷன் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அந்த காருக்கு மீண்டும் மிகப்பெரிய மேம்படுத்தல்கள் வழங்கப்பட உள்ளன. அந்த வகையில் இடம்பெற உள்ள மிகப்பெரிய அப்டேட்கள் தொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஹுண்டாய் க்ரேட்டா 2027 - டாப் 5 அப்க்ரேட்கள்
1. முன்பை விட அளவில் பெரியது
சாலை சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பழைய க்ரேட்டாவை விட புதிய எடிஷன் அளவீடுகள் அடிப்படையில் பெரியதாக இருக்கும் என உறுதியாகியுள்ளது. அதன்படி, கூடுதல் நீளமாகவும், அகலமாகவும் இருப்பதால் கேபினில் அதிக இடவசதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளை நிறுவனமான கியாவின் செல்டோஸில் உயர்த்தப்பட்டதை போல, தாய் நிறுவனமான ஹுண்டாயின் க்ரேட்டா மாடலிலும் 95 மில்லி மீட்டர் நீளம் மற்றும் 30 மில்லி மீட்டர் அகலம் மற்றும் 80 மில்லி மீட்டர் வீல்பேஸ் அதிகரிப்பை காண முடியும் என தெரிகிறது.
2. தீவிரமான டிசைன் லேங்குவேஜ்
புதிய எடிஷன் க்ரேட்டாவானது ஹுண்டாயின் புதிய K3 ப்ளாட்ஃபார்மில் கட்டமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தான் கியாவின் செல்டோஸ் மாடலும் உருவானது. எஸ்யுவி ஆனது தீவிரமான டிசைன் வேலைப்பாடுகள் மட்டுமின்றி, இரண்டாவது தலைமுறை செல்டோஸிலிருந்து சில ஸ்டைலிங் அம்சங்களையும் கடன் பெறக்கூடும். மேலும், புதிய வென்யுவில் இருந்து ஈர்க்கப்பட்டு கண்புருவம் மாதிரியான எல்இடி பகல் நேரங்களில் ஒளிரும் விளக்குகளுடன் கூடிய எல்இடி முகப்பு விளக்குகள், திருத்தப்பட்ட முன்புற பம்பர் மற்றும் புதியதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற உள்ளனவாம்.
3. புதிய கனெக்ட் தொழில்நுட்பம்
புதிய க்ரேட்டாவில் வழங்கப்பட உள்ள மிகப்பெரிய அப்க்ரேடாக ப்ளியோஸ் கனெக்ட் சிஸ்டம் கருதப்படுகிறது. இதில் பெரிய மத்திய டச்ஸ்க்ரீன் மற்றும் மெல்லிய ட்ரைவர்ஸ் டிஸ்பிளே அடங்கும். வாய்ஸ் கமேண்ட் மூலம் பல்வேறு அம்சங்களை செயல்படுத்தும் வகையிலான பில்ட் இன் க்ளியோ AI தொழில்நுட்பமும் வழங்கப்படலாம். இந்தப் புதிய செயலிச் சந்தையானது, மூன்றாம் தரப்பு செயலிகளை உருவாக்கி ப்ளியோஸ் கனெக்ட்டில் ஒருங்கிணைக்கவும் வழிவகுக்கும்.
4. மேம்படுத்தப்பட்ட ADAS
புதிய க்ரேட்டாவின் உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி மற்றும் ட்ரிம்கள் வழங்கப்படலாம். அம்சங்கள் அடிப்படையில் மேம்படுத்தப்பட்ட ADAS தொழில்நுட்பம், முன்புற இருக்கையில் ஹெட்ரெஸ்ட், பின்புற இருக்கையில் அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
5. ஹைப்ரிட் பவர்ட்ரெயின்
ஹுண்டாய் உருவாக்கி வரும் புதிய சக்திவாய்ந்த ஹைப்ரிட் பவர்டிரெய்னானது புதிய 2027 க்ரெட்டாவுடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை அடிப்படையாகக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. புதிய தலைமுறை க்ரேட்டாவின் வேரியண்ட்களில், தற்போதுள்ள 115bhp, 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 160bhp, 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 116bhp, 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களும் கிடைக்கும். டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களும் மாற்றமின்றி தொடர வாய்ப்புள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















