(Source: ECI/ABP News/ABP Majha)
Mahindra Marazzo: மஹிந்திரா திடீர் முடிவு - மராஸ்ஸோ கார் மாடல் உற்பத்தியை கைவிட திட்டம், காரணம் என்ன?
Mahindra Marazzo: மஹிந்திரா நிறுவனம் தனது மராஸ்ஸோ கார் மாடலின் விற்பனையை, இந்திய சந்தையில் நிறுத்த திட்டமிட்டுள்ளது.
Mahindra Marazzo: மராஸ்ஸோ கார் மாடலின் விற்பனை கடும் சரிவை சந்தித்துள்ளதால், உற்பத்தியை நிறுத்த மஹிந்திரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மஹிந்திரா மராஸ்ஸோ கார் மாடல்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய, தனது மராஸ்ஸோ கார் மாடலின் விற்பனையை நிறுத்த மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த மல்டி பேசஞ்சர் வாகனம், எதிர்பார்த்த அளவு வாடிக்கையாளர கவர்ந்து விற்பனையில் அசத்தாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் MPVக்கான உற்பத்தியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மஹிந்திரா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காரணம் என்ன?
பெரும்பாலான மஹிந்திராக்களைப் போலன்றி, மராஸ்ஸோ இந்தியாவில் உருவாக்கப்படவில்லை. இது அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மஹிந்திரா வட அமெரிக்க தொழில்நுட்ப மையத்தால் (MNATC) உருவாக்கப்பட்ட முதல் கார் ஆகும். விற்பனையில் இருந்த முழு காலத்திற்கும், MPV இயந்திர ரீதியாக அல்லது அம்சம் வாரியாக எந்த பெரிய மேம்படுத்தலையும் பெறாததும் விற்பனையை பாதித்தது. AMT பொருத்தப்பட்ட பதிப்பு மற்றும் பெட்ரோல்-இயங்கும் மாடல் பற்றிய பேச்சுக்கள் இருந்தாலும், எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை. MPV முழு வேகத்தில் செயல்படும்போது, மராஸ்ஸோவின் நான்கு சிலிண்டர் இன்ஜினின் சக்தி போதுமானதாக இல்லை எனவும் புகார்கள் எழுந்தன.
மராஸ்ஸோ வாகன விற்பன சரிவு:
மேற்குறிப்பிடப்பட்ட பல்வேறு காரணங்களல் மராஸ்ஸோவின் விற்பனை கடுமையாக சரிந்தது. குறிப்பாக கடந்த ஐந்து மாதங்களில் சராசரியாக 34 யூனிட்களை விற்றது. அதே நேரத்தில் மாருதி மற்றும் கியா சராசரியாக முறையே 14,495 எர்டிகாஸ் மற்றும் 4,412 கேரன்ஸ் MPVகளை விற்பனை செய்துள்ளன. மராஸ்ஸோ தற்போது ரூ. 14.59 லட்சம் தொடங்கி 17 லட்சம் வரையிலான விலையில் விற்பனையாகிறது மற்றும் மூன்று டிரிம்களைக் கொண்டுள்ளது.
MPV சந்தையை இழக்கும் மஹிந்திரா:
மராஸ்ஸோ நிறுத்தம் மஹிந்திராவை SUV-மட்டும் கார் தயாரிப்பாளராக மாற்றும். MPV சந்தை இன்று மொத்த பயணிகள் வாகன சந்தையில் சுமார் 16 சதவீதத்தை கொண்டுள்ளது. Toyota மற்றும் Maruti Suzuki ஆகியவை இந்த பிரிவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. கியா மற்றும் ரெனால்ட்டும் இந்த பிரிவில் ஒரு நல்ல இருப்பைக் கொண்டுள்ளன. இந்நிலையில் தான் விற்பனையில் கடும் சரிவை சந்தித்த மராஸ்ஸோ நிறுத்தப்பட்டு, MPV எனப்படும் மல்டி பேசஞ்சர் வாகன செக்மெண்டில் மஹிந்திரா தனக்கான இடத்தை இழக்கிறது.
மஹிந்திரா மராஸ்ஸோ வாகன விவரங்கள்:
மாருதி எர்டிகா, XL6 மற்றும் கியா கேரன்ஸ் ஆகிய மாடல்களுக்கான போட்டியாளராக, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மராஸ்ஸோ அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.9.99 லட்சம் முதல் 13.90 லட்சம் வரை விலையிலான விலையில், நான்கு டிரிம்கள் மற்றும் 7 & 8-சீட்டர் கட்டமைப்புகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்திய பிராண்ட் ஜூன் 2024 வரை 44,793 மராஸ்ஸோக்களை விற்பனை செய்துள்ளது, இது மாதாந்திர சராசரியாக கிட்டத்தட்ட 640 யூனிட்டுகளுக்கு சமம். கோவிட்-19 லாக்டவுன்களின் போதும் அதற்குப் பின்னரும் மஹிந்திராவின் விற்பனை பின்னடைவை கண்டது. மேலும் MPVயின் டீசல் இன்ஜினை கடுமையான BS6 கட்டம் 2 நெறிமுறைகளுக்கு இணங்க மேம்படுத்தியது கூட விற்பனைக்கு உதவவில்லை. மஹிந்திராவின் MPV ஆனது ஒரே 123hp, 300Nm 1.5-லிட்டர் டீசல் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவலுடன் இணைக்கப்பட்டது. லிட்டருக்கு 17.3 கிமீ மைலேஜ் வழங்குகிறது.