Jupiter முதல் Orbiter வரை.. TVS ஸ்கூட்டர்கள் முழு லிஸ்ட் - விலை, மைலேஜ் இதுதான்!
TVS Scooters: டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? என்பதையும், அதன் விலை என்னென்ன? மைலேஜ் எவ்வளவு? என்பதை கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் இரு சக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாக டிவிஎஸ் உள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக ஸ்கூட்டரையே அனைவரும் விரும்புகின்றனர். ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவருக்கும் உகந்ததாக ஸ்கூட்டர் இருப்பதே அதற்கு காரணம்.
இந்தியாவில் ஸ்கூட்டர் தயாரிப்பில் டிவிஎஸ் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. சந்தையில் விற்பனையாகும் டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் என்னென்ன? அதன் விலை ( எக்ஸ் ஷோரூம்) என்னென்ன? என்பதை கீழே விரிவாக காணலாம்.
1. TVS Jupiter - ரூ. 83 ஆயிரத்து 761
2. TVS Jupiter 125 - ரூ. 82 ஆயிரத்து 045
3. TVS Ntorq - ரூ.87 ஆயிரத்து 892
4. TVS Zest 110 - ரூ. 76 ஆயிரத்து 591
5. TVS iQube - ரூ. 84 ஆயிரத்து 999
6. TVS X - ரூ.2.50 லட்சம்
7. TVS Orbiter - ரூ. 1 லட்சம்
இந்த 7 ஸ்கூட்டர்கள்தான் டிவிஎஸ்-ன் தயாரிப்புகளாக இந்தியாவில் தற்போது விற்பனையாகி வருகிறது.
1. TVS Jupiter:
டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பாக இருப்பது இந்த ஜுபிடர் ஆகும். வசீகரமான தோற்றம், நல்ல பிக்கப் காரணமாக இதை பலரும் வாங்குகின்றனர். 113.3 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 106 கிலோ எடை கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 78 ஆயிரத்து 631 ஆகும். 49 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
2. TVS Jupiter 125
சந்தையில் தற்போது அதிகளவு விற்பனையாகி வரும் ஸ்கூட்டர் இந்த டிவிஎஸ் ஜுபிடர் 125 ஆகும். இதன் எஞ்ஜின் திறன் 124. 76 சிசி ஆகும். 6 ஆயிரத்து 500 ஆர்பிஎம் கொண்டது. 108 கிலோ எடை கொண்டது. பல வண்ணங்கள், நல்ல பிக்கப், மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. ப்ளூடூத் வசதியுடன் டேஷ்போர்ட் உள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 82 ஆயிரத்து 045 ஆகும். இது 50 கிமீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
3. TVS Ntorq:
டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்பாேர்ட்ஸ் ரகத்தில் இளைஞர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டது இந்த TVS Ntorq ஆகும். இது 124.8 சிசி திறன் கொண்ட பெட்ரோல் எஞ்ஜினை கொண்டது. 7 ஆயிரம் ஆர்பிஎம் திறன் கொண்டது. 110 கிலோ எடை கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 87 ஆயிரத்து 892 ஆகும். இது 48 கி,மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. நல்ல பிக்கப் திறன் கொண்டது.
4. TVS Zest 110:
ஸ்கூட்டருக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது இந்த TVS Zest 110. இது மிகவும் எடை குறைவாக இருக்கும். இது 103 கிலோ மட்டுமே எடை கொண்டது. 109.77 சிசி திறன் கொண்டது. இது 7 ஆயிரத்து 500 ஆர்பிஎம் திறன் கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 76 ஆயிரத்து 591 ஆகும். இது 45 முதல் 48 கி.மீட்டர் வரை மைலேஜ் தருகிறது.
5. TVS iQube:
டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர் இந்த TVS iQube ஆகும். இது 5.3 கிலோவாட் பேட்டரி கொண்டது ஆகும். மணிக்கு 82 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய ஆற்றல் கொண்டது ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 212 கி.மீட்டர் வரை இதில் பயணிக்கலாம். இதன் தொடக்க விலை ரூபாய் 84 ஆயிரத்து 999 ஆகும்.
6. TVS X:
அதிநவீன வசதியுடன் பைக் மாடலில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த TVS X இ ஸ்கூட்டர். இது 3.8 கிலோவாட் பேட்டரியை கொண்டது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. 105 கி.மீட்டர் வேகம் செல்லக்கூடியது. இதன் விலை ரூ.2.50 லட்சம் ஆகும்.
7. TVS Orbiter:
சந்தையில் அறிமுகமாகி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் மின்சார ஸ்கூட்டர் இந்த TVS Orbiter ஆகும். இது 3.1 கிலோவாட் பேட்டரியை கொண்டது ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கி.மீட்டர் வரை செல்லும் ஆற்றல் கொண்டது. இதன் தொடக்க விலை ரூபாய் 1 லட்சம் ஆகும்.





















