Kia Carens Clavis: புதிய வேரியண்ட், 6 சீட்டரை கொண்ட வந்த காரென்ஸ் க்ளாவிஸ் - கியாவின் அட்டகாசமான கார்
Kia Carens Clavis: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் காரென்ஸ் க்ளாவிஸ் கார் மாடலில், புதிய 6 சீட்டர் வேரியண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Kia Carens Clavis: புதிய வேரியண்ட் அறிமுகத்தை தொடர்ந்து, காரென்ஸ் க்ளாவிஸ் மாடல் வேரியண்ட்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
கியா காரென்ஸ் க்ளாவிஸ்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனத்தின் சார்பில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, காரென்ஸ் க்ளாவிஸ் மாடல் ரேஞ்சை விரிவுபடுத்தும் விதமாக, புதிய வேரியண்ட் மற்றும் கூடுதல் சீட்டர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, HTX(O) எனும் கூடுதல் உப்கரணங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோக பல்வேறு வேரியண்ட்களில் 6 சீட்டர் ஆப்ஷன் புதியதாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காரென்ஸ் களாவிஸ் கார் வேரியண்ட்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
HTX(O) வேரியண்ட் விலை, ப்ரீமியம் அம்சங்கள்
காரென்ஸ் க்ளாவிஸின் HTX வேரியண்டிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டுள்ள புதிய HTX(O) வேரியண்டிற்கு, ரூ.19.26 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் கூடுதல் ப்ரீமியம் அம்சங்களாக போஸ் 8 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், Eco, நார்மல் மற்றும் ஸ்போர்ட் போன்ற ட்ரைவ் மோட்களை தேர்வு செய்யும் வசதி, ஸ்மார்ட் கீ ரிமோட் இன்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஆட்டோ ஹோல்ட் ஃபங்சனுடன் கூடிய எலெக்ட்ரிக் பார்கிங் ப்ரேக் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த காரானது 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 4.5 லிட்டர் டர்போசார்ஜ்ட் GDi பெட்ரோல் இன்ஜின் ஆனது, வழக்கமான 7 ஸ்பீட் டூயல் க்ளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறுகிறது. அதன் மூலம், 160PS மற்றும் 253Nm ஆற்றலை உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.
6 சீட்டர் ஆப்ஷன் எந்த வேரியண்டில் கிடைக்கும்?
புதிய வேரியண்ட்கள் சேர்க்கப்பட்டதால் ஆறு இருக்கைகள் கொண்ட அமைப்பு கிடைக்கும் தன்மை என்பது மேம்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 6 சீட்டர் ஆப்ஷனானது HTK+ 1.5L பெட்ரோல் டர்போ DCT மற்றும் 1.5L டீசல் 6AT டிரிம்களிலும், HTK+(O) 1.5L டர்போ பெட்ரோல் DCT எடிஷனிலும் வழங்கப்படுகிறது. HTK+ 6 சீட்டர் டிரிம்கள் முறையே ரூ. 16.28 லட்சம் மற்றும் ரூ. 17.34 லட்சம் விலையில் உள்ளது. HTK+(O) வேரியண்டில் 6 சீட்டருக்கான விலையானது ரூ. 17.05 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காரென்ஸ் க்ளாவிஸ் அம்சங்கள்:
உட்புறத்தில், காரென்ஸ் க்ளாவிஸ் இரட்டை 26.62-இன்ச் திரைகள், 64-வண்ண சுற்றுப்புற விளக்குகள், போஸ் ஆடியோ சிஸ்டம் மற்றும் எளிதான மூன்றாம் வரிசை அணுகலுக்காக ஒன்-டச் எலக்ட்ரிக் டம்பிள் கொண்ட நெகிழ்வான இருக்கை அமைப்பைக் கொண்ட பிரீமியம் கேபினை வழங்குகிறது. பாதுகாப்பை உறுதிப்படுத்த, 20 தன்னாட்சி செயல்பாடுகள், ஆறு ஏர்பேக்குகள், ஹில்-ஸ்டார்ட் அசிஸ்ட், ரியர் ஆக்குபெண்ட் அலெர்ட் மற்றும் ஒரு ரோல்ஓவர் சென்சார் ஆகியவற்றுடன் ADAS லெவல் 2 ஐக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த காரின் ஆன் - ரோட் விலை வரம்பானது, சென்னையில், ரூ.13.72 லட்சத்தில் தொடங்கி ரூ.25.95 லட்சம் வரை நீள்கிறது.





















