Overpriced Motorcycles: இதுக்கு இவ்வளவு விலையா? பயனர்களை கடுப்பேற்றிய 5 பைக்குகள் - லிஸ்ட் இதோ..!
Overpriced Motorcycles: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதன் மதிப்பை காட்டிலும், அதிக விலைக்கு விற்கப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
Overpriced Motorcycles: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அதன் மதிப்பை காட்டிலும், அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 5 மோட்டார்சைக்கிள்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஏப்ரிலியா RS660:
ஏப்ரிலியா RS 660 இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 17 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பைக்கில் 99 பிஎச்பி பவரையும், 67 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 659 சிசி பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் ரூ. 11.20 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வரும் கவாஸாகி நிஞ்ஜா இசட்எக்ஸ்-6ஆர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ள சூழலில், அதைவிட சுமார் 6.50 லட்சம் கூடுதல் விலை என்பது, இந்த மோட்டார்சைக்கிளுக்கு அதிக விலையாகவே கருதப்படுகிறது. .
ஏப்ரிலியா டுவோனோ 660:
Aprilia Tuono 660 என்பது இத்தாலிய பிராண்டின் மற்றொரு மாடல் மோட்டார்சைக்கிள் ஆகும். இந்திய சந்தையில் 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நேக்கட் ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் 659 சிசி பேரலல்-ட்வின் இன்ஜினை கொண்டுள்ளது. அதன்மூலம், 94 பிஎச்பி ஆற்றலையும் 61 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 8.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வரும் ட்ரையம்ப் ட்ரைடென்ட் 660 போன்ற மாடல்களுக்கு எதிராக இந்திய சந்தையில் இந்த பைக் போட்டியிடுகிறது. ஆனால், அதைவிட இரண்டு மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
யமஹா ஆர்3:
ஜப்பானிய உற்பத்தியாளரின் ஸ்போர்ட்ஸ் மோட்டார்சைக்கிள் ரூ.4.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. இது 41 பிஎச்பி பவரையும், 29.5 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும் 321 சிசி லிக்விட்-கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இருப்பினும், இந்தியாவில் உள்ள நுகர்வோர், யமஹா ஆர்3 மாடலை காட்டிலும் சக்தி வாய்ந்த இன்ஜினை கொண்ட Aprilia RS457 மாடலை, வெறும் ரூ. 4.10 லட்சத்திற்கு (எக்ஸ்-ஷோரூம்) வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
யமஹா MT03:
Yamaha MT-03 பிராண்டின் MT பிரிவின் மோட்டார் சைக்கிள்களின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இந்த பைக்கில் 41 பிஎச்பி பவர் மற்றும் 29.5 என்எம் பீக் டார்க் உற்பத்தி செய்யும் 321 சிசி லிக்விட்-கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.4.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). இந்த பைக் கேடிஎம் 390 டியூக் போன்ற மாடல்களுக்கு எதிராக போட்டியிடுகிறது. அனால் அவற்றின் விலை வெறும் ரூ 2.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350:
ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350 ரூ. 1.73 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் வருகிறது. இந்த பைக்கில் இடம்பெற்றுள்ள 349 சிசி சிங்கிள்-சிலிண்டர் ஏர்-கூல்ட் இன்ஜின் 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. இருப்பினும், இந்த விலைக்கு நிகரான அம்சங்கள் இந்த பைக்கில் இல்லை என்பதே உண்மை.