மேலும் அறிய

Best MPV Cars: பெரிய குடும்பம், மொத்தமா டிராவல் பண்ணனுமா? உங்களுக்கேற்ற எம்பிவி கார்களின் லிஸ்ட் இதோ..!

Best MPV Cars: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் சிறந்த மல்டி பேசஞ்சர் கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Best MPV Cars:  இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் டாப் 7 மல்டி பேசஞ்சர் கார்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

மாருதி சுசூகி எர்டிகா:

மாருதி சுசூகி எர்டிகா தனிப்பயனாளர்கள் மற்றும் ஃப்ளீட் ஆபரேட்டர்கள் மத்தியில் இந்தியாவில் மிகவும் பிரபலமான MPV ஆகும். இது பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆப்ஷன்களில் கிடைக்கிறது, இது லிட்டருக்கு 20.3 முதல் 26.11 கிமீ மைலேஜ் வழங்குகிறது. 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க், தோராயமாக 923 கிமீ ஓட்டும் வரம்பை வழங்குகிறது. இந்த கார் 1462 cc இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வருகிறது. அடிப்படை மாடலுக்கான மாருதி எர்டிகா விலை ரூ.8.69 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

கியா கேரன்ஸ்:

கியா கேரன்ஸ், ஸ்டைல் ​​மற்றும் நடைமுறைத்தன்மையைப் போற்றும் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான தேர்வாக மாறியுள்ளது. இந்த கார் சில காலத்திற்கு முன்பு ஆண்டின் சிறந்த காராகவும் தேர்வானது. இது பெட்ரோல் மற்றும் டீசலில் வேரியண்ட்களில் கிடைக்கிறது. லிட்டருக்கு 20.11 முதல் 26.11 கிமீ மைலேஜ் வழங்குகிறது. இது 45-லிட்டர் எரிபொருள் தொட்டியைக் கொண்டுள்ளது. மேனுவல், கிளட்ச்லெஸ் மேனுவல் (IMT) மற்றும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வருகிறது. ஏழு பேர் அமரும் வசதியுடன், 1482 cc முதல் 1497 cc வரையிலான இன்ஜின்களால் இயக்கப்படுகிறது. Global NCAP இலிருந்து 3-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. அடிப்படை மாடலின் விலை ரூ 10.52 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா

டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா இந்தியாவில் மிகவும் பிரபலமான பிரீமியம் MPV ஆகும். இது நாட்டில் அதிகம் விற்பனையாகும் டொயோட்டா மாடலாகும். டீசலில் இயங்கும் இந்த கார் 65-லிட்டர் எரிபொருள் டேங்க் திறனுடன், லிட்டருக்கு 16.13 முதல் 23.24 கிமீ வரையிலான மைலேஜை வழங்குகிறது. இது மேனுவல் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது மற்றும் 2393 சிசி இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. விசாலமான 7-சீட்டர் திறனுக்காக பிரபலமான இது, ASEAN NCAP இலிருந்து ஒரு சிறந்த 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. விலை 19.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

டொயோட்டா ரூமியன்

டொயோட்டா ருமியன் நாட்டில் டொயோட்டா சுசூகி கலவையில் உருவான மற்றொரு எடிஷன் ஆகும். இது பிரபலமான மாருதி எர்டிகாவின் டொயோட்டா-பதிப்பாகும். இது பெட்ரோல் மற்றும் CNG ஆகிய இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது லிட்டருக்கு 20.11 முதல் 26.11கிமீ மைலேஜை வழங்குகிறது. இது 45-லிட்டர் எரிபொருள் டேங்க் திறனைக் கொண்டுள்ளது. 1462 சிசி இன்ஜினுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வகைகளில் கிடைக்கிறது. விலை 10.44 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

மாருதி சுஸுகி XL6

எர்டிகாவின் பிரபலம் காரணமாக எர்டிகாவைத் தேர்வு செய்யாத தனிப்பயனாளர்கள், அதற்குப் பதிலாக மாருதி சுஸுகி எக்ஸ்எல்6க்கு செல்கின்றனர். இது தற்போது மாருதியின் விற்பனையில் உள்ள MPVயின் மிகவும் அம்சம் கொண்ட மற்றும் ஸ்டைலான எடிஷனாகும். இது பெட்ரோல் மற்றும் CNG எரிபொருள் ஆப்ஷன்களில் கிடைக்கிறது, 20.27 முதல் 26.32 kmpl மைலேஜை வழங்குகிறது. 1462 சிசி இன்ஜினுடன் 45 லிட்டர் எரிபொருள் டேங்க் திறனைக் கொண்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.11.61 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

ரெனால்ட் ட்ரைபர்:

ரெனால்ட் ட்ரைபர் பெட்ரோலில் இயங்குகிறது, 40-லிட்டர் எரிபொருள் டேங்க் திறனுடன் லிட்டருக்கு 18.2 முதல் 19 கிமீ மைலேஜ் வழங்குகிறது. ட்ரைபர் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 999 cc இன்ஜின் மூலம் சுமார் 760 கிமீ ஓடும் திறன் கொண்டது. ரெனால்ட் ட்ரைபர் ஆரம்ப விலை ரூ. 6.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

மஹிந்திரா மராஸ்ஸோ

மஹிந்திரா மராஸ்ஸோ அறிமுகப்படுத்தப்பட்ட சில வருடங்களிலேயே விற்பனையில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. MPV பிரிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் மாருதி மற்றும் டொயோட்டாவிற்கு இது மஹிந்திராவின் பதிலாக ருந்தது. டீசல் இன்ஜினுடன், 45-லிட்டர் எரிபொருள் டேங்க் திறனுடன் லிட்டருக்கு 16.39 முதல் 16.94 கிமீ மைலேஜை வழங்குகிறது. மஹிந்திரா மராஸ்ஸோவின் விலை ரூ.14.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?EPS Amit Shah:  இபிஎஸ் - அமித்ஷா சந்திப்பு.. மீண்டும் அதிமுக, பாஜக கூட்டணி? தலைவலியில் திமுக கூட்டணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
KKR vs RR: முதல் வெற்றி யாருக்கு? டாசை வென்ற கொல்கத்தா! போட்டியை வெல்லுமா ராஜஸ்தான்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?
"பேச அனுமதி கேட்டா.. ஓடிட்டாரு" ஓம் பிர்லா மீது ராகுல் காந்தி புகார்.. என்னாச்சு?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
Supreme Court: பெண்ணின் மார்பை பிடிப்பது பாலியல் வன்கொடுமை இல்லையா? – நீதிபதியை சாடிய உச்சநீதிமன்றம் – சொன்னது என்ன?
TN Congress New Leader: IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.? ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
IPS-க்கு போட்டியாக IAS.. காங்கிரஸ் தமிழக தலைவர் மாற்றம்.. ராகுலின் சாய்ஸ் யார் தெரியுமா.?
ஏமாந்து போன இளம்பெண்.. WFH வேலை வாங்கி தருவதாக 15 லட்சம் அபேஸ்.. மோசடி கும்பலின் பலே டெக்னிக்
"நல்ல சம்பளம் வாங்கி தரோம்" WFH வேலை வாங்கி தருவதாக மோசடி.. 15 லட்சம் அபேஸ்! 
Embed widget