Maruti 1999 EMI: ரூ.2000 போதும்.. 34 கிமீ மைலேஜ் தரும் காரை சொந்தமாக்கலாம் - எந்தெந்த மாடல், எப்படி தெரியுமா?
Maruti 1999 EMI Scheme: இந்தியாவின் ஆட்டோமொபைல் சந்தையில் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான, மாருதியின் எண்ட்ரி லெவல் கார்களை வெறும் ரூ.2000-க்கு சொந்தமாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

Maruti 1999 EMI Scheme: இரண்டாயிரம் ரூபாயை மட்டும் செலுத்துவதன் மூலம் மாருதியின் செலேரியோ, ஆல்டோ மற்றும் வேகன் ஆர் கார் மாடல்களை சொந்தமாக்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
மாருதி சுசூகியின் புதிய நிதி திட்டம்:
நாட்டின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, கார் வாங்க விரும்புவோரை ஊக்குவிக்கும் விதமாக புதிய சிறப்பு நிதி திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. வெவ்வேறு விலைப்பிரிவுகளில் அதிகப்படியான கார் ஆப்ஷன்களை வழங்குவதன் மூலம் பிரபலமான மாருதி, 5 லட்சத்திற்கும் குறைவான விலையிலும் மைலேஜிற்கு பெயர்போன சில கார்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், வெறும் ஆயிரத்து 999 ரூபாயை மட்டுமே செலுத்தி மாருதியின் கார்களை நீங்கள் இப்போது சொந்தமாக்கிக் கொள்ளலாம்.
மலிவு விலையில் எண்ட்ரி லெவல் கார்கள்
மாருதி நிறுவனம் அறிவித்துள்ள சலுகைகளானது எண்ட்ரி லெவல் கார்களை மையப்படுத்தியுள்ளது. நிதி சிக்கல் காரணமாக கார் வாங்கும் திட்டத்தை தாமதப்படுத்தி வரும் நபர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. அதிகரித்து வரும் ஆசை, பாதுகாப்பான, வசதியான போக்குவரத்திற்கான தேவை, ஸ்கூட்டர்கள் அல்லது பைக்குகள் போன்ற இரு சக்கர வாகனங்களிலிருந்து சிறிய காருக்கு மாற விரும்புவோருக்கு இந்தத் திட்டம் பயனளிக்கும்.
எந்தெந்த கார்களுக்கு சலுகை:
மாருதி சுசூகியின் ஆல்டோ, வேகன்ஆர் மற்றும் செலெரியோ ஆகியவை இந்தத் திட்டத்தின் கீழ் சலுகைகளை பெறும் மாடல்களாகும். இந்த கார்கள் ஏற்கனவே எரிபொருள் திறன் மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றதாக அறியப்படுகின்றன.ஜிஎஸ்டி திருத்தத்தின் விளைவாகவும் விலைக்குறைப்பைச் சந்தித்துள்ளன. இந்த சூழலில் குறைந்த மாதாந்திர தவணைத் தொகை திட்டத்துடன், அவை இன்னும் எளிதாக அணுகக்கூடியதாக மாறியுள்ளன. மேற்குறிப்பிடப்பட்ட கார்களின் சிஎன்ஜி எடிஷன்கள், ஒரு கிலோவிற்கு 34 கிமீ வரை மைலேஜ் அளிக்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாருதி நிர்வாகம் சொல்வது என்ன?
மாருதி சுசூகியின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் மூத்த நிர்வாக அதிகாரி, புதிய திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக பேசுகையில், ”முதல் முறையாக கார் வாங்குபவர்கள் மாதத்திற்கு ரூ.1,999 தவணை செலுத்து வகையில், தொடக்க நிலை கார்களை வாங்க அனுமதிக்கும் புதிய திட்டத்தை நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம். இந்தத் திட்டம் குறிப்பாக ஆல்டோ, வேகன்ஆர் மற்றும் செலெரியோ மாடல்களுக்கு ஏற்றது” என குறிப்பிட்டார். இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கார்களின் பயன்பாடு:
இந்தியாவில் 1,000 பேரில் 34 பேர் மட்டுமே கார் வைத்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒப்பீட்டளவில் இந்த எண்ணிக்கை சீனாவில் 185 ஆகவும், அமெரிக்காவில் 832 ஆகவும் உள்ளது. இது இந்தியாவில் இன்னும் பயன்படுத்தப்படாத ஒரு பெரிய சந்தை வெற்றிடம் இருப்பதைக் காட்டுகிறது. மாருதி சுசூகியின் புதிய திட்டம் முதல் முறையாக வாங்குபவர்களுக்கு கார்களை மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் அந்த இடைவெளியை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




















