Low Budget 7 Seater: ரூ.5.7 லட்சத்திற்கே 7 சீட்டர், 27 கிமீ மைலேஜ் - குறையாத மவுஸ், விற்பனையில் மாஸ் காட்டும் MVP
Maruti Eeco 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் 7 சீட்டர் கார் மாடலான மாருதியின் ஈகோ குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Maruti Eeco 7 Seater: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மலிவு விலையில் கிடைக்கும் 7 சீட்டர் கார் மாடலான மாருதியின் ஈகோ விற்பனையில் தொடர்ந்து அசத்தி வருகிறது.
குறைந்த விலையில் 7 சீட்டர் கார் மாடல்:
கார் என்பது ஒரு குடும்பத்தின் அத்தியாவசியமான சொத்துகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதிலும் பெரிய குடும்பங்களிடையே, 7 சீட்டர் கார் மாடல் அவசியமான தேவையாக உருவெடுத்துள்ளது. அந்த அம்சங்களில் காரை வாங்குவது என்பது செலவு மிகுந்ததாக இருக்கும் என சிலர் கருதலாம். ஆனால், மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு 7 சீட்டர் கார் மாடலானது, இந்திய சந்தையில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதத்தில் கூட இந்த கார் மாடலின் 12 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. அது மாருதி நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் ஈகோ (Eeco) காராகும்.
ஹெவி டிமேண்டில் மாருதியின் ஈகோ:
இந்திய சந்தையில் கார் விற்பனையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து ஆதிக்கம் செலுத்தி வரும், மாருதியின் வெர்சா கார் மாடல் தான் நாளடைவில் ஈகோ-வாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பின்னர் 2019ம் ஆண்டு மாருதி ஆம்னிக்கு பதிலாக ஈகோ சந்தைப்படுத்தப்பட்டது. மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவே, BS6 மற்றும் சிஎன்ஜி வேரியண்ட்கள் என பல அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் இந்த கார் யூனிட்கள் விற்பனையாகி தொடர்ந்து, தேவையை நீட்டித்து வருகிறது. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் நல்ல வரவேற்பை பெற்று, நிறுவனத்தின் விற்பனையில் பங்காற்றி வருகிறது. மிகவும் அடிப்படையிலான மற்றும் மலிவு விலை மல்டி பேசஞ்சர் வாகனமாக திகழ்கிறது.
மாருதியின் ஈகோ கார் விவரங்கள்:
தற்போது இந்திய சந்தையில் ஈகோ காரானது 5 சீட்டர், 7 சீட்டர், 6 சீட்டர், கார்கோ மற்றும் ஆம்புலன்ஸ் ஆப்ஷன் என மொத்தம் 12 வேரியண்ட்களில் கிடைக்கிறது. சென்னையில் இதன் விலை ரூ.5.7 லட்சத்தில் தொடங்கி ரூ.6.96 லட்சம் வரை நீள்கிறது. 1197 சிசி திறன் கொண்ட 1.2 லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் உடன் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனை கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கும் இந்த காரானது, லிட்டருக்கு சுமார் 19.71 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குவதாக கூறப்படுகிறது. சிஎன்ஜி எடிஷனில் 27 கிலோ மைலேஜ் வழங்குகிறது.
பாதுகாப்பு, இதர அம்சங்கள்:
உட்புறத்தில் பெரிய தொழில்நுட்ப அம்சங்களை எதிர்பார்க்க முடியாது. அதேநேரம், செயல்திறனில் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்காக 6 ஏர்பேக்குகள், EBD உடன் கூடிய ஆண்டி பிரேக்கிஸ் சிஸ்டம், ரிவெர்ஸ் பார்க்கிங் சென்சார்ஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம் ஆகியவை ஸ்டேண்டர்டாக வழங்கப்பட்டுள்ளன. மேலும், சீட் பெல்ட் ரிமைண்டர், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சைல்ட் லாக் டோர்கள், இன்ஜின் மொபிலைஸர் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. சொகுசு மற்றும் பிரீமியம் வாகனங்களில் இருப்பதை போன்ற சஸ்பென்ஷனை எதிர்பார்க்க முடியாது.
விற்பனையில் மாஸ்:
வேன் செக்மெண்டில் விற்பனை செய்யப்படும் ஈகோ கார் மாடலில், கடந்த மே மாதத்தில் மட்டும் 12,327 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் விற்பனையான, 10 ஆயிரத்து 960 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் ஆயிரத்து 367 யூனிட்கள் கூடுதலாக விற்பனையாகியுள்ளன. கடந்த நவம்பர் மாதத்தில் 10,589 யூனிட்கள், டிசம்பரில் 11,678 யூனிட்கள், ஜனவரியில் 11,250 யூனிட்கள், பிப்ரவரியில் 11493 யூனிட்கள், மார்ச் மாதம் 10409 யூனிட்கள் மற்றும் ஏப்ரல் மாதம் 11438 யூனிட்கள் என, 6 மாதங்களில் 66,857 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 6 மாதங்களில் ஒவ்வொரு மாதத்திலும் பதிவான விற்பனையை காட்டிலும், கடந்த மே மாதத்தில் அதிகபட்சமாக மாருதி ஈகோவின் 12 ஆயிரத்து 327 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.






















