Tata Sierra: இதெல்லாம் டாடா கார்களில் இதுவரை இருந்ததே இல்லை - சியாராவின் டாப் 5 டக்கரான அம்சங்கள்
Tata Sierra Feat: டாடா மோட்டார்ஸ் கார்களில் இதுவரை இல்லாத வகையில், சியாரா மாடலில் இடம்பெற்றுள்ள 5 புதிய அம்சங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

Tata Sierra Feat: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸின் சியாரா கார் மாடல், நவம்பர் 25ம் தேதி விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
டாடா சியாரா கார் மாடல்
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கான தனது புதிய சியாரா கார் மாடலை, அண்மையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. உள்நாட்டில் மிகவும் போட்டித்தன்மை மிக்க மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இந்த கார் இடம்பெற்றுள்ளது. காரில் உள்ள ஒட்டுமொத்த அம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளானது, நவம்பர் 25ம் தேதி சந்தைப்படுத்தப்படும்போது அறிவிக்கப்பட உள்ளது. இதோடு விலை விவரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வழங்கப்பட்டுள்ள பல அம்சங்கள் இதுவரை டாடாவின் எந்தவொரு காரிலும் இல்லாதவையாகும். அந்த வகையிலான 5 புதிய அம்சங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
டாடா ப்ராண்டிற்கே புதிதான 5 அம்சங்கள்:
1. ட்ரிபிள் ஸ்க்ரீன் செட்-அப்
டாடா சியாராவில் முற்றிலும் புதிய ட்ரிபிள் ஸ்க்ரீன் செட்-அப் டேஷ்போர்ட் லே-அவுட் இடம்பெற்றுள்ளது. அதன்படி, ஓட்டுனருக்கான டிஸ்பிளே, இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், மற்றும் முன் இருக்கை பயணிக்கான டிஸ்பிளே ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் இடம்பெற்றுள்ள காரில் இத்தகைய அம்சம் இடம்பெறுவது இதுவே முதல்முறை, டாடாவின் வேறு எந்த காரிலும் ட்ரிபிள் ஸ்க்ரீன் லே-அவுட் இதுவரை வழங்கப்பட்டது இல்லை. இந்த ஸ்க்ரீன்களானது கனெக்டட் கார் தொழில்நுட்பம், பில்ட்-இன் செயலிகள் மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் ஆட்டோ & ஆப்பிள் கார்பிளே ஆகிய வசதிகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. சவுண்ட் பாருடன் கூடிய ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம்
டாடா சியாராவானது டால்பி அட்மாஸ் உடன் கூடிய 12 ஸ்பீக்கர் ப்ரீமியம் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டத்தை கொண்டுள்ளது. இந்த அமைப்பானது டேஷ்போர்டில் கட்டமைக்கப்பட்டுள்ள சோனிக்ஷாஃப்ட் சவுண்ட்பாருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அபரிவிதமான ஆடியோ அனுபவத்திற்காக சென்டர் ஏசி வெண்டிற்கு கீழே இது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
3. தை சப்போர்ட் & நீட்டிக்கப்படக்கூடிய சன் வைசர்ஸ்
மிட்-சைஸ் எஸ்யுவி செக்மெண்டில் இதுவரை எந்த காரிலும் இல்லாத வகையிலான, முன்புற இருக்கையாளர்களுக்கு அட்ஜெஸ்டபள் அண்டர்-தை (தொடை) சப்போர்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது மேனுவலாக செயல்படுத்துவதாக இருந்தாலுமே, நல்ல வசதி குறிப்பாக உயரமான பயணிகளுக்கு தேவையானதாக உள்ளது. இதனுடன் சேர்த்து, ஒட்டுமொத்த செயல்பாட்டையும் மேம்படுத்தும் விதமாக சன் வைசர்ஸ் நீட்டிகக் கூடியதாக உள்ளன. கீழ் நோக்கிய நீட்டிப்பானது முன்புற விண்ட்ஷீல்டிற்கு பயனுள்ளதாக உள்ளது. அதேநேரம் வெளிப்புற நீட்டிப்பானது பக்கவாட்டு ஜன்னல்களை நன்றாகவே மறைக்கிறது.
4. ஆக்சிலரி டெயில் லேம்ப்ஸ்:
சியரா காரில் ஆக்சிலரி டெயில் லேம்ப் அமைப்பு உள்ளது. இது பூட் மூடி திறந்திருக்கும் போது வேலை செய்கிறது, இரவில் கூடுதல் பாதுகாப்பு மற்றும் வசதியை வழங்குகிறது. இது டாடா மோட்டார்ஸ் ப்ராண்டின் காருக்கு முதன்முதலில் கிடைப்பது மட்டுமின்றி, வெகுஜன சந்தைப் பிரிவில் மிகவும் தனித்துவமான அம்சமாகும்.
5. புதிய 1.5 லிட்டர் tGDi பெட்ரோல் இன்ஜின்
இது புதிய அம்சமாக இல்லாவிட்டாலும், புதிய இன்ஜின் அறிமுகப்படுத்தப்படுவது என்பது எப்போது பாராட்டுதலுக்குரியதாகும். அந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் சியாரா மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது ப்ராண்டின் ஹைபீரியன் பவர்ட்ரெயின் லைன்-அப்பின் ஒரு பகுதியாகும். புதிய இன்ஜினானது 168hp 280Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் என இரண்டு ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுமே எதிர்பார்க்கப்படுகிறது.






















