MG Windsor EV: சைலண்டா சம்பவம் செய்யும் விண்ட்சர் - NO.1, டாடாவால கூட முடியல.. செடான், எஸ்யுவின் கலவை
MG Windsor EV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் விண்ட்சர் மின்சார கார் மாடல், தொடர்ந்து விற்பனையில் அசத்தி வருகிறது.

MG Windsor EV: நாட்டின் மின்சார கார் பிரிவில் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ள டாடாவால் கூட, எம்ஜி விண்ட்சரின் ஆதிக்கத்தை தடுக்க முடியவில்லை.
நாட்டின் மிகச்சிறந்த மின்சார கார்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையானது எதிர்பார்த்தை விட கூடுதல் வேகமாகவே, மின்சார கார்களை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வகையில் உள்நாட்டில் அதிகம் விற்பனையாகும் மின்சார கார்களின் பட்டியலில் எம்ஜி நிறுவனத்தின் விண்ட்சர் கார் மாடல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.நாட்டின் மின்சார கார் பிரிவில் மிகப்பெரிய போர்ட்ஃபோலியோவை கொண்டுள்ள டாடாவால் கூட, எம்ஜி விண்ட்சரின் ஆதிக்கத்தை தடுக்க முடியவில்லை. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் இந்த காரின் 7 ஆயிரத்து 741 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2024-25 நிதியாண்டில் சுமார் 19 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகி, அந்த ஆண்டில் அதிகம் விற்பனையான மின்சார காராகவும் திகழ்கிறது. அப்படி, மக்கள் போட்டி போட்டு வாங்கும் அளவிற்கு இந்த காரில் என்ன தான் இருக்கிறது என ஆராய்ந்தால் அதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
எம்ஜி விண்ட்சர் - நடைமுறைக்கு உகந்த டிசைன்
செடானின் சொகுசு அம்சங்கள், எஸ்யுவிக்கான இடவசதி ஆகியவற்றின் கலவையாக, குடும்ப பயன்பாட்டிற்காக கார் வாங்க விரும்புவோருக்கான நல்ல தேர்வாக உள்ளது. வழக்கமான எஸ்யுவிக்கு மிகவும் நெருக்கமான டிசைனை கொண்டிருப்பதால், புதியதாக மின்சார காரை நோக்கி நகர்பவர்களின் கவனத்தை ஈர்க்கிறது. பயணிகளின் சொகுசை மேம்படுத்தும் ரிக்ளைனிங் ரியர் சீட் உள்ளிட்ட அம்சங்களுடன் நல்ல விசாலமான இடவசதியையும் கொண்டுள்ளது. நன்கு வடிவமைக்கப்பட்ட ஆழமான கார்கோ பகுதியுடன் 604 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ளது.
எம்ஜி விண்ட்சர் - அம்சங்கள், தொழில்நுட்ப வசதிகள்
விண்ட்சர் கார் மாடல் லெவல் 2 ADAS பேக்கேஜை கொண்டுள்ளது. இதன் மூலம் அதிகப்படியான பாதுகாப்பு மற்றும் வசதிக்காக ஆட்டோமேடட் ட்ரைவிங் கண்ட்ரோல்களை வழங்குகிறது. டேஷ்போர்டின் மையமாக 15.6 இன்ச் டச்ஸ்க்ரீன் இடம்பெற்றுள்ளது. இது பொழுதுபோக்கு மற்றும் கனெக்டட் அம்சங்களுக்கான அணுகலை வழங்குகிறது. இதுபோக பனோரமிக் க்ளாஸ் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, i- ஸ்மார்ட் கனெக்டட் கார் டெக்னாலஜி, வெண்டிலேடட் ஃப்ரண்ட் சீட்ஸ் மற்றும் வெஹைகிள் டூ லோட் டெக்னாலஜி போன்றவையும் இடம்பெற்றுள்ளன.
சில மாடல்களில் ஏர் ஃபில்டர் வசதிகள், 18 இன்ச் அலாய் வீல்கள், ஸ்மார்ட் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள், ரெய்ன் சென்செங் வைப்பர்ஸ், இம்பேக்ட் சென்சிங் ஆட்டோ டோர் அன்லாக், ஸ்பீட் சென்சிங் ஆட்டோ டோர் லாக் மற்றும் ஹில் டிசெண்ட் கண்ட்ரோல் ஆகிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. விண்ட்சரில் உள்ள சில அம்சங்கள், இந்த விலை வரம்பில் கிடைக்கும் மின்சார கார்களில் பெரும்பாலும் கிடைக்காது.
எம்ஜி விண்ட்சர் - பேட்டரி, ரேஞ்ச்
விண்ட்சர் கார் மாடலானது முதல் 4 வேரியண்ட்களில் 38KWh பேட்டரி பேக்கையும், எக்ஸ்க்ளூசிவ் ப்ரோ மற்றும் எசென்ஸ் ப்ரோ ஆகிய டாப் வேரியண்ட்களில் 52.9KWh பேட்டரி பேக்கையும் கொண்டுள்ளது. இதில் சிறிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 332 கிலோ மீட்டரும், பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 449 கிலோ மீட்டரும் ரேஞ்ச் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களின் கருத்தின்படி, சுமார் 250 முதல் 350 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் அளிக்கிறது. டிசி ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தினால் சிறிய பேட்டரியை 45 நிமிடங்களிலேயே 20 முதல் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்ய முடியும். பெரிய பேட்டரிக்கு 50 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்ளும்.
எம்ஜி விண்ட்சர் - எளிய அணுகலுக்கான விலை:
விண்ட்சர் காரின் விலையானது மின்சார கார்களுடன் மட்டுமின்றி, பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கும் போட்டியிடும் வகையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகப்படியான பயனர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக திகழ்கிறது. பேட்டரிக்கு Baas நடைமுறை பின்பற்றப்படுவதால், இந்த காரின் கொள்முதல் விலை என்பது மிகவும் அணுகக் கூடியதாக உள்ளது. பெட்ரோல் வகை கார்களுக்கு இணையானதாகவும் உள்ளது. அதன்படி, 6 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் விண்ட்சர் மின்சார காரின் விலை, பேட்டரி இல்லாமல் வெறும் ரூ.9.99 லட்சத்தில் தொடங்குகிறது. பேட்டரியுடன் சேர்த்து வாங்கினால், 13 லட்சத்து 99 ஆயிரத்தில் தொடங்கி 18 லட்சத்து 39 ஆயிரம் (எக்ஸ் - ஷோரூம்) ரூபாய் வரையில் நீள்கிறது.
எம்ஜி விண்ட்சர் - சர்வீஸ் சென்டர்கள்
MG நிறுவனம் மின்சார வாகனங்களை கையாள பயிற்சி பெற்ற பட்டறைகளின் வலையமைப்பை நிறுவியுள்ளது. உரிமையாளர்களின் கவலைகளைக் குறைக்க கார் மற்றும் பேட்டரிக்கு வலுவான உத்தரவாத தொகுப்புகளை வழங்குகிறது. விண்ட்சர் விற்பனையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பிரிவை நாடும் பல நுகர்வோருக்கு இயல்பான தேர்வாக விண்ட்சர் உருவெடுத்துள்ளது.





















