2 லட்சம் வரை தள்ளுபடி.. ஆஃபர்களை அள்ளித்தெளித்த மஹிந்திரா! எந்தெந்த காருக்கு எவ்ளோ?
Mahindra Bolero Offer:முன்னணி கார் நிறுவனமான மஹிந்திரா தனது எக்ஸ்யூவி ரக கார்களுக்கு 2 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. கீழே விரிவாக அதை காணலாம்.

Mahindra Bolero Offer: இந்தியாவின் கார் விற்பனை சந்தையில் கோலோச்சும் நிறுவனமாக மஹிந்திரா உள்ளது. மஹிந்திராவின் பல்வேறு ரக கார்களே தற்போது இந்திய சாலையை ஆக்கிரமித்து வருகின்றனர். ஏராளமான புதிய சலுகைககளையும், ரகங்களையும் அறிமுகப்படு்த்தி வரும் மஹிந்திரா தற்போது தங்களின் பிரத்யே மாடல்களான எஸ்யூவி மாடல்களான எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ, எக்ஸ்யூவி 700, ஸ்கார்பியோ என், எக்ஸ்யூவி400, ஸ்கார்பியோ கிளாசிக் ஆகிய கார்களுக்கு சலுகை அறிவித்துள்ளது.
மஹிந்திரா XUV700:
மஹிந்திராவின் XUV700 மாடல் காருக்கு ரூபாய் 30 ஆயிரம் வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மஹிந்திராவின் AX5 S வேரியண்ட்களுக்கும், AX5 ட்ரிம்ஸ் வேரியண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். இதன் விலை ரூபாய் 20 லட்சம் ஆகும்.
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ:
மஹிந்திரா ஸ்கார்ப்பியோ விலை சுமார் 14 லட்சம் ரூபாய் ஆகும். பேஸ் எஸ் ட்ரிம் வேரியண்ட் புதிய சலுகையின்படி 75 ஆயிரம் குறைந்த விலையில் வாங்கலாம். மஹிந்திரா கிளாசிக் டாப் ஸ்பெக் 11 ட்ரிம் வேரியண்ட் 50 ஆயிரம் விலை குறைத்து விற்கப்பட உள்ளது.
மஹிந்திரா XUV400:
மஹிந்திரா எக்ஸ்யூவி 400 ஈ.எல். ப்ரோ ட்ரிம் வேரியண்ட் அதன் விலையில் இருந்து 2.5 லட்சம் வரை தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இந்த காரின் விலை தொடக்க விலையே ரூபாய் 16 லட்சம் ஆகும்.
மஹிந்திரா XUV 3XO:
மஹிந்திரா XUV 3XO ரக மாடல் ரூபாய் 50 ஆயிரம் விலை குறைத்து விற்கப்படுகிறது. இதே ரகத்தில் AX5 பெட்ரோல் ரக வேரியண்டும், AX5 L வேரியண்டும் 25 ஆயிரம் குறைந்த விலையில் விற்கப்பட உள்ளது. அதேசமயம், பெட்ரோலில் இயங்கும் XUV 3XO variants தொடக்க ரக மாடலுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. இந்த காரின் விலை ரூபாய் 8 லட்சம் ஆகும்.
மஹிந்திரா பொலிரா:
மஹிந்திரா பொலிரா மாடல் காருக்கு ரூபாய் 1 லட்சம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது. பொலிரா ரகத்தின் டாப் -எண்ட் மாடலுக்கு ரூபாய் 92 ஆயிரத்து 700 விலை தள்ளுபடி செய்யப்பட்டள்ளது. அதேசமயம், பி6 மற்றும் பி4 ரக கார்களுக்கு 40 ஆயிரம் விலை குறைக்கப்பட்டுள்ளது. மஹிந்திரா பொலிராவின் விலை சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும்.
மஹிந்திரா மராசோ:
மஹிந்திரா மரோசா ரக மாடல் இந்த மாதம் 2 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்பட்டு விற்கப்படுகிறது. மஹிந்திரா மராசோ விலை ரூபாய் 14 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா அறிவித்துள்ள இந்த தள்ளுபடி எல்லாம் நடப்பு ஜுலை மாத இறுதிவரை மட்டுமே பொருந்தும்.





















