Mahindra XUV700: வெறும் ரூ.15 லட்சத்தில் 7 சீட்டர் கார்! மஹிந்திராவின் XUV700 டீசல் வாகனம் அறிமுகம்
Mahindra XUV700: மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 டீசல் 7 சீட்டர் வேரியண்டின் தொடக்க விலை, தற்போது 15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Mahindra XUV700: புதிய எண்ட்ரி லெவல் XUV700 டீசல் MX 7-சீட்டர்ன் விலை, முந்தைய AX3 மாறுபாட்டை விட ரூ. 3 லட்சம் குறைவாகும்.
மஹிந்திரா XUV700:
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 இன் ஏழு இருக்கைகள் கொண்ட பதிப்பு, எண்ட்ரி லெவல் MX வேரியண்டில் அறிமுகப்படுத்தியதன் மூலம் அது மிகவும் அணுகக் கூடியதாக மாறியுள்ளது. டீசல் இன்ஜினை கொண்டுள்ள இந்த வாகனத்தின் விலை, 15 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய XUV700 MX 7-சீட்டர் விலையானது, முந்தைய AX3 7-சீட்டரை விட 3 லட்ச ரூபாய் குறைவாகும். மெக்கானிக்கல் மற்றும் சிறப்பம்சங்களை ஆராய்ந்தால், புதிய மூன்று-வரிசை வேரியண்டானது XUV700 MX 5-சீட்டரைப் போலவே உள்ளது.
வாகனத்தின் சிறப்பம்சங்கள்:
2.2 லிட்டர் டீசல் இன்ஜின் கொண்ட XUV700 MX 5-சீட்டர் வாகனத்தின் விலை 14 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாகும். அதனுடன் ஒப்பிடும்போது புதிய 7 சீட்டர் கொண்ட எடிஷனின் விலை வெறும் ரூ.40,000 மட்டுமே அதிகமாகும். MX 7-சீட்டர் அதன் அனைத்து உபகரணங்களையும் ஏற்கனவே உள்ள இரண்டு வரிசை பதிப்புடன் பகிர்ந்து கொள்கிறது.
அதன்படி, ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் கூடிய 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டச்ஸ்கிரீன், நான்கு ஸ்பீக்கர்கள், 7-இன்ச் எம்ஐடி மற்றும் அனலாக் டயல்கள், பல யுஎஸ்பி போர்ட்கள், டில்ட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்டீயரிங், சென்டர் ஆர்ம்ரெஸ்ட், ஸ்டோரேஜுடன் கூடிய சென்டர் ஆர்ம்ரெஸ்ட், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் நான்கு பயணிகள், ஃபாலோ-மீ-ஹோம் முகப்பு விளக்குகள், பவர்ட் ORVMகள் மற்றும் ISOFIX ஆன்கர்ஸ் ஆகியவை புதிய 7 சீட்டரில் இடம்பெற்றுள்ளன.
இன்ஜின் விவரங்கள்:
XUV700 MX 7-சீட்டர் இன்ஜின் அம்சங்களில் முழுமையாக 5 சீட்டர் எடிஷனை போன்றே உள்ளது . இரண்டும் ஒரே குறைந்த-பவர் கொண்ட 156hp, 2.2-லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே கிடைக்கிறது. MX 5-சீட்டர் டிரிம் 2.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கிடைப்பதால், 7-சீட்டரும் இந்த விருப்பத்துடன் வரக்கூடும். புதிய 7 சீட்டரானது எவரெஸ்ட் ஒயிட், மிட்நைட் பிளாக், டேஸ்லிங் ரெட், ரெட் ரேஜ் மற்றும் நேபோலி பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.
விலை ஒப்பீடு:
புதிய எண்ட்ரி லெவல் 7 சீட்டரை அறிமுகம் செய்ததன் மூலம், மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடலின் வரம்பை மிகவும் மலிவாகவும், அதிக பிரீமியமாகவும் மாற்றுகிறது. SUV நிபுணர் சமீபத்தில் XUV700 பிளேஸ் என்ற டப்-ஸ்பெக் மாடலையும் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. மஹிந்திராவின் பெரிய மூன்று வரிசை SUVக்கான ஆரம்ப விலைகள் இப்போது, Tata Safari (ரூ. 16.19 லட்சம்) மற்றும் MG ஹெக்டர் பிளஸின் ஏழு இருக்கைகள் கொண்ட டீசல் எடிஷன் (ரூ. 17 லட்சம்) ஆகியவற்றை விட குறைவாக உள்ளது.