2.56 லட்சம் வரை ஆஃபர்.. Scorpio முதல் XUV700 வரை விலையை தடாலடியாக குறைந்த மஹிந்திரா - இனி எவ்வளவு?
Mahindra Offers: ஜிஎஸ்டி வரி குறைப்பு, தள்ளுபடி காரணமாக மஹிந்திராவின் கார்களின் விலை ரூபாய் 2.56 லட்சம் வரை குறைந்துள்ளது.

இந்தியாவின் மிகவும் முன்னணி கார் நிறுவனம் மஹிந்திரா. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பால் பல்வேறு நிறுவனங்களின் கார்களின் விலை குறைந்துள்ள நிலையில் மஹிந்திரா நிறுவனத்தின் கார் விலையும் குறைந்துள்ளது. செப்டம்பர் மாத தள்ளுபடியும், ஜிஎஸ்டி வரி குறைப்பும் சேர்ந்து மஹிந்திராவின் எந்தெந்த காருக்கு எவ்வளவு விலை? என்பதை கீழே காணலாம்.
Bolero & Bolero Neo - ரூபாய் 2.56 லட்சம்
XUV 3XO - ரூ. 2.46 லட்சம்
Thar - ரூ. 1.55 லட்சம்
Scorpio Classic - ரூ.1.96 லட்சம்
Scorpio N - ரூ.2.15 லட்சம்
Thar Roxx - ரூ.1.53 லட்சம்
XUV700 - ரூ.2.24 லட்சம்
இந்த கார்கள் அனைத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற கார் ஆகும்.
1.Bolero & Bolero Neo:
மஹிந்திரா Bolero மற்றும் Bolero Neo ஆகிய இரு கார்களின் விலை ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் ரூபாய் 1.27 லட்சம் வரை குறைய உள்ளது. மேலும், கூடுதல் தள்ளுபடியாக ரூபாய் 1.29 லட்சம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த Bolero & Bolero Neo காரின் விலை அதன் மொத்த விலையில் இருந்து ரூபாய் 2.56 லட்சம் வரை குறைகிறது.
எஸ்யூவி காரான இந்த இரு கார்களும் 1493 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினை கொண்டது ஆகும். Bolero 16 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. Bolero Neo 17 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.Bolero-வின் தொடக்க விலை ரூபாய் 9.67 லட்சம் ஆகும். Bolero Neo-வின் தொடக்க விலை ரூபாய் 9.81 லட்சம் ஆகும். இது ஷோரூம் விலை ஆகும்.
2. XUV 3XO:
மஹிந்திராவின் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று XUV 3XO ஆகும். இந்த காரின் விலை ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ரூபாய் 1.56 லட்சம் குறைந்துள்ளது. மேலும், கூடுதல் தள்ளுபடியாக ரூபாய் 90 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த காரின் விலை ரூபாய் 2.46 லட்சம் குறைய உள்ளது.
XUV 3XO காரின் தொடக்க விலை ரூபாய் 9.45 லட்சம் ஆகும். 1197 சிசி திறன் கொண்டது ஆகும். 5 சீட்டர்களை கொண்ட இந்த கார் 20 கி.மீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது ஆகும். 42 கி.மீட்டர் டேங்கர் வசதி கொண்டது. ஆட்டோமெட்டிக் கியர் கார் இதுவாகும்.
3. Thar:
மஹிந்திராவின் Thar கார் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பை கொண்டது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 1.35 லட்சம் வரை இந்த காரின் விலை குறைய உள்ளது. கூடுதல் தள்ளுபடியாக ரூபாய் 20 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1.55 லட்சம் இந்த Thar விலை குறைகிறது. இந்த காரின் தொடக்க விலை ரூபாய் 11.50 லட்சம் ( எக்ஸ் ஷோரூம்) ஆகும். 1497 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் எஞ்ஜின் கொண்டது.
4. Scorpio Classic:
மஹிந்திராவின் வெற்றிகரமான படைப்பு Scorpio ஆகும். இதன் Scorpio Classic கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 1.01 லட்சம் விலை குறைகிறது. கூடுதல் தள்ளுபடியாக ரூபாய் 95 ஆயிரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1.96 லட்சம் குறைந்துள்ளது.
டீசலில் ஓடும் இந்த கார் 2184 சிசி திறன் கொண்டது. மேனுவல் கியர் கொண்டது. 7 முதல் 9 சீட்டர்களை கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 16.8 லட்சம் ஆகும். 5 வண்ணங்களில் உள்ளது. பெரிய குடும்பத்தினர் இந்த கார்களை விரும்புவார்கள். டீசலில் ஓடும் திறன் கொண்டது.
5. Scorpio N:
மஹிந்திரா Scorpio N கார் ஜிஎஸ்டி வரி குறைப்பால் ரூபாய் 1.45 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் 71 ஆயிரம் கூடுதல் தள்ளுபடியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த காரின் விலை மொத்தமாக ரூபாய் 2.15 லட்சம் வரை குறைந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் ஓடும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
1997 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினிலும்,2198 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினும் பொருத்தப்பட்ட வாகனமாக இந்த மஹிந்திரா Scorpio N வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை ரூபாய் 17.60 லட்சத்திற்கு ஆன் ரோட் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
6. Thar Roxx:
மஹிந்திராவின் வெற்றிகரமான காராக Thar Roxx உள்ளது. மலைப்பகுதியிலும், சாதாரண சாலைகளிலும் அசத்தலாக இயங்கும் காராக இந்த Thar Roxx உள்ளது. இந்த Thar Roxx ரூபாய் 1.33 லட்சம் விலை குறைந்துள்ளது. அடிப்படையில் கூடுதலாக ரூபாய் 20 ஆயிரம் வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 1.53 லட்சம் வரை இந்த காரின் விலை குறைந்துள்ளது.
Thar Roxx-ன் மொத்த விலை ரூபாய் 16.37 லட்சம் ஆகும். இது 2184 சிசி திறன் கொண்ட டீசல் எஞ்ஜினும், 1997 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினும் கொண்ட வேரியண்ட்களாக இது உள்ளது. ஆட்டோமெட்டிக் மற்றும் மேனுவலில் இந்த கார் உள்ளது. 5 சீட்டர் வசதியும் உள்ளது.
7. XUV700:
எஸ்யூவி கார்களில் அதிகளவு வாடிக்கையாளர்களால் விரும்பப்படும் காராக XUV700 உள்ளது. இந்த காரின் விலை ஜிஎஸ்டி மாற்றத்தால் ரூ.1.43 லட்சம் வரை குறைந்துள்ளது. அடிப்படை தள்ளுபடியாக ரூபாய் 81 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூபாய் 2.24 லட்சம் குறைந்துள்ளது.
XUV700 காரின் விலை ரூபாய் 15.49 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) ஆகும். இந்த கார் 1997 சிசி திறன் கொண்ட எஞ்ஜினை கொண்டது. டீசலில் 2198 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் காரும் உள்ளது. 5, 6 மற்றும் 7 சீட்டர் வசதிகளை கொண்டது.





















