Top 5 Hatchbacks: ரோடே இல்லாட்டியும் ஓட்ட முடியும், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஹேட்ச்பேக்குகள் - டாப் 5 மாடல்
Hatchback High Ground Clearance: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Hatchback High Ground Clearance: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் கிடைக்கும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டாப் 5 செடான் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஹேட்ச்பேக்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவிக்கு முன்பாக, செடானுக்கு அடுத்தபடியாக மக்களின் பிரதான தேர்வாக ஹேட்ச்பேக்குகள் விளங்கின. காம்பேக்டான வடிவமைப்பை கொண்டிருந்தபோதிலும், அதில் இடம்பெற்று இருந்த இடவசதியே மக்களை அதிகளவில் கவர்ந்தது. ஆனால், இன்று இந்தியாவின் மேடு பள்ளங்கள் நிறைந்த கரடுமுரடான சாலைகளை, எந்தவித அச்சமும் இன்றி கடந்து செல்ல அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ்யுவிக்களே சிறந்தவையாக உள்ளன. குறைந்த கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட கார்களை ஓட்டும்போது, வாகனத்தின் அடிப்பக்கத்தில் பெரும் சேதம் ஏற்படக்கூடும் என மக்கள் நம்புகின்றனர். ஆனால், தற்போதும் இந்திய சந்தையில் பாதுகாப்பான அளவில் கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட சில ஹேட்ச்பேக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி, இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட டாப் 5 ஹேட்ச்பேக்குகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
5. சிட்ரோயன் C3:
சிட்ரோயன் நிறுவனத்தின் C3 கார் மாடல் 180 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரனஸை கொண்டுள்ளது. நகர்ப்புற பயன்பாட்டிற்கான நடைமுறைக்கு உகந்ததாகவும், சில மோசமான சாலைகளில் கூட அட்டகாசமாக செயல்படும் விதமாகவும் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.7.63 லட்சத்தில் தொடங்கி ரூ.12.89 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார், எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் 19 முதல் 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் ஒரு ஸ்டார் கூட இந்த கார் வாங்கவில்லை என்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
4. மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ
இந்தியாவின் கரடுமுரடான சாலைகளை எளிதில் கையாளும் நோக்கில், டால் பாய் வடிவமைப்பை கொண்டுள்ள எஸ்-பிரெஸ்ஸோ காரும் 180 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. 8 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.5.10 லட்சத்தில் தொடங்கி ரூ.7.32 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார், எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் 24 முதல் 33 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் எஸ்-பிரெஸ்ஸோ ஒரே ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளது.
3. மாருதி சுசூகி இக்னிஸ்:
குட்டி எஸ்யுவியை போன்று காட்சியளிக்கும் இக்னிஸ் கார் மாடலானது, 180 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. இதன் மூலம் நகர்ப்புற பயன்பாட்டிற்கும் சராசரியான மோசமான சாலைகளை கையாள்வதற்கும் ஏற்றதாக உள்ளது. 11 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.7.02 லட்சத்தில் தொடங்கி ரூ.9.82 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. பெட்ரோல் இன்ஜினில் மட்டும் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த கார், லிட்டருக்கு சுமார் 21 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் இக்னிஸ் கார் மாடலும் ஒரே ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளது.
2. டாடா நியாகோ NRG
டாடா டியாகோவின் ரக்கெட் வெர்ஷனான NRG 181 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. இதன் மூலம் பலதரப்பட்ட மோசமான சாலைகளையும் எளிதில் கையாளும் ஹேட்ச்பேக்காக இது திகழ்கிறது. நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.8.59 லட்சத்தில் தொடங்கி ரூ.10.40 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார், எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் 20 முதல் 26 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு பரிசோதனையில் டாடா டியாகோ NRG கார் மாடல், 4 ஸ்டார்களை பெற்று இந்த பட்டியலில் உள்ள மிகவும் பாதுகாப்பான காராக திகழ்கிறது. மேலும் மோசமான சாலைகளிலும் டியாகோ NRG காரை ஓட்ட முடியும் என்ற நம்பிக்கையை மேலும் உயர்த்துகிறது.
5.ரெனால்ட் க்விட்
அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட ஹேட்ச்பேக் கார்களின் பட்டியலில், ரெனால்ட்டின் க்விட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது காரணம் இது 154 மில்லி மீட்டர் கிரவுண்ட் கிளியரன்ஸை கொண்டுள்ளது. தினசரி நகர்ப்புற பயன்பாட்டிற்கும் மோசமான சாலைகளையும் எளிதில் கடந்து செல்லவும் இது ஏதுவானதாக உள்ளது. 13 வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த காரின் விலை, சென்னையில் ரூ.5.61 லட்சத்தில் தொடங்கி ரூ.7.78 லட்சம் (ஆன் - ரோட்) வரை நீள்கிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்களில் கிடைக்கும் இந்த கார், எரிபொருள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அடிப்படையில் 21 முதல் 22 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. பாதுகாப்பு பரிசோதனையில்ரெனால்ட் க்விட் ஒரே ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளது.





















