Maruti Suzuki Grand Vitara: செப்டம்பரில் விற்பனைக்கு வருகிறது கிராண்ட் விட்டாரா; சிறப்பம்சங்கள் என்ன?
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா கார் மாடலில் என்னென்ன சிறப்பு இருக்கிறது?
ஆட்டோமொபைல் துறையில் மாருதி சுசூகி பிராண்டிற்கென (Maruti Suzuki) தனி இடம் உண்டு. பயனர்களுக்கு அனைவருக்குமான பட்ஜெட் விலை மற்றும் நவீன வசதிகள் கொண்ட கார்களை வழங்க வேண்டும் என்பது மாருதி சுசூகியின் நோக்கம் ஆகும். சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, மாருதி சுசூகியின் புதிய மாடல் எஸ்.யூ.வி,-யான 'Maruti Suzuki Grand Vitara’- வை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மாடல் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. மாருது சுசூகியின் தயாரிப்பில் வெளியாகும் ’hybrid’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட SUV இது. கிராண்ட் விட்டாரா மாடல் காரிற்கு ரூ.11,000 முன்பதிவு கட்டணம் ஆகும். இதன் முன்பதிவு நெக்ஸா விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த மாடல் இந்திய சந்தைகளில் மாருதி சுசூகியின் எஸ் கிராஸ் மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராண்ட் விட்டாரா கார் மாடல் சந்தையில் உள்ள கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர் மற்றும் எம்.ஜி. உள்ளிட்டவைகளுக்கு போட்டியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Maruti Suzuki Grand Vitara-வின் சிறப்பம்சங்கள்:
கிராண்ட் விட்டாரா காரில் இண்டீரியர் கருப்பு மற்றும் பிரவுன் ஷேடில் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ப்லிட் ரக ஹெட்லேம்ப் டிசைன், க்ரோம் இன்சர்ட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், பாடி நிறம் கொண்ட ORVM-கள், பிளாக் ரூஃப், ராப்-அரவுண்ட் எல்இடி டெயில் லைட்கள், டூ பீஸ் எல்இடி லைட் பார் உள்ளிட்டவைகள் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
இதன் மைல்டு ஹைப்ரிட் என்ஜின் 100 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் அளவுக்கு திறன் கொண்டிருக்கிறது, இத்துடன் 5 ஸ்பீடு மேன்வல் கியர்பாக்ஸ், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வசதியும் இருக்கிறது. இந்த மாடல் காரில் நான்கு டிட்ரைவிங் மோட்கள் இருக்கிறது, Auto, Snow, Rock, Sand உள்ளிட்ட நான்கு வகைகள் இருக்கின்றன.
ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் 115 ஹெச்.பி. பவர், என்ஜின் டார்க் 122 நியட்டன் மீட்டர்களாகவும், எலெக்ட்ரிக் மோட்டார் டார்க் 141 நியூட்டன் மீட்டர்களாகவும் உள்ளது. இந்த என்ஜினுடன் e-CVT ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
பானரோமிக் சன்ரூஃப் (panoramic sunroof) கொண்ட மாருதி சுசூகியின் முதல் மாடல் கார் கிராண்ட் விட்டாரா. 9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடேயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது. புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் சிஸ்டம் என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இந்த மாடல் கார் நீலம் (Celestial Blue), வெள்ளை (Arctic White), பிரவுன்( Chestnut Brown), சாம்பல் நிறம் ( Grandeur Grey), சிவப்பு (Opulent Red) மற்றும் சில்வர்( Splendid Silver) ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த மாடல் கார் இரண்டு நிற காம்பினேசனிலும் கிடைக்கிறது. சிகப்பு மற்றும் வெள்ளை (the Arctic White, Opulent Red), சில்வர் மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விற்பனை வரும் செப்டம்பர் மாதத்தில் தொடங்கும். காரின் விலை குறித்து அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஹைபிரிட் தொழில்நுட்பத்தின் விளக்க வீடியோவிற்கான லிங்க்...