மேலும் அறிய

Kia Seltos: இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?

Kia Seltos SUV: இந்தியா மற்றும் சீனாவில் விற்பனை செய்யப்படும் கியா செல்டோஸ் எஸ்யுவி எடிஷன்களில் எது சிறந்தது என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

Kia Seltos SUV: கியா செல்டோஸ் எஸ்யுவியின் இந்தியா மற்றும் சீனா எடிஷன்களிடையே உள்ள வித்தியாசங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கியா செல்டோஸ் - இந்தியா Vs சீனா

கியாவின் புதிய தலைமுறை செல்டோஸ் தற்போது சீனாவிலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இதே புதிய தலைமுறை செல்டோஸ் மாடல் தான் இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதேநேஅம், சீனாவில் விற்பனை செய்யப்படும் கியா எடிஷனானது, இந்திய எடிஷனுடன் ஒப்பிடுகையில் மிகப்பெரிய அளவிலான வித்தியாசங்களை கொண்டுள்ளது. அது எப்படி? என பலருக்கும் கேள்வி எழலாம். அதுதொடர்பான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

செல்டோஸ் அளவீடுகள் - இந்தியா Vs சீனா எடிஷன்

சீனாவிற்கான கியா செல்டோஸ் 4460 மிமீ நீளம், 1830 மிமீ அகலம், 1640 மிமீ உயரம் மற்றும் 2690 மிமீ வீல்பேஸ் அளவீடுகளை கொண்டுள்ளது. இந்தியாவிற்கான செல்டோஸ் எடிஷனும் இதே அளவுகளைக் கொண்டுள்ளது. ஆனால் பூட் ஸ்பேஸில் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. சீனாவில் செல்டோஸ் 483 லிட்டர் பூட் ஸ்பேஸை கொண்டுள்ள நிலையில், இந்திய மாடலில் 447 லிட்டர் பூட் ஸ்பேஸ் மட்டுமே உள்ளது. இந்திய மாடலில் ஸ்பேர் டயர் பொருத்தப்பட்டிருப்பதே இதற்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் சீனாவிற்கான மாடலில் அவ்வாறு இல்லாமல் இருக்கலாம்.

செல்டோஸ் அம்சங்கள் - இந்தியா Vs சீனா எடிஷன்

செல்டோஸின் சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, இந்திய மாடலைக் காட்டிலும் சீன மாடல் மிகவும் மேம்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி, இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் பயணிகளின் பொழுதுபோக்குக்காக 27 இன்ச் மிக அகலமான டச்ஸ்க்ரீனும், ஓட்டுநருக்கென தனியாக 10 இன்ச் ஸ்க்ரீனும் இடம்பெற்றுள்ளன. இந்திய மாடலில் 'ட்ரினிட்டி ஸ்கிரீன்' இடம்பெற்றுள்ளது. ஆனால் பெயருக்கு ஏற்றார் போல் இன்றி இது ஓட்டுநருக்கான டிஸ்ப்ளே, இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் ஏசி கட்டுப்பாடுகளுக்கான ஒரு சிறிய ஐந்து இன்ச் யூனிட் (கனெக்டட் செட்டப்பில் சேர்க்கப்பட்டுள்ளது) ஆகியவற்றைக் கொண்ட ஒரு இரட்டை ஸ்க்ரீன் அமைப்பை பெற்றுள்ளது. எனவே, சீனாவில் வழங்கப்படும் பயணிகள் திரை இந்திய மாடலில் இடம்பெறவில்லை. 

இதுமட்டுமின்றி, சீனாவில் விற்பனையில் உள்ள செல்டோஸ் காரில் பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங், 100 kW டைப்-சி சார்ஜிங் போர்ட், பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை, ஹீடட் மற்றும் காற்றோட்ட வசதியுள்ள முன் இருக்கைகள், ஹீடட் ஸ்டீயரிங் வீல் மற்றும் எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சரவுண்ட்-சவுண்ட் சிஸ்டம் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

இதையும் படியுங்கள்: Top Range Cars: டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்

கியா செல்டோஸின் இந்திய எடிஷன் இதே அம்சங்களைக் கொண்டிருந்தாலும், ஹீட்டிங் வசதி (இந்திய தட்பவெப்ப நிலைக்கு இது அவசியமில்லை) மற்றும் 100 kW சார்ஜிங் ஆகியவை இல்லை. எனவே, அம்சங்களைப் பொறுத்தவரை, சீன எடிஷனில் கூடுதலாகக் கிடைக்கும் ஒரு சிறப்பம்சம் இரட்டை இன்ஃபோடெயின்மென்ட் யூனிட் ஆகும். பாதுகாப்பு அம்சங்களைப் பொறுத்தவரை, கியா செல்டோஸின் இரண்டு எடிஷன்களுமே லெவல்-2 ADAS அமைப்பை கொண்டுள்ளன.

செல்டோஸ் பவர்ட்ரெயின் - இந்தியா Vs சீனா எடிஷன்

சீனாவிற்கான செல்டோஸ், 1.5-லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் என இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. இந்திய மாடலில் கூடுதலாக 1.5-லிட்டர் டீசல் இன்ஜினும் சேர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆற்றல் அளவுகளில் ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது. சீனாவில், 1.5-லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 198 bhp மற்றும் 253 Nm ஆற்றலை வெளிப்படுத்துமாறு மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் இந்தியாவில் அதே இன்ஜின் 158 bhp மற்றும் 253 Nm ஆற்றலை மட்டுமே வெளிப்படுத்துகிறது. டார்க் அளவுகள் ஒரே மாதிரியாக இருக்கலாம், ஆனால் ஹார்ஸ்பவரில் பின் தங்கியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Kia Seltos: இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
இந்தியா Vs சீனா எடிஷன் - எந்த கியா செல்டோஸ் பெஸ்ட்? எஸ்யுவியில் உள்ள வித்தியாசங்கள் என்ன?
Top Range Cars: டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
டேங்க் ஃபுல் செய்தால் 1000KM ரேஞ்ச் கொடுக்கும் டாப் 5 கார் மாடல்கள் - விலை, மைலேஜ், ரேட்டிங்
Honda SUV: ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
ரூ.17 லட்சம் பட்ஜெட்டில் ஹோண்டாவின் புதிய 7 சீட்டர்..! ஹைப்ரிட் மைலேஜ் - வசதிகள், அம்சங்கள்
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
விவசாயிகளுக்கு சட்டசபையில் ஜாக்பாட்.! நெல், கரும்புக்கு ஊக்கத்தொகை உயர்வு- முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
TN Assembly Debate : ’மாண்புமிகு சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி, குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
’சாமி அமைச்சர் என்ற பன்னீர்செல்வம்’ குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்..!
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
பிரதமர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்: கோடிக்கணக்கில் மானியம், தகுதி, முன் அனுபவம்- விண்ணப்பிப்பது எப்படி?
TN Assembly : 'யார் ஆட்சியில் அதிக டென்ஷன்?' பேரவையில் MRK பன்னீர்செல்வம் – அமைச்சர் ஆனந்த் இடையே ஜாலியான விவாதம்..!
யார் ஆட்சியில் அதிக டென்ஷன்? பேரவையில் ஜாலியான விவாதம்..!
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
'தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் POWER' சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கர்ஜனை
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
Embed widget