Maruti Suzuki Victoris: அதுக்குள்ளவா..! காரின் விலையை ஏற்றிய மாருதி - விக்டோரிஸ் இப்போ எவ்ளோ காஸ்ட்லி தெரியுமா?
Maruti Suzuki Victoris: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகியின் விக்டோரிஸ் கார் மாடலின் விலை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti Suzuki Victoris: மாருதி சுசூகியின் விக்டோரிஸ் கார் மாடலின், டாப் ஸ்பெக் வேரியண்ட்களின் விலை 15 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
மாருதி சுசூகி விக்டோரிஸ்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் முதன்மையான கார் மாடல்களில் ஒன்றான, விக்டோரிஸ் மிட்-சைஸ் எஸ்யுவி ஆனத் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அதன் விலை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், இந்த விலை உயர்வு நடவடிக்கையானது டாப் எண்டில் உள்ள ZXi+(O) மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வேரியண்ட்களுடன் மட்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இந்த இரண்டு எடிஷன்களின் விலையும் தற்போது, 15 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கும் வந்துள்ளது. ஆரம்பத்தில் 6 வேரியண்ட்களில் ரூ.10.50 லட்சம் தொடங்கி ரூ.19.99 லட்சம் வரையிலான வரம்பில் இந்த கார் சந்தைப்படுத்தப்பட்டது. ஆனால், அறிமுக சலுகை காலம் முடிந்து அவற்றின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மாருதி விக்டோரிஸ்: புதிய விலை நிலவரம் என்ன?
விலை திருத்த நடவடிக்கைகளுக்கு முன்பாக, விக்டோரிஸின் ZXi+(O) வேரியண்டின் மேனுவல் எடிஷனின் விலையானது, ரூ.15.82 லட்சமாக இருந்தது. ஆட்டோமேடிக் எடிஷனின் விலை ரூ.17.77 லட்சமாகவும், ஆட்டோமேடிக் ஆல்வீல் ட்ரைவ் எடிஷனின் விலை ரூ.19.22 லட்சமாகவும் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் eCVT வேரியண்டின் விலை ரூ.19.99 லட்சமாகவும் இருந்தது. அதிலிருந்து ஒவ்வொரு எடிஷனுக்கும் ரூ.15 ஆயிரம் விலை அதிகரித்துள்ளது. இதனிடையே, மாருதி சுசூகி இந்த மிட்-சைஸ் SUV-க்கு ரூ.27,707 முதல் மாதாந்திர சந்தா திட்டத்தையும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தில் SUV-யின் விலை, பராமரிப்பு, பதிவு, காப்பீடு மற்றும் சாலையோர உதவி ஆகியவை அடங்கும். சந்தைப்படுத்தப்பட்ட முதல் மாதத்தில், உற்பத்தி ஆலையிலிருந்து 4,261 யூனிட் விக்டோரிஸ் கார்கள் டீலர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மாருதி விக்டோரிஸ் - இன்ஜின் விவரங்கள்
மாருதி விக்டோரிஸ் மூன்று இன்ஜின் விருப்பங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, 103bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5L மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல், 116bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5L ஸ்ட்ராங் ஹைப்ரிட் மற்றும் 89bhp ஆற்றலை உற்பத்தி செய்யக்கூடிய 1.5L பெட்ரோல்-CNG ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளில் மைல்ட் ஹைப்ரிட் மற்றும் CNG வகைகளுக்கு 5-ஸ்பீட் மேனுவல், மைல்ட் ஹைப்ரிட்டுக்கு மட்டும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட்டுக்கு மட்டும் eCVT ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. டாப்-எண்ட் ZX+ (O) AT வகைகள் AWD (ஆல்-வீல் டிரைவ்) அமைப்புடன் பிரத்தியேகமாக வழங்கப்படுகின்றன.
மாருதி விக்டோரிஸ் - பாதுகாப்பு அம்சங்கள்
இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள பாதுகாப்பான மாருதி சுசுகி கார்களில் விக்டோரிஸ் தான் முதலிடத்தில் உள்ளது. பாரத் NCAP மற்றும் குளோபல் NCAP சோதனைகளில் இந்த மிட்-சைஸ் SUV 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய 6 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, EBD உடன் ABS, Isofix சைல்டு சீட் மவுண்ட்கள் மற்றும் டயர் பிரஷர் கண்காணிப்பு அம்சங்களை கொண்டுள்ளது. லெவல்-2 ADAS தொழில்நுட்பத்தை கொண்டுள்ள முதல் மாருதி சுசுகி மாடலும் இதுதான்.
மாருதி விக்டோரிஸ் - முக்கிய அம்சங்கள்
- LED ஹெட்லைட்கள்
- LED ஃபாக் விளக்குகள்
- LED டெயில்லைட்டுகள்
- 17-இன்ச் அலாய் வீல்கள்
- பனோரமிக் சன்ரூஃப்
- 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்
- வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே
- 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே
- டால்பி அட்மாஸ் 8-ஸ்பீக்கர் ஒலி அமைப்பு
- காற்றோட்டமான முன் இருக்கைகள்
- சுற்றுப்புற விளக்குகள்
- வயர்லெஸ் சார்ஜிங்





















