Upcoming Cars: பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாப் 10 கார்கள் - முழு லிஸ்ட் இதோ..!
Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள, விரைவில் அறிமுகமாக உள்ள சில முக்கிய கார்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
![Upcoming Cars: பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாப் 10 கார்கள் - முழு லிஸ்ட் இதோ..! most awaited 10 upcoming cars in india toyota altroz racer tata harrier ev check list automobile news Upcoming Cars: பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள டாப் 10 கார்கள் - முழு லிஸ்ட் இதோ..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/1e82df657cd50b73114f6d402d9747a31711685727975732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Upcoming Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா, மஹிந்திரா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்களின், புதிய கார் மாடல்கள் பெரும் எதிர்பார்ப்புக்ளை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்கள்:
வாடிக்கையாளர்களின் தேவைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தொடர்ந்து புதுப்புது கார் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் எதிர் வரும் மாதங்களில் பல கார்கள் நம் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் சில மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் உள்நாட்டு சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள, எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
டாடா அல்ட்ரோஸ் ரேசர்:
டாடா அல்ட்ரோஸ் ரேசர் மிகவும் எதிர்பார்க்கப்ஒபடும் ஹேட்ச்பேக் கார் மாடல் ஆகும். இதில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆனது, 6 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்போர்ட்டியாக தோற்றமளிக்கும் வகையிலான சக்கரங்கள் மற்றும் டயர்கள் போன்ற வடிவமைப்பு மாற்றங்களைக் கொண்டுள்ளது. Tata Altroz ரேசர் இந்திய சந்தையில் ஹூண்டாய் i20 Nline-க்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா தார் 5 டோர்:
மஹிந்திரா தார் இந்திய சந்தையில் மிகவும் வெற்றிகரமான எஸ்ய்வி ஆகும். ஆனால் இதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால், ஐந்து கதவுகள் கொண்ட மாடலின் வெளியீட்டிற்காக பலர் காத்திருக்கின்றனர். இடவசதியுடன், பயணிக்கக் கூடிய நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம். பழைய மாடலில் உள்ள 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் புதிய மாடலிலும் தொடரலாம்.
Hyundai IONIQ 6 (Hyundai IONIQ 6):
ஹூண்டாய் IONIQ 6 என்பது ஹூண்டாய் இந்தியா வரிசையில் உள்ள பெரிய மின்சார கார்களில் முதன்மையானது. இது கியா EV6 மற்றும் BMW i4 போன்ற பிரீமியம் சொகுசு கார்களுக்கு போட்டியாக அமையும். ஹூண்டாய் ஐயோனிக் 5 போன்ற அதே பிளாட்ஃபார்மில் கட்டப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 614 கிலோமீட்டர் பயணிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதன் DC ஃபாஸ்ட் சார்ஜர் மூலம், வெறும் 18 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட்:
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல் சிறந்த சப் காம்பாக்ட் எஸ்யூவிகளில் ஒன்றாகும். இந்த செக்மென்ட்டில் உள்ள சக்திவாய்ந்த கார்களில் இதுவும் ஒன்று. தோற்றத்தையும் அம்சங்களையும் புதுப்பித்து அதன் புதுப்பிக்கப்பட்ட பதிப்பை மஹிந்திரா சந்தைப்படுத்த உள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட்டின் இன்ஜின் ஆப்ஷன்கள் முந்தைய பதிப்பைப் போலவே இருக்கும்.
டாடா ஹாரியர் EV:
டாடா ஹாரியரின் மின்சார எடிஷன் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒமேகா இயங்குதளத்தில் வடிவமைக்கப்படும். டாடா ஹாரியர் EV, மஹிந்திரா நிறுவனத்தின் XUVE8 மாடல் உடன் இந்திய சந்தையில் போட்டியிட உள்ளது. வடிவமைப்பைப் பொறுத்தவரை, இது கிட்டத்தட்ட டாடா ஹாரியரைப் போலவே இருக்கும். ஆனாலும் மின்சார வாகனம் என்பதைக் குறிக்க சில தனித்தனி மாற்றங்கள் வழங்கப்படலாம்.
மஹிந்திரா XUV300 EV:
மஹிந்திரா XUV300 பெரும் வரவேற்பை பெற்றது அனைவரும் அறிந்ததே. இதன் விளைவாக அந்த மாடலின் மின்சார எடிஷன் சந்தைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இது Tata Nexon EV-க்கு போட்டியாக அமையும். இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும் சூழலில், XUV300 EVயும் இணைந்தால் போட்டி மேலும் அதிகமாகும். மஹிந்திரா XUV300 EV பற்றிய அதிக விவரங்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆனால் மஹிந்திரா XUV400 ல் உள்ள இன்ஜின் இருக்கும் என்று கூறப்படுகிறது.
டாடா கர்வ் (Tata Curvv):
டாடா கர்வ் அண்மையில் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது. நாட்டில் மிகவும் போட்டி நிறைந்த, காம்பேக்ட் எஸ்யுவி பிரிவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுக்கு போட்டியாக அமையும். முதலில் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உடன் வெளியாக உள்ள இந்த கார், பின்னர், 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் T GDI இன்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹுண்டாய் கோனா EVஃபேஸ்லிஃப்ட்:
மின்சார வாகனங்களில் ஹூண்டாய் கோனா தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு காலத்தில் இந்த செக்மென்ட்டில் அதிகம் தேடப்பட்ட இந்த கார், புதிய வரவுகளால் காலப்போக்கில் பின்தங்கி விட்டது. இந்நிலையில், ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ள ஹூண்டாய் கோனா EV இன் ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த காரில் முற்றிலும் புதிய இன்டீரியர் மற்றும் வெளிப்புறம் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மிகவும் மேம்படுத்தப்பட்ட பேட்டரி பேக் காரணமாக கோனா நல்ல வரம்பையும் வழங்கும்.
ஹுண்டாய் அல்கசார் ஃபேஸ்லிஃப்ட்:
Hyundai Alcazar 7 இருக்கைகள் கொண்ட SUVகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும். Hyundai Alcazar இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். இதில் ADAS மற்றும் ஹூண்டாய் கிரேட்டா போன்ற ஒப்பனை மாற்றங்கள் இருக்கும் என்று தெரிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)