மேலும் அறிய

Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்

Kia Syros EV Price Range: கியா நிறுவனத்தின் சிறிய எண்ட்ரி லெவல் மின்சார காரான சைரோஸ் மாடலின் ஆரம்ப விலை, 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kia Syros EV: கியா நிறுவனத்தின் சிறிய எண்ட்ரி லெவல் மின்சார காரான சைரோஸ் மாடலின் ஆரம்ப விலை, 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கியா சைரோஸ் EV அறிமுகம் - விலை அறிவிப்பு

இந்திய சந்தைக்காக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட கியா நிறுவனத்தின் இரண்டாவது மின்சார காரான, சைரோஸ் அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை வரம்பானது 13 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 19 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. 42KWh மற்றும் 51.4KWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களில் மொத்தம் 7 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. வரும் ஜுலை 30ம் தேதி இந்த காரானது டீலர்ஷிப் அலுவலகங்களை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா சைரோஸ் EV - விலை விவரங்கள்

பேட்டரி பேக் வேரியண்ட் விலை (எக்ஸ் - ஷோரூம்)
42KWh HTK ரூ.13.49 லட்சம்
42KWh HTK+ ரூ.14.99 லட்சம்
42KWh HTX ரூ.15.99 லட்சம்
51.4KWh HTK+ER ரூ.16.99 லட்சம்
51.4KWh HTX ER ரூ.17.99 லட்சம்
51.4KWh HTX + ER ரூ.19.49 லட்சம்
51.4KWh X-லைன் ER ரூ.19.99 லட்சம்

கியா சைரோஸ் EV - BaaS விவரங்கள்

கியா சைரோஸ் மின்சார காரை பேட்டரி வாடகை (Baas) திட்டம் மூலமும் எளிய விலையில் சொந்தமாக்க முடியும். அதன்படி, ரூ.7.99 லட்சம் என்ற தொடக்க விலையில் காரை நீங்கள் வாங்கலாம். பேட்டரி பயன்பாட்டிற்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.3.3 செலவிட வேண்டி இருக்கும். திட்டமிடப்பட்ட பராமரிப்பு, நீட்டிக்கப்பட்ட கேரண்டி மற்றும் சாலையோர உதவி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் 'மை கன்வீனியன்ஸ் இ-பிளஸ்' தொகுப்பையும் கியா அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நான்கு வருட ப்ரீமியம் பேக்கேஜ் மற்றும் நீட்டிக்கப்பட்ட சாலையோர உதவி வசதியுடன் கூடிய ஐந்து வருட லக்சரி பேக்கேஜ் என இரண்டு திட்டங்கள் கிடைக்கின்றன.

கியா சைரோஸ் EV - பேட்டரி, ரேஞ்ச்

கியா சைரோஸ் மின்சார எடிஷனின் பெரிய பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 526 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யுவி பிரிவில் 500 கிலோ மீட்டர் ரேஞ்சை கடக்கும் முதல் கார் என்ற பெருமை இதற்கு கிடைக்கிறது. அதேநேரம், 42KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 443 கிலோ மீட்டர் ரேஞ்ச் அளிக்குமாம். நிஜ உலக பயன்பாட்டில் இந்த ரேஞ்ச் சற்று குறையலாம். இரண்டு பேட்டரி எடிஷன்களும் முன்புறம் கட்டமைக்கப்பட்ட எலெக்ட்ரிக் மோட்டர் மூலமே, 171PS ஆற்றலை உற்பத்தி செய்கிறது. பெரிய பேட்டரி பேக் கொண்ட சைரோஸ் எடிஷனானது 8.1 விநாடிகளில் பூஜ்ஜியத்திலிருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10 முதல் 80 சதவிகித பேட்டரி நிலையை 39 நிமிடங்களில் எட்டிவிடலாம். 

இதையும் படியுங்கள்: Hyundai Creta: SUV கிங் தான்..! ஆனாலும், க்ரேட்டாவில் இவ்ளோ குறைகள் இருக்கே - மாற்று ஆப்ஷன்கள், யாருக்கு செட்-ஆகாது?

கியா சைரோஸ் EV - சேவை மையங்கள்

சைரோஸ் மின்சார எடிஷனானது ஆட்டோ மோட் மற்றும் i-பெடலுடன் கூடிய பேடில் மூலம் இயக்கப்படும் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்கிங், வெஹைகிள் டூ லோட் திறன், விர்ச்சுவல் இன்ஜின் சவுண்ட் சிஸ்டம், பேட்டரி ஹீட்டிங் மற்றும் ஸ்டீயரிங் மீது கட்டமைக்கப்பட்ட ஷிஃப்ட்-பை-வயர் செலக்டர் உள்ளிட்ட பல EV-சார்ந்த தொழில்நுட்பங்களைப் பெறுகிறது. கியா தனது K-சார்ஜ் சூழலமைப்பையும் MyKia செயலி மற்றும் இணையதளம் மூலம் ஒருங்கிணைத்துள்ளது. இது ஒருங்கிணைந்த கட்டணத் தளம் வழியாக 23 சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்களிடமிருந்து 20,300-க்கும் மேற்பட்ட சார்ஜிங் பாயிண்டுகளுக்கான அணுகலை வழங்குகிறது.  மேலும், இந்நிறுவனம் DC ஃபாஸ்ட் சார்ஜர்கள் பொருத்தப்பட்ட 129-க்கும் மேற்பட்ட டீலர்ஷிப்கள், 275-க்கும் மேற்பட்ட EV-ரெடி ஒர்க்க்ஷாப்கள் மற்றும் 400 நகரங்களில் 900-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர் தொடர்பு மையங்கள் மூலம் உரிமையாளர்களுக்கு சேவைகளை வழங்குகிறது.

கியா சைரோஸ் EV - அம்சங்கள், வசதிகள்

சைரோஸ் மின்சார எடிஷனானது இரட்டை 12.3 இன்ச் திரைகளையும் 5 இன்ச் க்ளைமேட் கன்ட்ரோல் டிஸ்ப்ளேவையும் இணைக்கும் 30 இன்ச் டட்ரிபிள் பனோரமிக் டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 95-க்கும் மேற்பட்ட கனெக்டட் செயல்பாடுகளுடன் கூடிய கியா கனெக்ட் 2.0, ஓவர்-தி-ஏர் சாஃப்ட்வேர் அப்டேட்கள், எட்டு ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங், காற்றோட்ட வசதியுள்ள முன் மற்றும் பின் இருக்கைகள், ஒரு பனோரமிக் சன்ரூஃப், பவர் ட்ரைவர் இருக்கை, 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் 16-லிட்டர் முன் சேமிப்புப் பகுதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.


Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்

கியா சைரோஸ் EV - பாதுகாப்பு அம்சங்கள்

 இதில் இடம்பெற்றுள்ள பாதுகாப்பு உபகரணங்களில், 16 தானியங்கி ஓட்டுநர் உதவி செயல்பாடுகளுடன் கூடிய லெவல் 2 ADAS, ஆறு ஏர்பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், டயர் ப்ரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ISOFIX குழந்தை இருக்கைகள், பின் இருக்கை அலெர்ட், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய மின்னணு பார்க்கிங் ப்ரேக், 360-டிகிரி கேமரா, ப்ளைண்ட் வியூ மானிட்டர் மற்றும் முன், பின் மற்றும் பக்கவாட்டு பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த காரானது மொத்தம் ஒன்பது வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
Indias Cheapest Car: அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
அது எனக்கு தான்..! நாட்டின் மலிவான காரை மீண்டும் களமிறக்கும் டாடா - மின்சார எடிஷன், ரேஞ்ச்
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
CM Vijay: தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
தொகுதி மறுவரையறைக்காக மகளீர் இடஒதுக்கீட்டை தாமதப்படுத்துவதா? - CM விஜய் அடுக்கடுக்கான கேள்விகள்
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
வெறும் 20 ஆயிரம் போதும்; 50 கி.மீ. மைலேஜ்- சுசுகி ஆக்செஸ் 125-ஐ EMI-ல் வாங்குவது எப்படி?
TN Govt: காசு தான பிரச்னை நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
காசு தான பிரச்னை, நானே கொடுக்கிறேன்..! அதிகாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த CM விஜய் - என்ன ஆச்சு?
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
நீட் தேர்வை கொண்டு வந்தது யார்.? பதிலளிக்காமல் எஸ்கேப் ஆன திமுக மாஜி அமைச்சர் காந்தி செல்வன்
Rain Alert : சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை – உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை, காஞ்சிபுரத்திற்கு அலர்ட்! வெளுத்து வாங்கப்போகும் கனமழை - உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
Embed widget