மேலும் அறிய

Maruti Suzuki Ethanol Car: ஒரு கி.மீ-க்கு வெறும் 4 ரூபாய் தான்!100% எத்தனாலில் ஓடும் மாருதி கார்! மைலேஜ் எவ்ளோ தெரியுமா?

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, , 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் காரை ஜூன் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தக் கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து நிலையில் முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கும் காரை மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் இந்த காரின் சிறப்பம்சங்கள் விலை ஆகியவற்றை விரிவாக காணலாம். 

எப்போது அறிமுகம்?

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, , 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் காரை ஜூன் 5 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இந்தக் கார் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதையும், இறக்குமதி செய்யப்படும் எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு மாருதி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே இந்தத் தொழில்நுட்பம் குறித்து பலமுறை பேசி வருகிறார். பிரேசில் போன்ற நாடுகளில் வெற்றிகரமாக இருந்த இந்த மாடலை, மாருதி சுசுகி தற்போது இந்தியச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளது. 

பெட்ரோல் மற்றும் எத்தனாலில் இயங்கும்:

 நாம் பயன்படுத்தும் பெட்ரோலில் சிறிதளவு எத்தனால் சேர்க்கப்படுகிறது. ஆனால், மாருதி கொண்டுவரவிருக்கும் இந்தப் புதிய கார், E100 கிரேடு எத்தனாலில் இயங்குகிறது. அதாவது, இதற்கு பெட்ரோல், டீசல், சிஎன்ஜி அல்லது மின்சாரம் எதுவும் தேவையில்லை. இது முற்றிலும் ஒரு ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் இன்ஜின் ஆகும். இந்தக் காரில் உள்ள 1.2 லிட்டர் இன்ஜின், எத்தனால் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் திறன் கொண்டது. எத்தனால் கிடைக்காத இடங்களில் பெட்ரோலிலும் இதை இயக்கலாம். ஆனால், இது 100 சதவீதம் எத்தனாலைப் பயன்படுத்தும்போது, ​​இதன் செயல்திறன் அபாரமாக இருக்கும். 

இதன் மைலேஜ் எவ்வளவு?

தற்போது பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், எத்தனாலின் விலை மிகவும் குறைவாக உள்ளது. இந்தக் காரில் ஒரு கிலோமீட்டர் பயணச் செலவு வெறும் 3.5 முதல் 4 ரூபாய் மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது. 100 சதவீத எத்தனாலில் இயங்கும்போது, ​​இந்தக் கார் ஒரு லிட்டருக்கு 15 முதல் 18 கிலோமீட்டர் வரை மைலேஜ் வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பெட்ரோல் செலவுடன் ஒப்பிடும்போது பாதிக்கும் மேலான சேமிப்பை வழங்கும்.

எந்த மாடலில் வரவுள்ளது?

மாருதி சுசுகி எந்த மாடலை முதலில் அறிமுகப்படுத்தும் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால், சந்தை வட்டாரங்களின்படி, மாருதி வேகன் ஆர் அல்லது ஃபிராங்க்ஸின் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் பதிப்பு வெளிவர வாய்ப்புள்ளது. மாருதி இதற்கு முன்னர் ஃபிராங்க்ஸ் ஃப்ளெக்ஸ் ஃப்யூயல் மாடலை காட்சிப்படுத்தியிருந்தது. 

சிறப்பம்சங்கள்:

இந்த காரின் அமைப்பு சாதரண காரை போலவே இருந்தாலும் இன்ஜின் அமைப்பில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காரில் எவ்வளவு எத்தனால் உள்ளது என்பதையும், அது எவ்வளவு உள்ளது என்பதை அறிந்துகொள்ள சிறப்பு சென்சார்கள் உள்ளன. எத்தனால் காரணமாக ஏற்படும் அரிப்பைத் தடுக்க, சிறப்பு குழாய்கள் மற்றும் தொட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற அனைத்து நவீன அம்சங்களும் உள்ளன. 

விவசாயிகளுக்கும் ஜாக்பாட்

எத்தனால் கார், வாகன ஓட்டிகளுக்கு மட்டுமல்லாமல் நாட்டின் விவசாயிகளுக்கும் ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். எத்தனால் முக்கியமாக கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பிற விவசாயப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எத்தனாலின் பயன்பாடு அதிகரித்தால், விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமல்லாமல், வேளாண் சார்ந்த தொழில்களும் செழிக்கும். இது நமது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும். 

புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பது, வளிமண்டலத்தில் வெளியாகும் கார்பன் வெளியேற்றத்தை கணிசமாகக் குறைக்கும். இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், புவி வெப்பமயமாதலைக் குறைக்கவும் உதவும். இது இந்தியாவிற்குத் தூய்மையான ஆற்றலை நோக்கிய ஒரு முக்கியப் படியாகும்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

சிங்கிள் சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ் மாமே.. Numeros இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்ன?
சிங்கிள் சார்ஜில் 156 கி.மீட்டர் மைலேஜ் மாமே.. Numeros இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை என்ன?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Kia Midsize SUV: குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
குட்டீஸ்லா போதும், இது வீரனுக்கான டைம்..! கியாவின் முற்றிலும் புதிய மிட்-சைஸ் எஸ்யுவி - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
Land Cruiser: வெயிட் ஈஸ் ஓவர்! குறைந்த விலை- லேண்ட் க்ரூஸர் FJ எஸ்யுவி இந்தியாவில் அறிமுகம்- என்ன அம்சங்கள்?
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதப்பு: மீனவர்களுக்கு இழப்பீடு, விசாரிக்க கோரிக்கை!
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget