JLR Car Price Cut: அம்மாடியோவ்.. ரூ.30.4 லட்சம் விலை குறைப்பு - ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களுக்கு அதிரடி சலுகை
JLR Car Price Cut: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் மாடல்கள் மீது, ரூ.30.4 லட்சம் வரை விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

JLR Car Price Cut: ஜிஎஸ்டி சீர்திருத்தத்தை தொடர்ந்து இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் மாடல்கள் மீது வரை விலைக் குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் விலை குறைப்பு
ஜிஎஸ்டி சீர் திருத்தத்தை வரவேற்கும் மற்றொரு சொகுசு கார் உற்பத்தி நிறுவனமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் உருவெடுத்துள்ளது. அதன் மூலம் பிரமாண்ட விலைறைப்பு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் உள்ள கார்கள் மீது, பயனாளர்கள் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரையிலான தள்ளுபடியை அணுபவிக்கலாம். வேரியண்ட் அடிப்படையில் இந்த சலுகை விவரங்கள் வேறுபடும். ஜிஎஸ்டி திருத்தம் காரணமாக ப்ரீமியம் எஸ்யுவிக்களான ரேஞ்ச் ரோவர், டிஃபெண்டர் மற்றும் டிஸ்கவரி ஆகியவை விழாக்காலம் நெருங்கி வரும் வேளையில் மிகவும் அளிதில் அணுகக் கூடிய சொகுசு வாகனங்களாக உருவெடுத்துள்ளது.
ரூ.34.4 லட்சம் வரை சலுகை:
புதிய அறிவிப்பால் மிகப்பெரிய சலுகையை பெறக்கூடிய வாகனமாக ரேஞ்ச் ரோவர் திகழ்கிறது. வேரியண்ட் அடிப்படையில் இதற்கான சலுகையான ரூ.4.6 லட்சத்தில் தொடங்கி அதிகபட்சமாக ரூ.30.4 லட்சம் வரை பயனர்கள் பணப்பலனை பெற முடியும். இந்தியாவில் கிடைக்கக் கூடிய மற்றொரு பிரபலமான கார் மாடலான டெஃபெண்டருக்கு, ரூ.7 லட்சம் தொடங்கி ரூ.18.6 லட்சம் வரை விலை குறைகிறது. அதேநேரம், டிஸ்கவரி கார் மாடலுக்கு ரூ.4.5 லட்சம் முதல் ரூ.9.9 லட்சம் வரை விலை குறையும் என ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைப்பின் முழு பலனையும் பொதுமக்களே பெறும் வகையில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த புதிய பலன்களானது வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.
JLR விலை குறைப்பு விவரங்கள்:
| மாடல் | விலை குறைப்பு விவரம் |
| ரேஞ்ச் ரோவர் | ரூ.4.6 லட்சம் முதல் ரூ.30.4 லட்சம் வரை |
| டிஃபெண்டர் | ரூ.7 லட்சம் முதல் ரூ.18.6 லட்சம் வரை |
| டிஸ்கவரி | ரூ.4.5 லட்சம் முதல் ரூ.9.9 லட்சம் வரை |
பிரமாண்ட சலுகைகள்:
போட்டி சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களான ஆடி, பிஎம்டபள்யு மற்றும் மெர்சிடஸ் பென்ஸ் ஆகியவையும் விலை குறைப்பை அறிவித்துள்ளன. ஆனால், ப்ரீமியம் கார் பிரிவில் ஜேல்ஆர் அறிவித்திருக்கும் ரூ.30.4 லட்சம் வரையிலான விலைகுறைப்பே பிரமாண்ட சலுகையாகும். இது அந்நிறுவனத்தின் கார் மாடல்களுக்கான அணுகலை மிகவும் எளிதாக்கியுள்ளது. எஸ்யுவிக்களுக்கான தேவை உள்நாட்டில் ஏற்கனவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜிஎஸ்டி திருத்தத்தால் ஏற்பட்டுள்ள விலை குறைப்பு நடவடிக்கை, அடுத்த காலாண்டில் எஸ்யுவி விற்பனையை மேலும் செழுமைப்படுத்தக்கூடும். விழாக்காலமும் வருவதால், விற்பனையை மேலும் ஊக்குவிக்க டீலர்கள் வழங்கக் கூடிய கூடுதல் தள்ளுபடி மற்றும் நிதி சலுகைகளையும் பயனர்கள் பெறலாம்.
ஜாகுவார் லேண்ட் ரோவர் போர்ட்ஃபோலியோ:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனமானது, மூன்று வகையான கார் மாடல்களை விற்பனை செய்கிறது.
- டிஃபெண்டர் காரானது ஆக்டா, 130, 110 மற்றும் 90 என 4 வேரியண்ட்களில் 13 ட்ரிம்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த காரின் தற்போதைய ஆன் - ரோட் விலை ரூ.1.32 கோடியில் தொடங்கி ரூ.3.24 கோடி வரை நீள்கிறது. இதிலிருந்து 7 லட்சம் முதல் 18.6 லட்சம் வரையில், டிஃபெண்டர் விலை குறைப்பை பெற உள்ளது.
- டிஸ்கவரி காரானது ஸ்டேண்டர்ட் மற்றும் ஸ்போர்ட் என 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. சென்னையில் இதன் ஆன் - ரோட் விலை 85.36 லட்சமாக உள்ளது. இதிலிருந்து ரூ.4.5 லட்சம் முதல் ரூ.9.9 லட்சம் வரை விலை குறைய உள்ளது.
- ரேஞ்ச் ரோவர் காரானது ஸ்டேண்டர்ட், ஸ்போர்ட், வெலார் மற்றும் எவாக்யூ என 4 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த காரின் ஆன் - ரோட் விலையானது ரூ.3 கோடி தொடங்கி ரூ.6.24 கோடி வரை நீள்வதாகக் கூறப்படுகிறது. இதிலிருந்து தான் சுமார் 4.6 லட்சத்திலிருந்து ரூ.30.4 லட்சம் வரை விலை குறைய உள்ளது.





















