Mercedes CLA Electric: இந்தியாவில் பென்ஸ் எலக்ட்ரிக் கார் அறிமுகம்; மிடில் கிளாஸ் மக்களும் வாங்கும் தாறுமாறான விலை!
இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலக்ட்ரிக் காரின் விலை பிரிமியம் செக்மெண்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ எலக்ட்ரிக் இந்தியாவில் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் போட்டி கார்கள் விவரத்தை கீழே அறியலாம்.
ஜெர்மனியைச் சேர்ந்த முன்னணி சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ், தனது புதிய சிஎல்ஏ எலக்ட்ரிக் (Mercedes-Benz CLA Electric) காரை இந்தியச் சந்தையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த காரின் எதிர்பார்க்கப்படும் விலை, தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இங்கே..
ஒருமுறை சார்ஜ் செய்தால் 750 கி.மீ.
மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய எம்எம்ஏ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் கார் இதுவாகும். இந்த கார் அதிநவீன 800V கட்டமைப்புத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக அதிவேக சார்ஜிங் வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கார் CLA 200 மற்றும் CLA 250+ ஆகிய இரு வேரியண்ட்களைக் கொண்டுள்ளது.
அதேபோல பென்ஸ் காரில் சக்திவாய்ந்த பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 750 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில், டேஷ்போர்டு முழுவதும் பரவியிருக்கும் வகையிலான புதிய எம்பியுஎக்ஸ் சூப்பர்ஸ்கிரீன், மேம்படுத்தப்பட்ட ஏடிஏஎஸ் (ADAS) பாதுகாப்பு அம்சங்கள், உயர்தர லெதர் இருக்கைகள் மற்றும் நவீன கனெக்டிவிட்டி வசதிகள் இடம்பெற்றுள்ளன.
விலை எவ்வளவு?
இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ள இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் சிஎல்ஏ எலக்ட்ரிக் காரின் விலை பிரிமியம் செக்மெண்டில் நிலைநிறுத்தப்பட உள்ளது. எனினும் இதன் எக்ஸ் ஷோரூம் விலை தோராயமாக ரூ. 55 லட்சம் முதல் ரூ.59 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள் யார் யார்?
இந்த சிஎல்ஏ எலக்ட்ரிக் மாடல், இந்திய சொகுசு மின்சார கார் சந்தையில் ஏற்கனவே விற்பனையில் உள்ள டெஸ்லா மாடல் ஒய், பிஒய்டி Seal, வால்வோ சி40 ரீசார்ஜ், கியா இவி6 (Kia EV6) ஆகிய முன்னணி கார்களுக்கு நேரடிப் போட்டியாக களமிறங்குகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்























